காதல் என்பது எதுவரை

"அவன் யார் கூட எப்படிப் பழகறான்னு தெரியாது. ஆனா என் கூட ரொம்ப அன்பா இருப்பான். எனக்காக உயிரையே குடுப்பான்" என காதலில் கசிந்துருகும் காதலியர் சொல்வதுண்டு. "மச்சி, அவளோட லவ் சின்சியர்டா. அடுத்தவங்க அவளைப்பற்றி என்ன சொன்னாலும் கவலையில்லை. என்னைப் பொறுத்தவரை அவ அன்பானவடா" என கசிந்துருகும் காதலன் சொல்வதுண்டு. இத்தகைய அதீத நம்பிக்கைகளும், மனப்பான்மைகளும் தான் காதல் தோல்விகளுக்கும், காதலின் வெளிப்பாடாய் விளையும் திருமணத் தோல்விகளுக்கும் காரணம். காதலில் திளைத்திருத்தல் என்பது பூவில் புரளும் வண்டின்...
More

காதலின் சுற்றுப்பாதை

பல்லவி. பூவைத் தீண்டும் தென்றல் போலே என்னைத் தீண்டினாய் - நான் தீயைத் தீண்டும் காலம் வேண்டும் என்றா வேண்டினாய் ? காதல் என்னும் சுவாசக் காற்றை நீதான் ஊற்றினாய் - பின் மூச்சுக் காற்றின் சுற்றும் பாதை ஏனோ மாற்றினாய் சரணம் 1 முத்தம் மட்டும் கன்னம் தொட்டால் காதல் வாழுமா - நான் நித்தம் உன்னில் நெஞ்சம் நட்டேன் போதல் நியாயமா ? சித்தம் கொண்டு என்னைத் தீண்டு பாவம் நானம்மா - ஓர் யுத்தம் கண்ட மண்ணாய் என்மேல் சாபம் ஏனம்மா ? சரணம் 2 வெட்டிச் செல்லும் மின்னல் தன்னில் உன்னைக் க...
More

கவிதை : தொலை நகரம்

இன்னும் கொஞ்ச தூரம் தான் கால்களைக் கொஞ்சம் வலுவாக்கு. அடுத்தவன் கனவுகளுக்குள் படுத்துக் கிடக்கும் உன் பார்வைகளின் சோர்வகற்று. அறுவடைக் காலத்தில் நண்டு பிடிப்பதை விட கதிர் அறுப்பதல்லவா அவசியம், வா, இன்னும் கொஞ்ச தூரம் தான். அதோ தெரிகிறதே ஓர் வெளிச்ச பூமி அங்கு தான் செல்லவேண்டும். பரிச்சயமான பிரதேசமாய் தோன்றுகிறதா ? அது வேறெங்கும் இல்லை உன்னுள் தான் இருக்கிறது. நீதான் வெகுதூரம் சென்று விட்டாய்.
More