பயங்களின் கூடாரம், தன்னம்பிக்கையின் சேதாரம்

வெற்றிகளின் கோப்பை நமது வாசலில் வந்து காத்திருப்பதில்லை. வெற்றிக் கோப்பைகளுக்கான ஓட்டத்தில் நம்மை இணைத்துக் கொள்வது மட்டுமே அதைப் பெறுவதற்கான ஒரே வழி. இலட்சியங்களை நோக்கிய ஓட்டத்தில் நமக்குத் தேவை முயற்சி மட்டுமல்ல, தோல்வி கண்டு அஞ்சாத மனமும் தான். தோற்றுவிடுவோமோ எனும் பயத்திலேயே பலர் முயற்சிக்கான முதல் சுவடைக் கூட எடுத்து வைப்பதில்லை. முதல் சுவடை எடுத்து வைக்காதவன் எப்போதுமே பயணம் செல்ல முடியாது என்பது விதி. “நாம் வெற்றி பெற விடாமல் நம்மைத் தடுப்பவை தோல்வியடைந்து விடுவோமோ எனும் பயம் த...
More

தன்னம்பிக்கையில் தடுமாறும் பதின் வயதுப் பெண்கள் 

பதின்வயது ரொம்பவே பக்குவமாய்க் கையாள வேண்டிய வயது. சட்டென உடைந்து விடும் முட்டையைப் போல சில நேரம், உடைக்கவே முடியாத பாறை போல சிலநேரம் என வித்தை காட்டும் அவர்களுடைய மனம் புதிர்களின் புகலிடம். “தன்னம்பிக்கையெல்லாம் பெரியவர்களுக்கான விஷயம்” என பல வேளைகளில் நாம் ஒதுக்கி வைப்பதுண்டு. உண்மையில் தன்னம்பிக்கை பதின் வயதுப் பெண்களுக்கு ரொம்பவே தேவை. இன்றைய வாழ்க்கைச் சூழல் பதின் வயதுப் பெண்களின் மீது ஏகப்பட்ட சுமைகளை வைக்கிறது. அவளுக்கு முன்னால் விளம்பர மாடல்களும், திரை நட்சத்திரங்களும் ரோல் மாடல்க...
More

அடுத்தவன் என்ன சொல்வானோ ?

“மற்றவன் என்ன நினைப்பானோ” என்ற கவலை இன்று பெரும்பாலான மனிதர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. அடுத்தவர்களின் மன நிலைக்கு ஏற்ப தன்னோட வாழ்க்கையின் ஒவ்வொரு செயலையும் செய்பவர்களால் வெற்றி பெற முடியாது.  அடுத்தவர்கள் உங்களை விமர்சிக்கிறார்களென்றால் அதில் முக்கியமான இரண்டு விஷயங்கள் இருக்கலாம் என்கின்றனர் உளவியலார். ஒன்று அவர்களுக்குத் தேவையான ஒன்று உங்களிடம் இருக்கிறது. அல்லது நீங்கள் இருக்கும் இடத்தை அடைய அவர்கள் விரும்புகிறார்கள். ஒரு பத்திரிகையில் ஒருவர் வேலை செய்து கொண்டிருந்தார். அங்கே...
More

தாழ்வு மனம், வாழ்வு தராது

“நான் எதுக்குமே லாயக்கில்லாதவன்..” என உள்ளுக்குள்ளே ஒரு குரல் உங்களிடம் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருக்கிறதா ? உஷார் ! நீங்கள் தாழ்வு மனப்பான்மை எனும் பசித்த சிங்கத்தின் பற்களுக்கு இரையாகக் கூடும். தாழ்வு மனப்பான்மை என்பது படிகளற்ற படுகுழி. அதற்குள் குடியிருப்பவர்கள் கால்களற்ற மனிதர்கள். அவர்களால் வாழ்வின் சமவெளியையோ, வெற்றியின் சிகரங்களையோ பார்க்கவே முடியாது !. தாழ்வு மனப்பான்மைக்கும், தன்னம்பிக்கைக் குறைவுக்கும் நேரடித் தொடர்பு உண்டு. தாழ்வு மனப்பான்மை உடையவர்களால் தன்னம்பிக்கை வாதிகள...
More

திட்டமிடு, வெற்றி வானில் வட்டமிடு.

வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என விரும்பாத மனிதர்கள் இருக்க முடியாது. விரும்புவதால் மட்டுமே ஒருவர் வெற்றிகளைப் பெற்றுவிடவும் முடியாது. வெற்றிக் கதவைத் திறப்பதற்கான சாவிகள் கையில் இருக்க வேண்டியது அவசியம். அந்தச் சாவிகளில் முக்கியமானது “தயாராதல்” எனும் சாவி. ஒரு சூழலை எதிர்கொள்வதற்கு நம்மை எந்த அளவுக்குத் தயார்படுத்திக் கொள்கிறோம் என்பதில் அடங்கியிருக்கிறது நம்முடைய வெற்றியும் தோல்வியும். ஆபிரகாம் லிங்கனை அறிந்திருப்பீர்கள். அமெரிக்காவின் பதினாறாவது ஜனாதிபதி. மேடைப்பேச்சிலும், விவாதங்களிலும...
More

பலவீனங்களை பலங்களாக்குவோம்

“எனக்கொரு வீக்னெஸ் இருக்கு. இல்லேன்னா நான் வாழ்க்கைல ஜெயிச்சு கொடி நாட்டியிருப்பேன்” எனும் உரையாடலை எல்லா இடங்களிலும் சகஜமாகக் கேட்கலாம். பலவீனங்கள் இல்லாத மனிதன் இல்லை. ஆனல் பலவீனத்தை முதலீடாய்க் கொண்டு வாழ்வில் வெற்றிபெற்றவர்களைப் பார்க்கும் போது தான் பலவீனங்கள் பலங்களை நோக்கிய படிக்கட்டுகள் எனும் உண்மை புரியும். உலகைக் கலக்கிய பீட்டில்ஸ் இசைக்குழுவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அவர்களுடைய ஆரம்ப காலத்தில் ஒரு ரிக்கார்டிங் நிறுவனத்திடம் போய் ஆல்பம் போடுவதற்கான வாய்ப்பைக் கேட்டார்க...
More