Sunday’s Class Skit : Christianity

  பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிற அட்டையுடன் நிற்கிறார்கள். பச்சை 1 : கடவுள் தான் எல்லாத்தையும் படச்சார். இந்த பிரபஞ்சத்தைப் படைத்தது அவர் தான். இந்த சந்திரன், சூரியன், நட்சத்திரம் எல்லாமே அவர் படைத்தது தான். இந்த பூமியை அவர் படைத்து விலங்குகள், பறவைகள், மீன்கள் எல்லாத்தையும் படைச்சார். பாருங்க, பூமி எப்படி பச்சைப் பசேல்ன்னு இருக்கு. கடைசில மனுஷனைப் படைச்சார். ஆதாமையும், ஏவாளையும் படைச்சார். நாம அவரை அன்பு செய்யணுங்கறது மட்டும் தான் அவரோட ஆசையா இருந்துச்சு. அதுக்காக இந்த உலக...
More

செங்கடலாகுமா கருங்கடல்

செங்கடலாகுமா கருங்கடல் கருங்கடல் உலக மேப்பில்  முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கும் கடல். சுற்றுலாத்தலம், கப்பல்களின் வழிப்பாதை, ஆழ்கடல் குழாய்கள், எண்ணெய் வளம், எரிவாயு வளம், போர்க் கப்பல்களின் தளம் இத்யாதி.. இத்யாதி என பல்வேறு முகங்கள் இதற்கு உண்டு. உலகின் நாடுகளெல்லாம் இப்போது கருங்கடலின் மீது இருக்கும் கண்களையெல்லாம் வைத்திருக்கின்றன. விஷயம் அங்கே கிடைக்கும் எண்ணை வளம். ஏற்கனவே கருங்கடலின் அடிப்பாகத்தில் பல நாடுகளையும் இணைக்கும் எரிவாயு, எண்ணைக் குழாய்கள் இருக்கின்றன. ரஷ்யா, இங்கில...
More

Christianity : கர்வம்

  இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்: தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும் – நீதிமொழிகள் 29 : 23   கர்வம் தான் உலகின் முதல் பாவம். ஆதாமும் ஏவாளும் கடவுளின் கட்டளையை மீறி விலக்கப்பட்ட கனியைத் தின்றது இரண்டாவது பாவம் தான் ! கடவுளின் தூதர்களின் தலைவனாக இருந்தவன் லூசிஃபர். அழகிலும் அறிவிலும் நிரம்பியவன். அவனுடைய அழகும், அறிவும் அவனுக்குள்ளே கர்வத்தை மெல்ல மெல்ல துளிரச் செய்தது ! தன்னிலை மறந்தான். தன்னைப் படைத்த கடவுளை மறந்தான். தனது இலக்கு கடவுளைப் போலாகவேண்டும் என கர்வத்தில் திரிந்த...
More

Movie : 12 ANGRY MEN

  “கருப்பு வெள்ளை திரைப்படம், படம் முழுவதும் ஒரே அறையில் எடுத்திருக்கிறார்கள். உனக்கு நிச்சயம் புடிக்கும்” எனும் பீடிகையோடு என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கொடுத்தார் இந்தத் திரைப்படத்தை. ஒரே அறையிலா ? அதுவும் கருப்பு வெள்ளையிலா எப்படி எடுத்திருப்பார்கள் எனும் ஆர்வமே படத்தை உடனே பார்க்க வைத்தது. இந்தத் திரைப்படத்தைப் பார்க்காமல் இத்தனை நாள் தவறவிட்டேனே என நினைக்க வைத்தது இந்த 12 Angry Men எனும் திரைப்படம். வினாடிக்கு மூன்று ஷாட்கள் மாறினால் தான் நல்ல படம் என்றும், லொக்கேஷன...
More

நிலா போரடிக்குது, செவ்வாய் போலாமா ?

ஆயிற்று நீண்ட நெடிய நாற்பது வருடங்கள். கவிஞர்கள் பேனா உதறி உதறி சலித்துப் போன நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்து நடந்து ஜூலை இருபதாம் தியதியுடன் நாற்பது வருடங்கள் முடிந்து விட்டன. நிலாவில் வடை சுடும் பாட்டியைப் போய் பார்த்து வந்த நீல் ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்டிரினும், மைக்கேல் காலின்ஸும் இப்போது தாத்தாக்களாகிவிட்டார்கள். நீல் ஆம்ஸ்ட்ராங்கிற்கும், மைக்கேல் காலிங்ஸ் க்கும் வயது 78. ஆல்ட்ரின் வயது 79 ! உலகையே வியப்புக்கும், சிலிர்ப்புக்கும், சந்தேகத்துக்கும் உள்ளாக்கிய இந்த “கிரேட்டஸ்ட் வாக்” எ...
More

