மக்கா நம்ம சாள மீனு….

சாளை மீன் ஆங்கிலத்தில் சார்டைன் என அழைக்கப்படும் சாளை மீன் அற்புதமான மீன் உணவு. நிஜமாகத் தான் சொல்கிறேன். மற்ற மீன்களில் இருப்பதை விட பல சிறப்பம்சங்கள் இந்த சாளை மீனில் உண்டு. கேரளாவிலும், குமரியிலும் சாளை என்று அழைக்கப்படும் இந்த மீனை மத்தி என மற்ற இடங்களில் அழைக்கிறார்கள். ஆனால் அதிலும் இரண்டு வகை உண்டு. நான் சொல்வது அளவில் சின்னதாக இருக்கும் சாளை மீன் பற்றி ! தனிப்பட்ட முறையில் என்னுடைய ஃபேவரிட் மீன் எது என கேட்டால் சட்டென சாளை மீன் என்று சொல்வேன். அதிலும் பொரித்த சாளை மீன் எனது சூப...
More

வஞ்சிரம் மீன் : சாப்பிடும் முன்னாடி படிங்க…

பெரும்பாலான உணவகங்களிலும், வீடுகளிலும் வஞ்சிரம் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. விளம்பரங்களில் நேர்த்தியாகப் பொரித்து வைக்கப்பட்டிருக்கும் நீள் வட்ட மீன் துண்டைப் பார்த்திருப்பீர்களே. பெரும்பாலும் அது வஞ்சிரமாகத் தான் இருக்கும். அலாதியான சுவை. அதிலும் ஃப்ரெஷ் மீனில் இருக்கும் சுவை ரொம்பவே மெய்மறக்க வைக்கும். கேரளாவிலும், குமரி மாவட்டத்திலும் இதை நெய்மீன் என்று சொல்கிறார்கள். குழம்பு வைத்தாலும், பொரித்தாலும் சூப்பர் சுவையுடன் இருக்கும் இந்த மீன் தமிழகம் முழுவதுமே மிகவும் விரும்பிச் சாப்பிடும்...
More

நெத்திலி மீன்…ம்ம்ம்…

  மீன் வகைகளிலே ஒரு ஸ்பெஷல் மீன் நெத்திலி மீன் தான். கருவாடாகவும் இது மிக அற்புதமான சுவையைத் தரும். பச்சை மிளகாய் மிதக்கும் நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு சுவை அறிந்தவர்களுக்கே தெரியும். மாங்காய், முருங்கைக்காய் என இந்த குழம்பு இடத்துக்குத் தக்கபடி பல்வேறு முகம் காட்டும் என்பது சுவாரஸ்யமான அம்சம். இந்த நெத்திலி மீன் சுவையில் மட்டுமல்லாமல் பயன்களிலும் அசரடிக்கக் கூடிய விஷயங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பது தான் சிறப்பம்சம். மேலை நாடுகளில் இந்த மீனைக் கொண்டு சால்ட், பிஸ்ஸா, பாஸ்தா ...
More

ஆக்டபஸ் சாப்பிட்டிருக்கீங்களா ?

  ஆக்டபஸ் என்றதும் ஆஜானுபாகுவான தலையுடன் மலைப்பாம்பு போன்று நீண்ட ஒரு கொத்துக் கைகளுடன் அலையும் உருவம் தானே நினைவுக்கு வருகிறது ? இதையெல்லாமா சாப்பிடுவாங்க என மனசுக்குள் ஒரு சின்ன கேள்வியும் எழும் இல்லையா ? சாப்பிடலாம். ஆனால் அந்த பெரிய சைஸ் ஆக்டபஸை அல்ல, குட்டி ஆக்டபஸை. பிரபலமான உணவு வகையான சுசி, சூப்கள், பாஸ்தா போன்ற பலவற்றில் ஆக்டபஸின் அம்சம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆக்டபஸ் எல்லாம் வேண்டாம் என ஒதுக்குவதற்கு முன் அதிலுள்ள விஷயங்களை ஒரு தடவை பார்த்து விடுவோமே. ஆக்டப...
More

ஆற்று மீன் ஆரோக்கியமானதா ?

மீன் என்றவுடனே நமது நினைவுக்குச் சட்டென வருவது கடல் மீன் தான் இல்லையா ? . ஆனால் ஆற்று மீன்கள் மிகப்பெரிய வர்த்தக எல்லையைக் கொண்டிருக்கின்றன. ஆற்று மீனை ஒரு கை பார்ப்பதற்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் உண்டு. இவற்றை ஆங்கிலத்தில் “ஃப்ரஷ் வாட்டர் ஃபிஷ்” என்பார்கள். நன்னீர் மீன்கள் அல்லது நல்ல தண்ணீர் மீன்கள் என்று சொல்லலாம். நல்ல தண்ணீரில் ஏதோ சில வகை மீன்கள் தான் இருக்கும் என நினைத்தால் அந்த நினைப்பை அப்படியே கடலில் போடுங்கள். உலகில் உள்ள மீன் வகைகளில் 41.21 சதவீதம் வகைகள் நல்ல தண்ணீரிலும்...
More

மீன் முட்டை சாப்பிடலாமா ?

