இயேசு சொன்ன உவமைகள் 28 : காணமல் போன திராக்மா

லூக்கா 15: 8 முதல் 10 வரை பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணாமற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, ‘என்னோடு மகிழுங்கள், ஏனெனில் காணாமற் போன திராக்மாவைக் கண்டுபிடித்துவிட்டேன்’ என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூதரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன். ‍ இயேசு ஒருமுறை தொடர்ச்சியாக மூன்று உவமைகளை...
More

இயேசு சொன்ன உவமைகள் : 26 செம்மரியா, வெள்ளாடா !

“வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர். ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வெவ்வேறாகப் பிரித்து நிறுத்துவார். பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, ‘என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்...
More

Christianity : Sunday’s School Skit

பின் குரல் :   ஏழு கடல், ஏழு மலை தாண்டிய ஒரு நாட்டில் ஒரு மன்னர் இருந்தார். ரொம்ப அன்பான மன்னர். தன்னுடைய மக்களை மனதார நேசித்த மன்னர் அவர். தனது அரண்மனையில் உள்ள வேலைக்காரர்கள் எல்லோரையும் அவர் மிகுந்த அன்புடன் நடத்தினார். அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை வைத்து அவர் பாகுபாடு காட்டவேயில்லை. அவருடைய பார்வையில் எல்லோரும் சமம். நபர் 1 : நான் கட்டுமானப் பணி செய்வேன். அரண்மனையை மாற்றி அமைக்கிறது, எக்ஸ்ட்ரா ரூம்ஸ் கட்டறது எல்லாம் என்னோட வேலை. நபர் 2 : கட்டி வெச்சுட்டா போதுமா...
More

Christianity : Sunday’s School மீட்பின் பயணம்

    அவையோருக்கு அன்பின் வணக்கம். உங்களுக்கெல்லாம் தெரிஞ்ச ஒரு கதையை மறுபடியும் ஒருதடவை உங்களுக்கெல்லாம் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன். உலக அதிசயத்துல ஒண்ணு தான் எகிப்திய பிரமிடு. ஆனா அதைவிடப் பெரிய அதிசயத்தைக் கடவுள் எகிப்தில் நடத்தினார். இது நடந்தப்போ பார்வோன் மன்னன் எகிப்தோட அரசரா இருந்தார். இஸ்ரயேல் மக்கள் அந்த நாட்டில் சுமார் ஆறு இலட்சம் பேர் இருந்தார்கள். எகிப்தியர்கள் இவர்களை அடிமைகளாக நடத்தினார்கள். பெரிய பெரிய கட்டிடங்கள் கட்றது, நகர்களை உருவாக்கறது எல்லாம் தான் இவ...
More

Sunday School : Jacob’s Dream

எல்லோருக்கும் அன்பின் வணக்கம். எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு கதையை நானும் ஒருதடவை உங்களுக்குச் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன். விசுவாசத்தின் தந்தை யாருன்னு கேட்டா ஆபிரகாம்ன்னு டக்குன்னு சொல்லுவீங்க. அவரோட பையன் தான் ஈசாக். ஈராக் ரபேக்காவை கல்யாணம் பண்ணிகிட்டாரு. அவருக்கு இரண்டு பசங்க. மூத்தவன் ஏசா, இளையவன் யாக்கோபு. யாக்கோபு அம்மாவோட வயிற்றில இருக்கும்போதே அண்ணன் கூட வம்பு பண்ணிட்டிருந்தான். பிறக்கும்போ, அவனோட காலைப் புடிச்சிட்டே பொறந்தான். வளர்ந்தப்போவும் இரண்டு பேருக்கும் நல்ல ஒற்றுமை இல்...
More

Christianity : Sunday’s School Article

பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்   முன்னுரை :   சேமிப்பு மிக முக்கியமானது என்பதை நமக்கு எல்லோரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். சிலர் வங்கிகளில் சேமிக்கின்றனர். சிலர் நிலங்களாக சேமிக்கின்றனர், சிலர் தங்கம் வெள்ளி பிளாட்டினம் என உலோகங்கள் மூலமாக செல்வம் சேர்க்கின்றனர். கடவுள் நம்மிடம் "பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்" என்கிறார். அது என்ன ? எப்படி ? ஏன் என்பதைக் குறித்து பார்ப்போம்.   பொருளுரை : "பூமியிலே உங்களுக்கு...
More

