பாரதி வாழ்த்து

எல்லா கவிதைப் புத்தகங்களிலும் காணக் கிடைக்கிறது ஒரு பாரதி வாழ்த்து ! சிலர் நீ இப்படிச் சொன்னது இப்படியாயிற்றே என்று புலம்ப, சிலர் நீ சொல்லாவிட்டால் சொல்லே இருந்திருக்காது என விளம்ப, இன்னும் சிலர் தப்புத் தப்பாய் புரிந்து கொண்டதற்கான தடையங்களோடு விளக்க, மிச்சமிருப்போர் பாரதியை விட அதிகமாய் யானையைப் பாடி, முடித்துக் கொள்கிறார்கள் பாரதி வாழ்த்தை. இவ்வாறாக என் தொகுப்பிலும் இடம்பெறக் கூடும் இந்த பாரதிப் பாடல்.
More

சன்னலுக்கு வெளியே கவிதைகள்

சன்னலோர ரயில் பயணம் ரம்மியமானது. தண்டவாளத்தில் நீச்சலடித்து முன்னேறும் ரயிலும், பின்னோக்கிப் பாயும் இயற்கையும், அருகிருக்கும் தண்டவாளத்தின் மேலமர்ந்து கூடவே ஓடிவரும் வெளிச்சமும், பொத்தாம் பொதுவாக கையாட்டிச் சிரிக்கும் குதூகலக் குழந்தைகளும், தூரத்துக் குளத்தில் வெட்கத்தை அலசிக் காயப்போடும் கிராமக் குயில்களும், ரயில்வே கேட்டில் பரபரப்புகளுடன் பார்த்திருக்கும் வாகனக் குரல்களும், வெளியே விரிந்திருக்கும் புத்தகம், யதார்த்தத் திரைப்படம்… என சன்னலோர ரயில் பயணம் ரம...
More

சுத்தச் சாலைகள்

  பேருந்திலிருந்தே தூக்கி வீசுகிறாய் மிச்ச உணவுப் பொட்டலத்தை. அவ்வாறே செய்கிறாய் பாதி கடித்த பழத்தையும். உன் மிச்சங்களினால் அழுக்கு மச்சங்களைப் பூசிக் கொள்கின்றன பாதைகள். அழுகியவற்றையும், தேவையற்றவைகளையும் கொட்டும் நீளமான கூவமாக நினைக்கிறாய் சாலையை. சுத்தமாக்க வேண்டாமா ? உன்னால் சீர் படுத்த இயலாவிடில் அலைய விடு ஆறு கோடிக் காக்கைகளை. நல்ல வேளை காக்கைகள் நாகரீகம் கற்றுக் கொள்ளவில்லை மனிதர்களைப் போல.
More

கவிதை : தொலை நகரம்

இன்னும் கொஞ்ச தூரம் தான் கால்களைக் கொஞ்சம் வலுவாக்கு. அடுத்தவன் கனவுகளுக்குள் படுத்துக் கிடக்கும் உன் பார்வைகளின் சோர்வகற்று. அறுவடைக் காலத்தில் நண்டு பிடிப்பதை விட கதிர் அறுப்பதல்லவா அவசியம், வா, இன்னும் கொஞ்ச தூரம் தான். அதோ தெரிகிறதே ஓர் வெளிச்ச பூமி அங்கு தான் செல்லவேண்டும். பரிச்சயமான பிரதேசமாய் தோன்றுகிறதா ? அது வேறெங்கும் இல்லை உன்னுள் தான் இருக்கிறது. நீதான் வெகுதூரம் சென்று விட்டாய்.
More

கவிதை : அவளது கண்ணீரில் காதல்

  பிரியமே, எப்படிச் சாகடிப்பது உன் நினைவுகளின் இராவணத் தலைகளை ? 0 மழை பெய்து முடித்த ஓர் ஈர இரவில், அக்ரகாரத்து ஓரத்தில் அணையாமல் அலையும் அகல்விளக்காய், சுருள் முடிகள் அலைய, வெளிச்சம் விட்டு வெளியேறுகின்றன என் சிந்தனைகள். ரோஜாப் பூவின் கழுத்தை மெல்லமாய் கிள்ளுவதை காணும் போதெல்லாம், சைவக் கிளி ஏன் பூவைக் கொல்கிறது என்பாய், மருதாணித் தளிர்களை உதடுகளில் இட்டாயா என உத்தரவு தருமுன் உதடு வருடுவாய். இப்போதெல்லாம் நான் துளசிச் செடிமீது, கூந்தல் ஈரத்தை சொட்டும்...
More

