அம்மா

      சும்மா சும்மா ஊரைச் சுத்திட்டு இரு செக்கு மாடாட்டம். கல்வியும் வேலையும் லேகியம் மாதிரி பாட்டில்ல வராதுடா ? உருட்டி விழுங்க... ஏழு கழுதை வயசாச்சு பொறுப்பு மட்டும் வரலை பொறுக்கிப் பசங்க சகவாசம் இன்னும் விடலை. அப்பாவின் திட்டுகளில் இல்லாத தன்மானம் சொல்லாமல் எழும்ப வெளியேறும் மகனை, கொல்லையில் நிறுத்தி சொல்லுவாள் அன்னை. மறக்காம 'மத்தியானம் சாப்பிட வந்துடுப்பா'
More