வழியனுப்பல்

  அடுத்தவாரம் அமெரிக்கா செல்லவேண்டும். புராஜக்ட் மேனேஜர் அவசர அவசரமாய் அழைத்துச் சொன்னபோது விஜயால் நம்ப முடியவில்லை. ஏறக்குறைய இல்லை என்றாகியிருந்த வாய்ப்பு அது, திடீரென மீண்டும் உயிர்கொண்டு எழுந்திருக்கிறது. நான்கு மாதங்களுக்கு முன்பே அமெரிக்கன் கவுன்சிலேட்டில் காத்துக் கிடந்து விசா வாங்கியாகிவிட்டது. இதோ அதோ என்று புறப்படும் காலம் வந்ததும் புராஜக்ட் கேன்சலாகிவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். அதன் பின் வாய்ப்பு வரும் வருமென்று காத்திருந்து கடைசியில் இனிமேல் இப்போதைக்கு அமெரிக்காவை...
More

சிறுகதை : சர்ப்ப தோஷம்

அந்த ஆலமரத்தின் விழுதுகள் போல தோன்றும் பல உண்மையில் விழுதுகள் அல்ல, பாம்புகள் !! என்னும் பயம் பாபுவுக்கு சிறுவயதிலிருந்தே ஊட்டப்பட்டிருந்தது. அவனுக்கு மட்டுமல்ல அந்த கிராமம் முழுவதுக்குமே அந்த தகவல் தான் காலம் காலமாக சொல்லப்பட்டு வந்திருந்தது. எனவே அந்த ஆலமரம் அந்த ஒட்டு மொத்த கிராமத்துக்குமே ஒரு பயத்தின் சின்னமாக நிமிர்ந்து நின்றது. ஆலமரத்தின் கீழே இருந்த சிறு சிலையில் நாகம் ஒன்று படமெடுத்து ஆடியது. ஆலமரத்தின் இடது பாகத்தில் சின்னதாய் ஒரு நாகராஜா கோயில். கிராமத்தில் நாக தோஷம் ஏதும் வந்த...
More

குதர்க்கக் கேள்விகள்

  விவிலியப் பாடசாலையில் பயிலும் ஐந்துவயதான மகள் தன் தந்தையைப் பார்த்துக் கேட்டாள். 'அப்பா.... தேவதைகள் தூங்குமா ?'. 'தூங்கும் என்று தான் நினைக்கிறேன்' தந்தை சொன்னார். 'அப்படியானால் அவர்கள் எப்படி இரவு உடை அணிந்து கொள்வார்கள் ? சிறகுகள் தடுக்காதா ?' மகள் கேட்டாள். விவிலியத்தை நோக்கி நீட்டப்படும் பல கேள்விகள் இப்படித்தான் இருக்கின்றன. விவிலியத்தின் மையக்கருத்தாக நிலைவாழ்வு என்பதும், மீட்பு என்பதும் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்க பலர் தங்கள் அறியாமையினால் வறட்டுக் கேள்வ...
More

நம்பிக்கை

நம்பிக்கை. கிறிஸ்தவர்கள் பல வேளைகளில் தடுமாறும் ஒரு விஷயம் நம்பிக்கை. கடவுளிடம் முழுமையாய் நம்பிக்கையை வைப்பதில் தடுமாற்றம். எந்த ஒரு செயலும் சரியாக அமையவேண்டுமென்றால் அதைத் தானே முன்னின்று நடத்தவேண்டும் என்னும் எண்ணம். கடவுளிடம் ஒப்படைப்பதில் வரும் தயக்கம். இந்த நம்பிக்கையின்மை தான் வாழ்வில் நாம் பல வெற்றிகளை அடைவதற்கு இடையூறாகவும், பல தோல்விகளை வெற்றிகள் என்று நாம் கருதிக் கொள்வதற்கு ஏதுவாகவும் அமைந்து விடுகிறது. தொடாதே என்று பலமுறை எச்சரித்தும் தீயை நோக்கி விரலை நீட்டும் மழலையைப் போ...
More

பழக்கம்

பழக்கம்   புதிதாய் வாங்கிய வீடு சாக்கடையின் நாற்றத்தின் சுற்றளவுக்குள் அமைந்து போயிற்று. விக்கிரமாதித்ய வேதாளமாய் காதுகளேறும் கொசுக்களின் ரீங்காரம் இலவச இணைப்பாய். செத்து போன நாய்களுக்கும், இத்யாதிகளுக்கும் அந்த சாக்கடையே சுவிஸ் வங்கி. இந்த வீட்டில் எப்படி வாழ்வது என்ற அங்கலாய்ப்புகள் ஒரு வாரத்தில் நின்று விட்டன. இப்போதெல்லாம் நாற்றமில்லை. வீட்டிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கிறார்கள் இந்த நாற்றத்தில் எப்படி இருக்கிறாய் ? என் வாய் ஆச்சரியமாய் கேட்கி...
More