Sunday’s Class Skit : Christianity

  பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிற அட்டையுடன் நிற்கிறார்கள். பச்சை 1 : கடவுள் தான் எல்லாத்தையும் படச்சார். இந்த பிரபஞ்சத்தைப் படைத்தது அவர் தான். இந்த சந்திரன், சூரியன், நட்சத்திரம் எல்லாமே அவர் படைத்தது தான். இந்த பூமியை அவர் படைத்து விலங்குகள், பறவைகள், மீன்கள் எல்லாத்தையும் படைச்சார். பாருங்க, பூமி எப்படி பச்சைப் பசேல்ன்னு இருக்கு. கடைசில மனுஷனைப் படைச்சார். ஆதாமையும், ஏவாளையும் படைச்சார். நாம அவரை அன்பு செய்யணுங்கறது மட்டும் தான் அவரோட ஆசையா இருந்துச்சு. அதுக்காக இந்த உலக...
More

Christianity : இதயத்தைப் பார்க்கும் இறைவன்

A Sunday's Class Speech முகம் தனைப் பாராமல் அகம் தனைப் பார்த்தென்னை அன்போடணைக்கும் எந்தன் ஆண்டவரை வணங்குகிறேன்.   அவையோருக்கு என் அன்பின் வணக்கம். இன்று நான் "மனுஷன் முகத்தைப் பார்ப்பான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்" எனும் தலைப்பில் ஒரு சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன். சேற்றிலே வேர்பிடித்து, செங்கதிரில் இதழ் பிரித்து சிரிக்கின்ற அல்லி மலரை நாம் ரசிக்கிறோம். அதன் வேர்கள் சேற்றின் அழுக்கிலே புதைந்து கிடப்பதை நாம் பார்ப்பதில்லை. நீர...
More

நம்பிக்கை

நம்பிக்கை. கிறிஸ்தவர்கள் பல வேளைகளில் தடுமாறும் ஒரு விஷயம் நம்பிக்கை. கடவுளிடம் முழுமையாய் நம்பிக்கையை வைப்பதில் தடுமாற்றம். எந்த ஒரு செயலும் சரியாக அமையவேண்டுமென்றால் அதைத் தானே முன்னின்று நடத்தவேண்டும் என்னும் எண்ணம். கடவுளிடம் ஒப்படைப்பதில் வரும் தயக்கம். இந்த நம்பிக்கையின்மை தான் வாழ்வில் நாம் பல வெற்றிகளை அடைவதற்கு இடையூறாகவும், பல தோல்விகளை வெற்றிகள் என்று நாம் கருதிக் கொள்வதற்கு ஏதுவாகவும் அமைந்து விடுகிறது. தொடாதே என்று பலமுறை எச்சரித்தும் தீயை நோக்கி விரலை நீட்டும் மழலையைப் போ...
More

Christianity படரும் நெருப்பு

  இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள கொலராடோ மாநிலத்தில் கொழுந்துவிட்டெரிந்த காட்டுத் தீ சுமார் ஒரு இலட்சத்து முப்பத்து ஏழாயிரம் ஏக்கர் நிலத்தை சுட்டெரித்தது. வானம் அந்தக் கரும் புகையினால் மறைந்து போய்விட்டது, எங்கும் இருள் புகை. ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்பிழைக்க தங்கள் வீடுகளையும் உடமைகளையும் விட்டு விட்டு ஓட்டம் பிடித்தார்கள். கோடிக்கணக்கான பணம் செலவழிக்கப்பட்டது அந்தக் காட்டுத் தீயை அணைக்க. அந்த முழு காட்டுத் தீயும் ஒரு சிறு பொறியிலிருந்து துவங்கியது தான். அந்த சிற...
More