இலையுதிர்க் காலம்.

இது மரங்கள் உடைகளின் நிறம் மாற்றும் காலம். அவசர அவசரமாய் உடை மாற்றும் காலம். பச்சைய நரம்புகளுக்குள் வர்ணப் பாம்புகள் நெளிய, இலைகள் எல்லாம் வானவில் போர்த்தி சிரிக்கும் வர்ணங்களின் மாதம். காற்றில் சூரியனின் வெப்பம் நகர ஓராயிரம் குளிர்வேகத் தடைகள் உருவாகும். குளிரில் நடுங்கிக் கொண்டே, வெப்பம் இழந்த வெயிலை இழுத்துக் கொண்டே, முகிலிடை ஓடுவான் ஆதவன். இலைகளுக்கு இது குளிர் முத்தக் காலம். வெயில் காலம் மரங்களுக்குச் சீருடை அணிவிக்கிறது, இப்போது மரங்கள் திருவிழா கொ...
More

வெள்ளைக் காகிதம்

ஒவ்வொரு காலையும் உன்னிடம் ஓர் வெள்ளைத் தாளை கிள்ளித் தருகிறது. சில நாட்கள் அதை நீ கண்ணீர் விட்டு ஈரமாக்குகிறாய். சில தினம் குருதி தொட்டு கோரமாக்குகிறாய். என்ன செய்வதென்னும் யோசனையில் வெள்ளையாகவே பலநாள் ஒதுக்கி வைக்கிறாய். அன்பு பூசி அழகாக்குவதும், வம்பு பேசி அழுக்காக்குவதும் உண்டு. கோபத்தின் குப்பைக் கூடையில் அதை நீ கசக்கியும் எறிவதுண்டு. அந்தக் காகிதம் சிறுகதைக்குத் தேறாதென்று நீ அதில் கட்டுரை கூட எழுதாமல் கிழித்தெறியும் தருணங்களும், ஹைக்கூ எழுத...
More

உண்மை பொய்யல்ல.

உண்மை பேசுதல் உன்னதமானது. 'பொய்மையும் வாய்மையிடத்து ' எப்போதேனும் பொய்த்து விடலாம். எத்தனை காலம் தான் நிலவைப் பிடித்து குழந்தைக்குக் கொடுக்கும் கதைகள் செல்லும் ? பனிக்கட்டிக்குள் புதைத்த தீக் கட்டிகள், வீரியம் தீர்ந்தாலும் ஓர் நாள் வெளிவந்தே தீரும். பொய்கள், சலுகைச் சமாதானங்கள். உண்மைகள் தான் மனுக்குலத்தின் மகத்துவம். பொய்கள் பெற்றுத் தரும் வெற்றிகள் முகத்துக்கு சாயம் பூசும், அகத்துக்கோ அவை காயம் வீசும். உண்மை தரும் ஆசனம் உண்மையில் ஆசனமல்ல. அவை இதயத்தை இரணமாக...
More

படித்தேனா நான் ?

ஒரு அடி ஆழத்துக்கு கலப்பை பிடித்து உழ அண்ணனால் ஆகும், இன்னும் அப்பாவுக்கு தூரத்து பேருந்தின் தலையெழுத்தைப் படிக்க கண்சுருக்க நேர்ந்ததில்லை. அடுப்பில் ஏதோ தீய்ந்து போகிறதென்று கொல்லையில் கொம்பு வெட்டி நிற்கும் அம்மா மூக்கு தப்பாமல் சொல்லும். பக்கத்து வீட்டு பாம்படப் பாட்டி சொல்லும் நல்லதங்காள் கதை மனதில் ஓர் திரைப்படமாய் விரியும். வெள்ளரி வயலின் பிஞ்சுகளைப் பார்த்து வியாதியும், வைத்தியமும் தப்பாமல் சொல்வார் பெரியப்பா. விவசாய நிலங்களும் பருவத்துக்கான உரங்களும்...
More

இரவுக் காட்சிகள்

எப்போதும் பரபரப்பாய் இருக்கும் அந்தத் தெருவை இப்போது தான் இரவில் பார்க்கிறேன். அத்தனை சத்தங்களும் கத்திக் கத்தி தொண்டை வறண்டதில் மூலைக்கு மூலை சுருண்டு கிடக்கின்றன. கடைகளின் வாசல்களில் யாராரோ கோணிக்குள் வெப்பம் இரந்தும் கொசுவுக்குப் பயந்தும் வளைந்து கிடக்கின்றனர். தெருநாய்கள் சில எதையோ துரத்தி எதற்கோ மோப்பம் பிடித்து, ஆங்காங்கே பேரணி நடத்துகின்றன. காலையில் கோழிகளை கொன்று குவித்த அந்த கசாப்புக் கடை மரத்துண்டு, பிசுபிசுப்பு மாறாமல் நினைவுச் சின்னமாய் நிற்கிறது...
More

