கவிதை : மழலை ஏக்கங்கள்

தூக்கத்திலும் ஆங்கிலம் உளறும் குழந்தைகளால் நிரம்பி வழிகின்றன பிளே ஸ்கூல்கள். கான்வெண்ட் கதவருகே காரிலிருந்து இறங்குகின்றன சீருடைத் தேவதைகள் காத்திருக்கின்றனர் கார் டிரைவர்கள் வீட்டு மதில்களுக்குள் குழந்தைகளை திரும்பக் கொண்டு சேர்க்க. ஜாமங்கள் கடந்தபின் வந்து சேரும் பெற்றோரை வார இறுதி ஐஸ்கிரீம் பார்களில் தான் நிதானமாய்ப் பார்க்கின்றன குழந்தைகள். ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்களில் கிரெடிட் கார்ட் தேய்த்து பிட்சா தின்று வீடு திரும்புகையில், சீட்பெல்ட் மாட்டி அமர்ந்திருக்க...
More

கவிதை : ஆனந்தத்தின் இருப்பிடம் அறியாமை

உன்னிடமிருக்கும் ஆடைகளின் நிறங்களும் வடிவங்களும் எனக்கு அத்துப்படி. எந்த தினங்களில் நீ எந்த ஆடை அணிவாய் என்பதையும் எந்த ஆடைக்கு எந்த காதணி அணிவாய் என்பதையும், எந்தக் காதணிக்கு எந்தக் காலணி அணிவாய் என்பதையும், துல்லியமாய்ச் சொல்லிய காலங்கள் உண்டு. நீண்ட வருடங்களுக்குப் பின் ஆக்ரோஷிக்கும் ஆனந்தத்துடன் உனக்குத் தொலை பேசுகையில். குழந்தை அழுகிறது பிறகு பேசலாமா என்ற உன் குரலின் ஆடையையும் புரிந்து கொள்ளாமல் போய்விட முடியவில்லை என்னால்.
More

கவிதை : மொட்டுக்கு மலர் வளையம்

கருக் கலைப்பு மனிதாபிமானச் சிதைவுகளில் நடந்தேறும் படு கொலை. குற்றமில்லாத ஓர் வெள்ளைப்புறாவை வேங்கை வேட்டையாடும் வலி. முளை விடும் வரை விதைகளைத் தூவிவிட்டு தலை கொய்வது தகாத அறுவடையில்லையா ? தொப்புள் கொடியில் மழலைக்கு தூக்குத் தண்டனையா ? பன்னீர்க் கடலில் பச்சிளம் பாலகர்க்கு கருணைக்கொலையா ? எந்தத் தராசுத் தட்டில் இதை நியாயப் படுத்துகிறீர்கள் ? அனாதைக் குழந்தைகளோடா ? வறுமையின் விண்ணப்பங்களோடா ? இல்லை அந்தஸ்தின் அலங்காரங்களோடா ? சொல்லுங்கள். உங்களுக்குள் இறங...
More

கவிதை : விரலிடை விழுந்த வெண்ணிலவே

என் விரலிடை விழுந்து விட்ட வெண்ணிலவே. நீண்ட நாட்களாகிறது உனக்குக் கவிதையெழுதி. உன் விரல் தீண்டும் ஆசையில் மோதிரத்தைத் தொட்டுப் பார்த்ததும், கரம் தொடும் ஆசையில் கைரேகை கற்றதும் இன்று நடந்ததாய் இனிக்கிறது. உன் ரேகைகள் மீது என் விரல்களால் இரயிலோட்டும் போதெல்லாம் எனக்குள் ஏதோ ஒரு சின்னக்குயில் சிறகடிக்கும். உன் விரல்கள் கோர்த்து சாலை கடக்கும் போதெல்லாம் சாம்ராஜ்யச் சாதனையாளனாய் மனசுக்குள் மகிழ்வின் பறவை சாமரம் வீசும். நீ உன் இருவிரல்களால் முதன் முதலில் முத்தமிட்டுக் க...
More

ஓணக் கவிதை : ஒரு மலையாளக் காதல்

முற்றத்தில் முன்பெல்லாம் அத்தப்பூ சிறு கொத்துக் கொத்தாய் வட்டத்துக்குள் உட்கார்ந்திருக்கும், ஓணக்கோடி உடுத்தி ஊஞ்ஞாலாடிக்கொண்டு ஓணப் பாட்டு பாடுவது இன்னும் என் ஓர்மையில் உண்டு. பக்கத்து வீட்டுப் பிரேமாவோடு பிரேமம் கொண்டு மலையாளம் கற்று 'ஞான் நின்னே பிறேமிக்குந்நு' என்று மொழியைக் கடித்துத் துப்பிய தருணங்களும், அதைக் கேட்டதும் சந்தன நெற்றியும் வெண்ணிறக் கண்களும் செந்நிறச் சூரியனாகி அவள் வெடித்துத் திட்டிய காலமும், புழையோரத்தில் தோணி நிறைய சோகம் தின்று, அதை விட அ...
More

