பால்யங்களின் பகலில்

தம்பிக்கு ஆவடி டேங்க் ஃபேக்டரியில் வயர்களோடு முரண்டு பிடிக்கும் வாழ்க்கை. இன்னொரு தம்பி அம்பத்தூர் தொழிற் பேட்டையில் தெறிக்கும் இரும்பும் பொறிகளோடு கருகிக் கலங்கும் வாழ்க்கை தங்கைகளும் அக்காக்களும் அப்பா, அம்மாவைப் போல ! கையில் பிரம்புடனும் கண்ணில் அன்புடனும் பாடம் சொல்லித் தரும் டீச்சர் வேலை. மிச்சமுள்ள‌ ஒரு அக்காவுக்கு போலீஸ் கணவனோடு வழக்காடும் வழக்கமான வாழ்க்கை. உதறிய கையின் சிதறிய பருக்கைகளாய் இடம் மாறினாலும், ஆண்டுக்கு ஒரு முறை கிராம வீட்டில் சந்தித்த...
More

ஓணக் கவிதை : ஒரு மலையாளக் காதல்

முற்றத்தில் முன்பெல்லாம் அத்தப்பூ சிறு கொத்துக் கொத்தாய் வட்டத்துக்குள் உட்கார்ந்திருக்கும், ஓணக்கோடி உடுத்தி ஊஞ்ஞாலாடிக்கொண்டு ஓணப் பாட்டு பாடுவது இன்னும் என் ஓர்மையில் உண்டு. பக்கத்து வீட்டுப் பிரேமாவோடு பிரேமம் கொண்டு மலையாளம் கற்று 'ஞான் நின்னே பிறேமிக்குந்நு' என்று மொழியைக் கடித்துத் துப்பிய தருணங்களும், அதைக் கேட்டதும் சந்தன நெற்றியும் வெண்ணிறக் கண்களும் செந்நிறச் சூரியனாகி அவள் வெடித்துத் திட்டிய காலமும், புழையோரத்தில் தோணி நிறைய சோகம் தின்று, அதை விட அ...
More

கவிதை : என் இனிய கணினியே.

என் இனிய கணினியே. இவ்வளவு நேரம் தொடர்ச்சியாக நான் யார் முகத்தையும் பார்த்ததில்லை. இவ்வளவு நேரம் யாரோடும் விரல் தீண்டல் தொடர்ந்ததில்லை. அதெப்படி உன்னால் மட்டும் முடிகிறது ? கண்ணுக்குத் தெரியாத கணிதச் சுருக்கங்களின் சுளுக்கெடுக்க ? முகம் மனசின் கண்ணாடி என்பது முகமே கண்ணாடியாகிப் போன உன்னிடம் தானே உண்மையாகிறது ? பொழுதுகள் மாறினாலும் முகங்கள் மாறினாலும் விடைகளை மாற்ற மறுப்பது நீ மட்டும் தானே. நீ மட்டும் இல்லையென்றால் உலகம் ஒருவேளை காகிதக் கட்டுக்களில் புதைக்கப் பட்...
More

கவிதை : பிரமிப்பு

அவிழ்ந்து விழ ஆசைப்படும் அரைக்கால் சட்டையை இடக்கையால் பிடித்து நடந்த அந்த பால்ய காலத்தில், ஆஜானுபாகுவாய் தோன்றியது மாமா வீட்டுப் பக்கத்து மாமரம். மிகுந்த ஆழமாய், மிரட்டலாய் தோன்றியது ஆலமர நிழலில் கிடந்த அந்த சர்ப்பக் குளம். தென்னை மரத்துக்கு இத்தனை உயரமா ? பேருந்துகள் இத்தனை பெரிதா ? எங்கள் வயல் தான் எம்மாம் பெரிசு, எங்கள் கிணறு தான் என்ன ஆழம். எல்லா ஆச்சரிய முடிச்சுகளும் என் வாலிபப் பருவத்தில் பட் பட்டென்று விலக சட்டென்று சின்னதாகிப் போனது. முடியாது எ...
More

விசுவாசம்

கிறிஸ்தவத்தின் வேர்கள் நம்பிக்கையின் மீது நங்கூரமிறக்கியிருக்கிறது. கவலை இருட்டின் கூர் நகங்கள் நகரும் புலப்படாப் பொழுதுகளின் வெளிச்சமும், தோல்வித் துடுப்புகள் இழுத்துச் சென்ற பேரலைப் பொழுதுகளின் இரையும் கரையும். பயங்கள் படுத்துறங்கும் படுக்கையின் நுனிகளில் தூக்கம் தொலைக்கும் இரவுகளின் முடிவுகளும், இறையில் வைக்கும் நிறைவான நம்பிக்கையே. விசுவாசமே பார்வையைப் பரிசளிக்கிறது விசுவாசமே நோய்கள் பாய்களைச் சுருட்டியோட பணிக்கிறது. தனிமனிதன் நம்பிக்கை இழக்கையில் பாத...
More