ஏலி ஏலி லெமா சபக்தானி

(திண்ணை - மரத்தடி இணைந்து நடத்திய அறிவியல் புனைக்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற, சுஜாதா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது சிறுகதை) தன்னுடைய கையிலிருந்த வாட்சை மீண்டும் ஒருமுறை பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டார்கள்  அந்த இருவரும். சரியான காலத்துக்குத் தான் வந்திருக்கிறார்கள். இனிமேல் திட்டங்களைச் செயல்படுத்தவேண்டும். எங்கும் எந்தப் பிசிறும் நேரக்கூடாது. ஏதாவது தப்பிதம் நடந்தால் மரணம் தான். தப்பிக்கவே முடியாது' 'நாம் இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பதாம் ஆண்டிலிருந்து வந்ததாக இங்கிருக்கு...
More

அறிவியல் புனைக் கதை : நவீனன்

அசோக் நகர் காவல் நிலையம் : சென்னை மாலை 6 மணி. “யோவ்.. இந்த சைக்கோ எவன்யா ? பொழுது சாஞ்சாலே மனுஷனுக்கு மண்டை காஞ்சு போயிடுது. அவன் மட்டும் என் கைல கிடச்சான்.. மவனே ... “ கோபத்தையெல்லாம் உள்ளுக்குள் எரிமலையாய் வழியவிட்டுக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் கனகராஜ். கடந்த சில மாதங்களாகவே சென்னையில் நள்ளிரவிலோ அதிகாலையிலோ மர்மமாய் வாட்ச்மேன்கள் படுகொலை செய்யப்படுவதும், எரிக்கப்படுவதும் காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாய் இருந்தது. வழக்கமான பார்முலா படி யாரையேனும் பிடித்து இவன் தான் சைக்கோ என சொல்ல...
More

12 . யோசேப்பு

யாக்கோபுக்கு 12 மகன்கள். ‘கனவுகளுக்குப் பலன் சொல்லும் கலையில்’ வல்லவனான யோசேப்பு, அவருடைய பிரியத்துக்குரிய இளைய மகன். சகோதரர்கள் தன்னை வணங்குவார்கள் எனும் கனவைக் காண்கிறான்.  கோபமடைந்த  சகோதரர்கள் அவரை அடிமையாய் விற்று விடுகிறார்கள். எகிப்திய அரசமெய்க்காப்பாளனின் அடிமையாகிறார் இளைஞர் யோசேப்பு. கடவுளின் அருள் யோசேப்புவோடு இருந்தது. அவர் செய்த எல்லா வேலைகளும் சிறப்புற முடிந்தன. எனவே தலைவர் யோசேப்புக்கு தனது வீட்டையும், சொத்துகள் அனைத்தையும் பராமரிக்கும் பொறுப்பை  ஒப்படைத்தார். இளமையான யோசேப்...
More

11. பன்னிரண்டு சகோதரர்கள்

யாக்கோபுக்கு  பன்னிரண்டு ஆண் பிள்ளைகள்.  அவர்களில் கடைக்குட்டிக்கு முந்தைய பையன் யோசேப்பு. அப்பாவுக்கு செல்லப் பிள்ளை. அதனால், யோசேப்பின் சகோதர்களெல்லாம் அவரிடம் கொஞ்சம் பொறாமை கொண்டிருந்தார்கள். ஒரு நாள் யோசேப்புக்கு அவன் தந்தை ஒரு அழகிய வேலைப்பாடுள்ள ஒரு அங்கியைப் பரிசளித்தார். சகோதரர்களின் கோபம் இன்னும் அதிகமானது. யோசேப்புக்கு கனவுகளின் பயன்களைச் சொல்லும் திறமை வாய்த்திருந்தது. ஒரு நாள் அவன் தான் கண்ட கனவைப் பற்றி சகோதரர்களிடம் சொன்னார். “நாம எல்லாரும் வயலில் அறுத்த அரிகளைக் கட்டுகளாகக்...
More

அம்மாவைப் பாக்கணும்

"லேய். ஒன் அம்மா சாவக் கெடக்குதுலே.. என்னதான் இருந்தாலும் பெற்றவ இல்லியா ? ஒரு வாட்டி வந்து பாக்கப்படாதா ? " தங்கசுவாமி மாமாவின் குரலில் கவலை இருந்தது. எதுவுமே பேசாமல் போனை வைத்தான் வசந்தன். பொதுவாகவே மாமாவின் பேச்சை அடுத்த வினாடியே மறந்து விட்டு வேலையைப் பாக்கப் போய்விடுவான். ஆனால் இன்று ஏனோ மனசு ரொம்பவே வலித்தது. ஊருக்கும் தனக்கும் உள்ள ஒரே உறவு தங்கசுவாமி மாமாவின் அவ்வப்போதைய அழைப்பு தான். சில வினாடிகள் நலம் விசாரித்தல், விஷயம் பகிர்தல் அதைத் தாண்டி அந்தப் பேச்சில் எதுவுமே இருக்காது. எப்...
More

பழைய காதலி !

  போச்சுடா. நேத்தும் நைட் ஃபுல்லா தூங்காம இருந்து சுடர் கூட கடலை போட்டியா ? சிவந்து போய் வீங்கியிருந்த சாகரின் கண்களைப் பார்த்துக் கேட்டான் வாசன். அந்த ஐடி அலுவலகத்தில் சாகரும் வாசனும் பக்கத்து பக்கத்து இருக்கைக் காரர்கள். இங்கே மட்டுமல்ல, காலேஜ் காலத்திலிருந்தே அப்படித் தான். பத்து வருஷ நட்பு. மாற்றான் படம் வந்ததுக்கு அப்புறம் இவங்களுக்கு நண்பர்கள் வெச்சிருக்கும் செல்லப் பெயரே அமலன் விமலன் தான். வாசனின் கேள்விக்கு வெட்கம் கலந்த சிரிப்புடன் சாகர் பேசினான். 'ஆமா மச்சி. அவள மறக்க முடியல. அவளும...
More