  முட்டை சாப்பிடுவீங்களா ? என்று உங்களிடம் கேட்டால் சட்டென உங்கள் நினைவுக்கு வருவது என்ன ? வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு சுடச் சுட பொரித்துத் தரும் ஒரு ஆம்லெட். லைட்டாக பெப்பர் போட்டு சுடச்சுட வாயில் தள்ளும் ஒரு ஆஃப் பாயில், ஒரு அவித்த முட்டை, அல்லது குறைந்த பட்சம் கடையில் அடுக்கி வைத்திருக்கும் முட்டைகள். எப்படியோ ஒருவகையில் உங்கள் கண்னுக்கு முன் நிழலாடுவது கோழி முட்டை தான் இல்லையா ? நாம் இங்கே அலசப் போவது மீன் முட்டையைப் பற்றி ! மீன் சாப்பிடும் பலருக்கும் மீன் முட்டை பற்றி அதி...
More

கருவாடு சாப்பிடலாமா ?

கருட புராணம் தெரியுமோ இல்லையோ, மீன் ரசிகர்கள் எல்லோருக்கும் தெரிந்த புராணம் கருவாடு புராணம். கிராமத்து நினைவுகளை அசைபோடுகையில் எனது நாவில் தவறாமல் கருவாட்டுச் சுவை வந்து போவதுண்டு. விறகு அடுப்பில் பாட்டி சாம்பலுக்குள் புதைத்துவைத்து சுட்டுத் தரும் கருவாடும், அதை ஒருகையில் பிடித்துக் கொண்டு பழைய கஞ்சி குடித்ததும், டோமினோஸ் பிஸ்ஸாக்களால் சமரசம் செய்து கொள்ள முடியாத சுவை. சரி, எனது புராணம் கிடக்கட்டும், கருவாட்டுக்கு வருகிறேன். கருவாடு பற்றித் தெரியாத நபர்கள் இருந்தால் அவர்கள் அடுத்த இரண்டு ...
More

மீன் சில சுவாரஸ்யமான குறிப்புகள்

  உலகின் பழமையான இனங்களில் ஒன்று தான் மீன் இனம். சுமார் 450 மில்லியன் வருஷங்களுக்கு முன்பே இது தோன்றிவிட்டதாம் ! அதாவது நம்ம “ஜுராசிக் பார்க்” டைனோசர்கள் தோன்றுவதற்கு முன்பே நீந்தத் தொடங்கியவை தான் மீன் இனம். உலகில் 25,000 மேற்பட்ட வகையான மீன் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. கண்டறியப்பட்டமல் குறைந்த பட்சம் 15,000 மீன் வகைகளாவது இருக்கும் என்பது விஞ்ஞானிகள் கருத்து. இது பல மடங்காகவும் எகிறலாம் ! உலகிலுள்ள மீன்களில் 40 சதவீதம் மீன்களும் நல்ல தண்ணீரில் வாழ்பவையாம். உலகிலுள்ள தண்ணீரில்...
More

TIPS : நல்ல‌ மீனா பாத்து வாங்கணுமா ?

  வெண்டைக்காயை ஒடிச்சு பாத்து வாங்கணும், முருங்கையை முறுக்கிப் பாத்து வாங்கணும் என சொல்லும் பலருக்கும் மீனை எப்படி வாங்குவது என்பதில் சந்தேகமும் சிக்கலும் உண்டு. நல்ல மீன் என நினைத்து வாங்கிக் கொண்டு வரும் மீன் வீட்டில் வந்து சமைக்கும் போது கெட்டுப் போயிருக்கும் விஷயம் தெரியும். ஒரு நாள் நல்லா இருப்பது போலத் தெரியும் மறுநாள் கெட்டுப் போனதாய் தெரியும். ஆனால் மீன் வாங்குவதில் எக்ஸ்பர்ட் ஆன மக்களுக்கு இதெல்லாம் ரொம்ப சிம்பிள் மேட்டர். தூரத்திலிரிந்தே பார்த்து சொல்லி விடுவார்கள். அவர்கள் ம...
More

மீன் சாப்பிடும் முன்னாடி…. Just a min.

மீன்களோட பயன்களைப் பற்றிப் படித்து பரபரப்பா மீன் கடைக்கு ஓடும் முன் இந்த ஒரு அத்தியாயத்தையும் கூட கையோடு படிச்சுட்டு போங்க. மீன் ரொம்ப நல்லது ! அதில் மாற்றுக் கருத்து இல்லை. இல்லையென்றால் இப்படி ஒரு புக் எழுத வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் ஒரு சில சந்தர்ப்பங்களில், ஒரு சில மீன்களைத் தவிர்க்க வேண்டியதும் அவசியமாகும் ! முக்கியமாக, சில வகை மீன்களில் மெர்க்குரி உண்டு. ஆரோக்கியமான ஆண்களும் பெண்களும் எந்த வகை மீன்களை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் குழந்தைகளும், தாய்மை நிலையில் இருக்கும் பெண...
More