ஓணம் சிறப்புக் கவிதை : கலாச்சாரக் கதகளி

இதொன்றும் பிள்ளை விளையாட்டில்லை சொரசொரப்புத் தூரிகைகள் முகத்தைச் சுவராக்கி பல மணிநேரம் ஓவியம் வரையும். பிரத்யேக ஒப்பனை ஆடை பிராணனை பிழிந்தெடுக்கப் பிரியப்படும். செண்ட, மத்தாளம், சிஞ்சில என இசைக்கருவிகளின் அருவிக்குள் அரங்கேறும் எங்கள் உதடுவிலகா ஊமை நாடகம். கைகளையும் கண்களையும் விட அதிகமாய் தசைகள் பேச வேண்டும் இங்கே, இலக்கியம் இசை, நடனம், நடிப்பு ஓவியம் என, அத்தனை நவரசக் கலவைகளையும் ஒற்றை சீசாவில் ஒளித்து வைத்த கலைதானே இந்தக் கதகளி. கண்களையும் கைகளையும்...
More

கவிதை : இளமைக் கவலை.

வணக்க முறையாக மூக்கோடு மூக்கு உரசுபவர்கள், முத்தமிட்டுப் புன்னகைப்பவர்கள், கட்டியணைத்து தட்டிக் கொடுப்பவர்கள், இப்படியான ஒரு தேசத்தில் இல்லாமல் போனதைக் குறித்து கவலைப்படுகிறேன். நீ எதிரே வருகையில்.
More

கவிதை : மரணத்துக்கு முந்தைய ஜனனம்

ஒரு ஜனனம் வேண்டும் எனக்கு. நானாய் ஜனிக்கும் ஜனனம். எனக்குள் ஏராளம் சிலந்தி வலைச் சிந்தனைகள், அறுக்க அறுக்க அனுமார் வாலாய், வெட்ட வெட்ட இராவணத் தலைகளாய் சளைக்காமல் முளைக்கின்றன. என் ஜனனத்தின் ஜன்னலோரம் நான் கண்விழித்தபோதே இமை மூடிக் கிடந்தது எனக்கான வாழ்க்கை. என் பால்ய வயதுப் பருவத்தின் அரை டிராயர் அவசர காலங்களில், என் கால்களுக்குக் கீழே ஒட்ட வைக்கப்பட்டிருந்தன எனக்கான பாதைகள். என் கல்லூரி கால நிறச் சாலைகளில் என் சிறகுகளுக்கான சாயம் தனிக் குடுவைகளில் காத்...
More

கவிதை : பிரமிப்பு

அவிழ்ந்து விழ ஆசைப்படும் அரைக்கால் சட்டையை இடக்கையால் பிடித்து நடந்த அந்த பால்ய காலத்தில், ஆஜானுபாகுவாய் தோன்றியது மாமா வீட்டுப் பக்கத்து மாமரம். மிகுந்த ஆழமாய், மிரட்டலாய் தோன்றியது ஆலமர நிழலில் கிடந்த அந்த சர்ப்பக் குளம். தென்னை மரத்துக்கு இத்தனை உயரமா ? பேருந்துகள் இத்தனை பெரிதா ? எங்கள் வயல் தான் எம்மாம் பெரிசு, எங்கள் கிணறு தான் என்ன ஆழம். எல்லா ஆச்சரிய முடிச்சுகளும் என் வாலிபப் பருவத்தில் பட் பட்டென்று விலக சட்டென்று சின்னதாகிப் போனது. முடியாது எ...
More

கவிதை : உனது கைக்குட்டை !

  ஓர் புன்னகைப் போர்களத்தின் அணிவகுப்பாய் நீள்கிறது உனைக் குறித்த நினைவு. அழகின் புதைகுழியில் மிதக்கும் ஒற்றைமலராய் விரிகிறது உன் புன்னகை. அந்தப் புதைகுழிகளையே புதைக்கும் குழிகள் உன் கர்வக் கன்னங்களில் கூடுகட்டிக் குடியிருக்கின்றன. உன் வார்த்தைகளின் வசீகரத்தில் வலையில் சிக்கிய மீன்களாய் இளைய மனங்கள் துடித்து அடங்குகின்றன. உன் விழியோரம் வழியும் கனவுகளில் வெட்கமும் விரவிக் கிடப்பதாய் கண்பொத்தும் இரவுகள் ரகசியம் சொல்கின்றன. உன் முத்தங்களின் அழுத்தத்தி...
More