கவிதை : ஒரு தங்கை தாயாகிறாள்

  ஒரு கொத்துக் குளிர்த்தென்றல் சட்டென்று சறுக்கி வந்து என் உயிர் கொத்திச் சென்றதாய் ஓர் பிரம்மாண்டப் பனிச்சரிவு எனக்குள். நினைவுகளும் நினைவுகளும் நிர்ப்பந்தச் சண்டையிட, என் கண்களுக்குள் வானவில் ஒன்று நிறுத்தாமல் நர்த்தனமிடும் சலங்கைச் சத்தம். என் தங்கை தாயாகப் போகிறாள். ஒரு ஜனனச் சன்னல் இதோ பூமியின் பூபாளத்துக்காய் திறக்கப் போகிறது. உற்சாக அலை ஒன்று உள்ளுக்குள் உருள்கிறது. அது துள்ளும் கடலலையை எல்லாம் உள்ளங்கைக்குள் சுருட்டிக் கொள்ளச் சொல்கிறது. விரலிடுக்கில் விண்மீன...
More

கவிதை : தேவதை தரிசனம்

நான் உன்னைச் சுற்றுகிறேன் நீ ஆண்டவனைச் சுற்றுகிறாய். உன் தரிசனத்துக்காய் நான் ஆலய வாசலிலும் ஆண்டவன் உள்ளேயும் காத்திருக்கிறோம். இருக்குமிடத்திலிருந்தே உனைத் தரிசிக்கும் வரம் ஆண்டவனுக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது.
More

கவிதை : காதல் செய்.

காதல் எப்போதுமே புரியாதவைகளின் புதையல் தான். கேள்விகளே விடைகளாவது இங்கு மட்டும் தான். தெரியவில்லை என்ற பதில் தான் அதிகமாய் இங்கே பரிமாறப்படும். நடக்குமா என்னும் வினாக்களுக்கும், முடியுமா எனும் முகப்பாவனைகளுமே காதலின் வழியெங்கும். ஒவ்வோர் மனசுக்கும் தன் காதல் மட்டுமே தெய்வீகம், மற்றவை எல்லாம் மோகத்தின் வேஷங்கள். பார்க்குமிடமெல்லாம் பிரமிடுகள் எழுந்தாலும், எங்கேனும் முளைக்கும் ஓர் முளையை நம்பியே நடக்கும் இந்த பரிசுத்த ஆடுகள். கவிதைகளின் முதல் தளம் பெரும்பால...
More

படித்தேனா நான் ?

ஒரு அடி ஆழத்துக்கு கலப்பை பிடித்து உழ அண்ணனால் ஆகும், இன்னும் அப்பாவுக்கு தூரத்து பேருந்தின் தலையெழுத்தைப் படிக்க கண்சுருக்க நேர்ந்ததில்லை. அடுப்பில் ஏதோ தீய்ந்து போகிறதென்று கொல்லையில் கொம்பு வெட்டி நிற்கும் அம்மா மூக்கு தப்பாமல் சொல்லும். பக்கத்து வீட்டு பாம்படப் பாட்டி சொல்லும் நல்லதங்காள் கதை மனதில் ஓர் திரைப்படமாய் விரியும். வெள்ளரி வயலின் பிஞ்சுகளைப் பார்த்து வியாதியும், வைத்தியமும் தப்பாமல் சொல்வார் பெரியப்பா. விவசாய நிலங்களும் பருவத்துக்கான உரங்களும்...
More

இரவுக் காட்சிகள்

எப்போதும் பரபரப்பாய் இருக்கும் அந்தத் தெருவை இப்போது தான் இரவில் பார்க்கிறேன். அத்தனை சத்தங்களும் கத்திக் கத்தி தொண்டை வறண்டதில் மூலைக்கு மூலை சுருண்டு கிடக்கின்றன. கடைகளின் வாசல்களில் யாராரோ கோணிக்குள் வெப்பம் இரந்தும் கொசுவுக்குப் பயந்தும் வளைந்து கிடக்கின்றனர். தெருநாய்கள் சில எதையோ துரத்தி எதற்கோ மோப்பம் பிடித்து, ஆங்காங்கே பேரணி நடத்துகின்றன. காலையில் கோழிகளை கொன்று குவித்த அந்த கசாப்புக் கடை மரத்துண்டு, பிசுபிசுப்பு மாறாமல் நினைவுச் சின்னமாய் நிற்கிறது...
More