கல்வியும், கடவுளும்.

    ஒரு மனிதனின் அடிப்படைத் தேவை கல்வி. கல்வியில் வளர்கின்ற சமூகம் பொருளாதார வளர்ச்சியிலும், வாழ்க்கைத் தரத்திலும் முன்னேறும் என்பது கண்கூடு. இந்தியாவில் மொத்த மக்கள் தொகை சுமார் 125 கோடி. அதில் சுமார் 36 கோடி மக்கள் கல்வி வாசனையே இல்லாமல் இருக்கிறார்கள் என்பது தான் அதிர வைக்கும் புள்ளி விவரம். கல்வியறிவற்ற ஒரு சமூகம் எடுப்பார் கைப்பிள்ளையாகவோ, ஏமாற்றுபவர்களின் இலக்காகவோ மாறிவிடும் அபாயம் உண்டு. கல்வியறிவு ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கையை ஊட்டுகிறது. தன்னம்பிக்கையான மனிதன் சம...
More

உயிர்ப்பு தரும் உத்தரவாதம்.

உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய நிகழ்வு இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு தான். இயேசுவின் பிறப்பு உலகிற்கு வியப்பாய் இருந்தது. இயேசுவின் உயிர்ப்பு உலகிற்கு மீட்பாய் மிளிர்ந்தது. உயிர்ப்பு இல்லையெனில் கிறிஸ்தவ நம்பிக்கைகளும், விசுவாசமும் வலுவிழந்து போய்விடும். உயிர்ப்பே நமக்கு அடிப்படை. எனவே தான் அப்போஸ்தலர்களும், ஆதிகால கிறிஸ்தவ தலைவர்களும் தங்கள் போதனைகளை சிலுவையிலிருந்தும், இயேசுவின் உயிர்ப்பிலிருந்து துவங்கினார்கள். இயேசுவின் உயிர்ப்பு நமக்குத் தருகின்ற உத்தரவாதங்கள் நமது ஆன்மீக வாழ்க்கைய...
More

ஏலி ஏலி லெமா சபக்தானி

(திண்ணை - மரத்தடி இணைந்து நடத்திய அறிவியல் புனைக்கதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற, சுஜாதா அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எனது சிறுகதை) தன்னுடைய கையிலிருந்த வாட்சை மீண்டும் ஒருமுறை பார்த்து உறுதிப்படுத்திக் கொண்டார்கள்  அந்த இருவரும். சரியான காலத்துக்குத் தான் வந்திருக்கிறார்கள். இனிமேல் திட்டங்களைச் செயல்படுத்தவேண்டும். எங்கும் எந்தப் பிசிறும் நேரக்கூடாது. ஏதாவது தப்பிதம் நடந்தால் மரணம் தான். தப்பிக்கவே முடியாது' 'நாம் இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பதாம் ஆண்டிலிருந்து வந்ததாக இங்கிருக்கு...
More

கிறிஸ்தவ வரலாறு 16 : – இயேசுவின் அன்னை வணக்கத்துக்குரியவரா ?

  கத்தோலிக்கத் திருச்சபையினருக்கும் பிரிந்து போன சபையினருக்குமிடையே உள்ள மிகப்பெரிய விவாதப் பொருட்களில் ஒன்று அன்னை மரியாள் வணக்கத்துக்குரியவரா இல்லையா என்பது. கத்தோலிக்கர்கள் இயேசுவின் தாயை வணக்கத்துக்குரியவராகவும், கடவுளிடமிருந்து வரங்களைப் பெற்றுத் தரும் இரு இடை நிலைவாதியாகவும் பார்க்கிறார்கள். பிரிந்து போன சபையினர் அதை தீவிரமாக எதிர்க்கிறார்கள். இருவருமே தங்கள் பக்க நியாயங்களை வரிசையாய் அடுக்கி தத்தம் குழு மனப்பான்மையை வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். புரட்டஸ்டண்ட் பிரிவினர்...
More

கிறிஸ்தவ வரலாறு :15 – புராட்டஸ்டண்ட் சபையின் துவக்கம்

  கி.பி 1483ம் ஆண்டு பிறந்த மார்ட்டின் லூத்தர் என்பவரே புராட்டஸ்டண்ட் சபையின் துவக்கத்துக்கு வித்திட்டவர். நல்ல இறை சிந்தனையும், பக்தியும் உடைய லூத்தர் முதலில் நம்பியது துறவறத்தையே. சில காலம் துறவறத்தில் இணைந்து துறவியாகவே வாழ்க்கை நடத்தினார் இவர். தன்னுடைய உயிர்நண்பனின் திடீர் மரணம் தந்த பாதிப்பு இவரை மரணத்தின் மீது பயம் கொள்ள வைத்தது. மரணத்தின் பயத்திலிருந்து எப்படித் தப்புவது ? மரணத்துக்குப் பின் என்ன நிகழும் என்பவை போன்ற சிந்தனைகள் அவரை வாட்டின. எனவே அகஸ்டீனியரின் மடத்தில் சென்று தன்...
More

