கவிதை : விரலிடை விழுந்த வெண்ணிலவே

என் விரலிடை விழுந்து விட்ட வெண்ணிலவே. நீண்ட நாட்களாகிறது உனக்குக் கவிதையெழுதி. உன் விரல் தீண்டும் ஆசையில் மோதிரத்தைத் தொட்டுப் பார்த்ததும், கரம் தொடும் ஆசையில் கைரேகை கற்றதும் இன்று நடந்ததாய் இனிக்கிறது. உன் ரேகைகள் மீது என் விரல்களால் இரயிலோட்டும் போதெல்லாம் எனக்குள் ஏதோ ஒரு சின்னக்குயில் சிறகடிக்கும். உன் விரல்கள் கோர்த்து சாலை கடக்கும் போதெல்லாம் சாம்ராஜ்யச் சாதனையாளனாய் மனசுக்குள் மகிழ்வின் பறவை சாமரம் வீசும். நீ உன் இருவிரல்களால் முதன் முதலில் முத்தமிட்டுக் க...
More

ஓணக் கவிதை : ஒரு மலையாளக் காதல்

முற்றத்தில் முன்பெல்லாம் அத்தப்பூ சிறு கொத்துக் கொத்தாய் வட்டத்துக்குள் உட்கார்ந்திருக்கும், ஓணக்கோடி உடுத்தி ஊஞ்ஞாலாடிக்கொண்டு ஓணப் பாட்டு பாடுவது இன்னும் என் ஓர்மையில் உண்டு. பக்கத்து வீட்டுப் பிரேமாவோடு பிரேமம் கொண்டு மலையாளம் கற்று 'ஞான் நின்னே பிறேமிக்குந்நு' என்று மொழியைக் கடித்துத் துப்பிய தருணங்களும், அதைக் கேட்டதும் சந்தன நெற்றியும் வெண்ணிறக் கண்களும் செந்நிறச் சூரியனாகி அவள் வெடித்துத் திட்டிய காலமும், புழையோரத்தில் தோணி நிறைய சோகம் தின்று, அதை விட அ...
More

கவிதை : ஏனடி ?

 விடியலுக்கு முன் எப்போதோ முளைவிட்ட விதையாய் சிறிதாய் கிளை விட்டாய். நீ வேர் விட்ட வினாடிகளையோ கிளையான கணங்களையோ என்னால் கணித்துத் தான் சொல்ல முடிகிறது. நீயோ பூத்துக் குலுங்கிய பின்னும் முளைக்கவேயில்லை என முரண்டு பிடித்தாய். தூக்கணாங்குருவிகள் குடிவந்த பின்னும் கிளைகளே இல்லையென பிடிவாதம் பிடித்தாய். என் விளக்கங்களை எல்லாம் வாசலிலேயே வழியனுப்பி வைத்தாய். ஆனாலும் அலகுகள் அகலாமல் மரங்கொத்தியாய் இசை கொத்திக் கிடந்தேன் நான். ஓர் நாள் கண்விழித்துப் பார்த்த...
More

கவிதை : இளமைக் கவலை.

வணக்க முறையாக மூக்கோடு மூக்கு உரசுபவர்கள், முத்தமிட்டுப் புன்னகைப்பவர்கள், கட்டியணைத்து தட்டிக் கொடுப்பவர்கள், இப்படியான ஒரு தேசத்தில் இல்லாமல் போனதைக் குறித்து கவலைப்படுகிறேன். நீ எதிரே வருகையில்.
More

கவிதை : காதல் செய்.

காதல் எப்போதுமே புரியாதவைகளின் புதையல் தான். கேள்விகளே விடைகளாவது இங்கு மட்டும் தான். தெரியவில்லை என்ற பதில் தான் அதிகமாய் இங்கே பரிமாறப்படும். நடக்குமா என்னும் வினாக்களுக்கும், முடியுமா எனும் முகப்பாவனைகளுமே காதலின் வழியெங்கும். ஒவ்வோர் மனசுக்கும் தன் காதல் மட்டுமே தெய்வீகம், மற்றவை எல்லாம் மோகத்தின் வேஷங்கள். பார்க்குமிடமெல்லாம் பிரமிடுகள் எழுந்தாலும், எங்கேனும் முளைக்கும் ஓர் முளையை நம்பியே நடக்கும் இந்த பரிசுத்த ஆடுகள். கவிதைகளின் முதல் தளம் பெரும்பால...
More

கவிதை : உனது கைக்குட்டை !

