பால்யங்களின் பகலில்

தம்பிக்கு ஆவடி டேங்க் ஃபேக்டரியில் வயர்களோடு முரண்டு பிடிக்கும் வாழ்க்கை. இன்னொரு தம்பி அம்பத்தூர் தொழிற் பேட்டையில் தெறிக்கும் இரும்பும் பொறிகளோடு கருகிக் கலங்கும் வாழ்க்கை தங்கைகளும் அக்காக்களும் அப்பா, அம்மாவைப் போல ! கையில் பிரம்புடனும் கண்ணில் அன்புடனும் பாடம் சொல்லித் தரும் டீச்சர் வேலை. மிச்சமுள்ள‌ ஒரு அக்காவுக்கு போலீஸ் கணவனோடு வழக்காடும் வழக்கமான வாழ்க்கை. உதறிய கையின் சிதறிய பருக்கைகளாய் இடம் மாறினாலும், ஆண்டுக்கு ஒரு முறை கிராம வீட்டில் சந்தித்த...
More

இன்னொரு ஜனனம்

இன்னொரு ஜனனம் வேண்டுமெனக்கு. சங்க இலக்கியங்களின் சந்துகளில் சுற்றி வந்ததற்காய் கர்வக் கிரீடம் சூட்டிக் கொண்டேன். யாராரோ எழுதியவற்றை தூசு தட்டித் தான் என் கவிதைகளும் பிரசுரமாயின. எல்லைகள் இல்லை எனும் ஓர் எல்லைக்குள் இருந்து நான் எறிந்த கற்களே அதிகம். முத்துக்களை சொந்தமாக்கியதற்காய் சிப்பியை விட அதிகமாய் சந்தோசப் பட்டுத் தீர்ந்தது என் ஜீவிதம். எனக்கு இன்னோர் ஜனனம் வேண்டும். எனக்கான நடைவண்டியை நானே தேர்ந்தெடுக்கும் ஆரம்பம், எனக்கான பாடையை நானே புனையும் முடி...
More

இன்னொரு நான்

என்னோடு நான் கேட்கும் ஏராளம் கேள்விகள், கடலில் எறிந்த எந்திரக் கல்லாய் ஆழமாய் விழுந்து காணாமல் போய் விடுகின்றன. நான், செய்த பானைகள் எல்லாம் வாய் விாிந்தும், தூர் தொலைந்தும் உபயோகமற்றுப் போகின்றன, களிமண்ணோ வாய் பேசாமல் மெளனமாய். என் இயலாமைகள் என்னைப் பிடித்து தூண்டிலில் பொருத்தி மோகக் கடலில் மூழ்கவிட்டு கரையிலிருந்து ரசிக்கின்றன. என் பேராசைப் பயிர்கள் அயலானின் வேலிகளைப் பார்த்து பெருமூச்சு விடுகின்றன. என் ஒவ்வோர் செயலுக்குப் பின்னும் பெயர் இடப்படாத ஓர் சுயநலம் ...
More

பனிக்கட்டிச் சிறகுகள்.

ஆணவம், அது அழிவிற்கான அழைப்பிதழ். காளான் குடையை பட்டாபிஷேகமாய் பாவிப்போாின் வறட்டுக் கெளரவ வடிகால்கள். அகந்தைக் கடையில் இலவசமாய் வினியோகிக்கப்படும் வோில்லா நிலக்கடலைச் செடிகள். நான் என்னும் தற்பெருமைக் கழுவின் தற்கொலை வாாிசுகளே இந்த ஆணவத்தின் எஜமானர்கள். கடலைப் பார்த்து உப்பளம் சிாிப்பது போல, சூாியக் குடும்பத்துக்கு தீப்பெட்டி ஏற்றுமதி செய்வது போல, அயலானின் மீது ஆணவம் உமிழும். தாழ்மை இதயத்தை பலகையில் அறைந்து, ஆணவம் பல கைகளோடு அவதாரமெடுக்கும். ராவணத் தலைய...
More