14. கிறிஸ்தவத்தில் நடந்த மாபெரும் கிளர்ச்சி

  கிறிஸ்தவ மதத்தில் ரோமன் கத்தோலிக்கர்களுக்கு எதிராகவும், போப்பிற்கு எதிராகவும் நடந்த கிளர்ச்சியே திருச்சபையின் மிகப்பெரிய கிளர்ச்சி எனலாம். போப்பின் அதிகாரத்துக்குக் கட்டுப்பட விருப்பமில்லாதவர்களும், தங்களை தாங்களே ஆளவேண்டும் என்னும் கொள்கை கொண்டவர்களும், தங்கள் பணம் திருச்சபையின் தலைமை இடத்துக்குச் செல்வதை விரும்பாதவர்களாலும் இந்த கிளர்ச்சி துவங்கப்பட்டது. ஏற்கனவே கிறிஸ்தவத்தில் பல குழுக்களும், துறவறங்களும், தனியுறவுச் சபைகளும் ஆங்காங்கே தோன்றி வளர்ந்தாலும் அவை பெரும்பாலும் கத்தோலிக்க ...
More

கிறிஸ்தவ வரலாறு :13. சிலுவைப் போர்கள்

  பாலஸ்தீனத்தை இஸ்லாமியர்களின் கைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்னும் உந்துதலில் ஏற்பட்டவை தான் சிலுவைப் போர்கள். இப்போர்கள் திருச்சபையின் தூண்டுதலாலும், அவர்களுடைய ஈடுபாட்டினாலும் நிகழ்ந்தவையே. எருசலேமிற்கு கிறிஸ்தவர்கள் புனிதப் பயணம் செய்வது வழக்கமாக இருந்தது. கிபி 1000 வது ஆண்டில் கிறிஸ்து மீண்டும் பூமிக்கு வருவார். அவர் மக்களை தீர்ப்பிடுவார் என்று மக்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள். எனவே எருசலேமிற்குச் செல்லும் மக்களின் கூட்டம் அந்த காலகட்டத்தில் மிகவும் அதிகரித்திருந்தது. அப்படி ச...
More

கிறிஸ்தவ வரலாறு : 12 – கிழக்கு சபையும், மேற்கு சபையும் பிரிகிறது

  மன்னன் டியோகிளேசியன் கிபி 286ல் ரோம் அரசை இரண்டாகப் பிரித்து மேற்கில் ரோம் நகரின் தலைமையிலும், கிழக்கே கான்ஸ்டாண்டிநோபிளிலுமாக இரண்டு பிரிவை ஏற்படுத்தினார். உலகின் பல நாடுகளிலும் பத்து நூற்றாண்டுகளாக கிறிஸ்தவர்கள் புகுந்து தங்கள் இருப்பை நிலை நாட்டினர். எனினும் எல்லா கிறிஸ்தவர்களும் ரோம் நகர போப்பின் தலைமையின் கீழ் ஒன்றிணைந்தனர். கான்ஸ்டாண்டிநோபிள் தனிப் பிரிவாக இருந்தாலும் அங்குள்ள தலைமைக்கு உலகக் கிறிஸ்தவர்களிடம் வரவேற்பு இல்லை. இது 1054ல் இரண்டு சபைகளுக்குமிடையே பெரும் பிளவு ஏ...
More

கிறிஸ்தவ வரலாறு : 10 – கிறிஸ்தவத்தில் துறவறம்

  நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவத்தில் ஆரம்பமான துறவறம் இடைக்காலத் திருச்சபை நாட்களில் வளர ஆரம்பித்தது. கற்பு, சுய கட்டுப்பாடு, தன்னை ஒறுத்தல், உலகிய இன்பங்களை விட்டு ஒதுங்கி இருத்தல், வாழ்வில் தூய்மை போன்றவை துறவறத்தில் மிக முக்கியமாகப் போதிக்கப்பட்டன. 'ஒருவன் என்னைப் பின்பற்ற வேண்டுமெனில் தன்னையே வெறுத்து தன் சிலுவையைச் சுமந்து கொண்டு என்னைப் பின்பற்ற வேண்டும்' என்பது இயேசுவின் அழைப்புகளில் ஒன்று. எனவே கிறிஸ்துவைப் பின் பற்றுபவர்கள் தன்னை வெறுக்க வேண்டும் எனும் சிந்தனை நான்காம் நூற்...
More

கிறிஸ்தவ வரலாறு : 9 – போப்பின் அதிகாரம்

கி.பி 1073 முதல் 1216 வரையுள்ள காலகட்டம் போப்பின் அதிகாரத்தின் உச்சகட்டம் என்று வர்ணிக்கப்படுகிறது. ஏழாம் கிரிகோரி எனும் போப் வந்து ஏராளமான மாறுதல்களைத் திருச்சபையில் செய்தார். திருச்சபையில் இருந்த சீர்கேடுகளை ஒழிப்பதற்கு மிகவும் கடினமாக பாடுபட்டார். குறுக்கு வழியில் இடம் பிடித்தல், தலைமைப் பதவிக்கு போராட்டங்கள் போன்றவற்றை இவர் வெறுத்தார். இவர் காலம் ஒரு களையெடுப்புக் காலம் என்று கூறலாம். குருத்துவ நிலையில் இருப்பவர்கள் திருமணம் செய்யக் கூடாது என்று முதலாம் மகா கிரிகோரி சொன்னதை இவர் அழுத்தம் ...
More