  ஓர் புன்னகைப் போர்களத்தின் அணிவகுப்பாய் நீள்கிறது உனைக் குறித்த நினைவு. அழகின் புதைகுழியில் மிதக்கும் ஒற்றைமலராய் விரிகிறது உன் புன்னகை. அந்தப் புதைகுழிகளையே புதைக்கும் குழிகள் உன் கர்வக் கன்னங்களில் கூடுகட்டிக் குடியிருக்கின்றன. உன் வார்த்தைகளின் வசீகரத்தில் வலையில் சிக்கிய மீன்களாய் இளைய மனங்கள் துடித்து அடங்குகின்றன. உன் விழியோரம் வழியும் கனவுகளில் வெட்கமும் விரவிக் கிடப்பதாய் கண்பொத்தும் இரவுகள் ரகசியம் சொல்கின்றன. உன் முத்தங்களின் அழுத்தத்தி...
More

கவிதை : இது மட்டும்

எழுதி முடித்த மறுவினாடி பழசாகின்றன புள்ளி விவரங்கள். வாசித்து மடித்த மறு வினாடி பழசாகின்றன கடிதங்கள். கைகுலுக்கிக் கடந்து போன அடுத்த கணம் விரல்களிலிருந்து உதிர்கிறது நட்பு. விடைபெற்று வேறோர் விரல் பிடித்து நடை பெற்றவுடன் கசப்பாய் வழிந்தது காதல். கடந்த வினாடியின் நீட்சியில் புது வினாடிகளே முளைக்கின்றன. புதிதென்று சொந்தம் கொள்ள கடந்த வினாடியின் வரலாற்றுப் பரப்பில் ஏதுமேயில்லை. வாசல் காத்திருந்து தோள் தாவும் மழலையின் குதூகலம் தவிர்த்து.
More

கவிதை : அருகிருக்கும் மௌனம்

எத்தனை விலையுயர்ந்த வாழ்த்து அட்டை அனுப்பினாலும் உன் விரலெழுதிய வரிகளைத் தான் திரும்பத் திரும்ம வாசித்துச் சிலிர்க்கும் மனம். ஏதும் எழுதாமல் நீ அனுப்பும் பகட்டு அட்டையை விட நீ ஏதேனும் கிறுக்கி அனுப்பும் தபால் அட்டை மிக அழகு. அழகழகாய் அடுக்கி வைத்து நீ அனுப்பும் பூங்கொத்தை விட உன் சீண்டல் பூக்கவைக்கும் பூக்கள் கொள்ளை அழகு. தொலைபேசியில் ஒலிக்கும் உன் குரலை விட உன்னோடு அமர்ந்திருக்கும் மெளனம் தான் அழகெனக்கு. சீக்கிரம் வந்து விடு தூர தேசத்தில் கரன்சி சேமித்த...
More

கவிதை : இளமைக் காதல்

ஒவ்வொரு முறையும் தொலைபேசி ஒலிக்கும் போது மனதின் மதில்ச்சுவர்களில் ஆக்ரோஷமாய் அடிக்கும் ஆனந்த அலையை நீயில்லை எனும்போது எழும் ஏமாற்றத்தில் உள்ளிளுத்துக் கொள்கிறது இதயக் கடல்... * மெதுவாய் சிவந்த இதழ்களை வருடி உன் தோட்டத்து ரோஜாவுக்கு நீ முத்தம் தரும் போதெல்லாம் எது ரோஜா என்று தெரியாமல் தடுமாறி நிற்கிறது என் மனசு... *   ஒரு சிறுகதை படித்தேன் என்று புத்தகத்தை அணைத்துக் கொண்டு என்னிடம் நீ கதை சொல்லும் போதெல்லாம் உன் இமைகளின் படபடப்பில், விரியும் புருவத்தின...
More

கவிதை : இளமைக் காதல் – 2

புன்னகை செய் தப்பில்லை. ஆனால் நான் சாலை கடக்கும் போது வேண்டாமே, கால்களுக்குக் கட்டளையிட மறந்து மூர்ச்சையாகிறது மூளை. ஒவ்வொரு பாராட்டிலும் கன்னம் சிவக்கும் என் கவிதை, உன் வெட்கத்தின் முன் மட்டும் வெட்கித் தலை குனிக்கிறது. உனைப்பார்க்கும் வரம் கொடு கவிதை படிப்பதை கிடப்பில் போடுகிறேன். உன்னுடன் பேசும் வரம் கொடு இசைப்பேழையை இருட்டில் வைக்கிறேன். உன் விரல் தீண்டும் வரம் கொடு ஓவியம் வரைவதை ஒத்தி வைக்கிறேன். நீயோ, என் தவத்தை ரசிப்பதற்காகவே வரம் தர மறுக்கிறாய். ...
More