மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது

(கவிஞர் கோபால், சேவியர் இருவரும் இணைந்து வாரா வாரம் தொடராய் திண்ணை இணைய இதழில் எழுதிய நெடுங்கவிதை. நன்றி. திண்ணை. 2002 ) பாகம் 1 : சேவியர் 1 சாலை நெடுகிலும் இதய வடிவ பலுனெ¢கள் இறைந்து கிடக்கின்றன. வற்றிப் போகாத வண்ணங்களுடன். சாலை ஓரங்களில் ஒற்றைக்காலுனெ¢றி நிற்கும் மின்கம்பங்களின் இடுப்பிலும், சுவரொட்டிச் சாயம் பூசிய சுவர்களின் முகத்திலும் காதல் வாசனைக் காகிதங்கள். பூக்கள் அழகா நாங்கள் அழகா என்று விரலிடுக்கில் சிவப்பு ரோஜாக்களும், கண்களுக்குள் காதல் வேர்களும் வளர்த்து, ...
More