கவிதைக்குள் நான்

ஒரு நீள் மெளனம் ஒரு ஆழ் அமைதி சத்தமிடாத காற்று, ஒரு கவிதை. கவிதையை படிக்கிறேன் மெல்ல மெல்ல சத்தங்கள் வந்து என் செவிப்பறை கொத்துகின்றன. ஆழமாய் ஆழமாய் படிக்கிறேன் சத்தம் அதிகமாகி பின் தேய்ந்து, தேய்ந்து ஆழமான ஓர் அமைதிக்குள்... அதற்குமேல் என் கைகளில் கவிதை இருக்கவில்லை, இருந்ததெல்லாம், ஒரு நீள் மெளனம் ஒரு ஆழ் அமைதி சத்தமிடாத காற்று, நான். (May 2002 )
More

நீ… உனக்கான வரம்.

நண்பனே... உன்னைப் பற்றி நீயேன் உயர்வாய் நினைக்க தயங்குகிறாய் ? மாலுமிகளே சஞ்சலப் பட்டால் சுக்கான் பிடிப்பது சுலபமாயிருக்குமா ? நீ சொல்லுமிடம் செல்ல உன் கால்கள், நீ நீட்டுமிடம் நிற்க உன் கைகள் பின் ஏன் தனியன் என்று தாழிக்குள் தாழ்கிறாய் ? பூக்களின் பெருமையை வண்டுகள் வாசித்துச் சொல்லும், ஆனால் மொட்டை விட்டு வெளியே வருவது பூக்களின் பணியல்லவா ? தானியம் தின்னும் கலை தாய்க் கோழி தரும் ஆரம்பக் கல்வியாகலாம், ஆனாலும் அலகு கொத்துதல் குஞ்சுகளின் கடமையல்லவா ? ஒவ்வோர...
More

முற்றத்தில் முதல் சுவடு

மீன் பிடிக்க குளத்தைக் கலக்குவது தவறில்லைதான், ஆனால் நீ கடலைக் கலக்குவேனென்று பிடிவாதம் பிடிக்கிறாயே ! இலட்சியங்கள் பயிரில் களை பிடுங்கும் பயிற்சி, ஆனால் நீயோ, அலட்சியம் செய்வதையே இலட்சியமாகக் கொள்கிறாயே. தேவதைத் தேடல்களை கொள்ளிவாய் பிசாசுகளின் கோட்டையில் நடத்துகிறாய், கங்கையைக் காணவில்லை என்று பாலையில் படுத்துப் புகார் கொடுக்கிறாய், கடலுக்குள் இறங்கி கானகம் தேடுகிறாய், முத்துக்களை உடைத்து சிப்பிகளைத் தேடுகிறாய்... புரியவில்லை எனக்கு. ஆகாயத்தில் ஆசனம் அமைத்தல்...
More

பூக்கள் பேசுவதில்லையா ?

நான் தான் பூ பேசுகிறேன். மொட்டுக்குள் இருந்தபோதே முட்டி முட்டிப் பேசியவைகள் தான் எல்லாமே. ஆனாலும் உங்கள் திறவாச் செவிகளுக்குள் விழுந்திருக்க வாய்ப்பில்லை. என் விலா எலும்புவரை வண்டுகள் வந்து கடப்பாரை இறக்கிச் செல்லும். வருட வரும் வண்ணத்துப் பூச்சியும் மகரந்தம் திருடித் திரும்பும். என்னை உச்சி மோந்துச் சிரிப்பாள் இல்லத்தரசி, ஆனாலும் அவள் இப்போது மிதித்து நிற்பது நேற்றைய ஒரு மலரைத்தான். எனக்குப் பிடிக்கவில்லை இந்த வாழ்க்கை. தீய்க்குள் புதைக்கப்பட்ட மெழுகு ...
More

மகிழ்ச்சி என்பது ஒருமை

நான் நினைத்திருந்தவை நிலைத்திருக்கவில்லை. மகிழ்கிறேன். யாரேனும் அளிக்கும் அன்பளிப்புப் பொதிகளோ, வாங்கிக் குவித்த வங்கிக் கணக்குகளோ, எனக்குள் நிலையாய் எதையும் நட்டுவிடவில்லை. மழலை மாலைகளில் முந்திரித் தோட்டத்தில் தும்பிக்குப் பின் துரத்தி நடந்த நாட்களிலும், கால்வாய்க் கரைகளில் சகதிக்குள் சிப்பி பொறுக்கிய அரை டிராயர் அழகு நாட்களிலும், பள்ளிக்கூட கூரைகளில் பட்டம் விட்ட பொழுதுகளிலும், கல்லூரிக் கன்னியர் முன் பட்டம் பெற்ற பொழுதுகளிலும், எப்போதும் எனக்குள் இருந்தத...
More