இயேசு சொன்ன உவமைகள் 27 : விதைப்பவன் உவமை

இயேசு சொன்ன உவமைகள் 27 : விதைப்பவன் உவமை மார்க் 4 : 1 முதல் 20 வரை அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது; “இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. ...
More

இயேசு சொன்ன உவமைகள் : 23 : நம்பிக்கைக்குரிய பணியாளர்.

இயேசு சொன்ன உவமைகள் : 23 : நம்பிக்கைக்குரிய பணியாளர். மத்தேயு 24 : 45 முதல் 51 வரை த‌ம் வீட்டு வேலையாள்களுக்கு வேளாவேளை உணவு பரிமாறத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரிய வரும் அறிவாளியுமான பணியாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும் போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறு பெற்றவர். அவரைத் தம் உடைமைகளுக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். அப்பணியாள் பொல்லாதவனாய் இருந்தால், தன் தலைவர் வரக் காலந் தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் க...
More

இயேசு சொன்ன உவமைகள் 21 : திருமண அழைப்பு

மத்தேயு 22 : 1, 14 இயேசு மீண்டும் அவர்களைப் பார்த்து உவமைகள் வாயிலாகப் பேசியது: “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; அரசர் ஒருவர் தம் மகனுக்குத் திருமணம் நடத்தினார். திருமணத்திற்கு அழைப்புப் பெற்றவர்களைக் கூட்டிக்கொண்டு வருமாறு அவர் தம் பணியாளர்களை அனுப்பினார். அவர்களோ வர விரும்பவில்லை. மீண்டும் அவர் வேறு பணியாளர்களிடம், ‘நான் விருந்து ஏற்பாடு செய்திருக்கிறேன். காளைகளையும் கொழுத்த கன்றுகளையும் அடித்துச் சமையல் எல்லாம் தயாராயுள்ளது. திருமணத்திற்கு வாருங்கள்’ என அழைப்புப் ப...
More

இயேசு சொன்ன உவமைகள் 17 : திராட்சைத் தோட்ட உரிமையாளன்

மத்தேயு 20 : 1..16 “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார்....
More

Christianity : ஏசாயாவின் மனைவி

  கிறிஸ்தவம் பெண்களைப் போற்றுகிறது. பைபிளைப் புரட்டிப் பார்த்தால் ஒவ்வோர் காலகட்டத்திலும் பெண்கள் எழும்பி ஆன்மீக எழுச்சிக்காகக் குரல் கொடுக்கிறாள். அல்லது அந்த காலகட்டத்தின் சமூக மாற்றத்துக்காகக் குரல் கொடுக்கிறாள். பைபிளில் 117 பெண்கள் இடம்பெறுகின்றனர் என்பதிலிருந்தே பெண்மையை விவிலியம் எவ்வளவு தூரம் முக்கியப் படுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். சில பெண்கள் நமக்கு மிகவும் அறிமுகமானவர்கள். குறிப்பாக இறைமகன் இயேசுவைச் சுமந்த அன்னை மரி நமக்கெல்லாம் ரொம்பவே தெரிந்தவர். எப்போது வ...
More

110. ஏழைக் கைம்பெண்

  இயேசு ஒரு நாள் ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார். "மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் பிறரிடமிருந்து வணக்கமும், பெருமையும் பெற விரும்புகிறார்கள். எங்கும் அவர்களுக்கு முதல் மரியாதை கிடைக்கவும், முதன்மை இடங்கள் கிடைக்கவும் ஆசைப்படுகிறார்கள். கைம்பெண்கள் மேல் இரக்கம் காட்டுவதில்லை. அவர்களுடைய வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள். ரொம்ப நேரம் செபம் செய்வது போல நடிக்கிறார்கள். அவர்களுக்கு தீர்ப்பு கடுமையாய் இருக்கும்" என்று நேரடியாக மறை நூல் அறிஞர்களைப் பற்றிப் ப...
More

109. பத்து தொழுநோயாளர்

இயேசு எருசலேமுக்குச் சென்று கொண்டிருந்தார். சமாரியா, கலிலேயா பகுதிகள் வழியாகச் சென்றபோது தொழுநோயாளியர் பத்து பேர் தூரத்தில் நின்று கொண்டு இயேசுவை நோக்கிக் கத்தினார்கள். "ஐயா.. இயேசுவே.. எங்களுக்கு இரங்கும்" தொழுநோயாளிகள் பாவிகள் என்பது அந்தக் கால நம்பிக்கை. அவர்கள் நகருக்குள் நுழைய முடியாது. நகரத்துக்கு வெளியே குகைகளில் தான் அவர்களுடைய வாழ்க்கை. அவர்கள் வெளியே வந்தால் ஒரு மணிச்சத்தத்தை எழுப்பிக் கொண்டே தான் வர வேண்டும். வரும் போதே "தீட்டு..தீட்டு..விலகுங்கள்" என சத்தமிட்டுக் கொண்டே ...
More

108. கனானியப் பெண்

  தீர், சீதோன் நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஒரு கனானியப் பெண் வசித்து வந்தார். அவள் இயேசுவைப் பற்றியும், அவர் செய்கின்ற அற்புதங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தாள். கனானியர்கள் பிற இனத்தவர். இயேசுவின் பணிவாழ்வோ யூதர்களின் மத்தியில் தான் இருந்தது. அந்த கனானியப் பெண்ணுக்கு இயேசு யூதர் என்பதும், அவர் தாவீது மன்னனின் வழிமரபினர் என்பதும், அவரே மீட்பர் என்பதும் எல்லாமே தெரிந்திருந்தது. அவளுடைய மகளை பேய்பிடித்திருந்தது. இயேசுவால் மட்டுமே அவளைக் குணப்படுத்த முடியும் என அவள் நம்பினாள். ...
More

107. நூற்றுவர் தலைவர்

  இயேசு கப்பர்நகூம் எனும் இடத்திற்குச் சென்றார். நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் வந்தார். நூற்றுவர் தலைவர் நூறு படை வீரர்களின் தளபதி. அவர் ஒரு ரோமப் படை வீரர். படைத்தளபதி இயேசுவிடம் சொன்னார். "ஐயா, என் ஊழியன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்" "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" இயேசு பதில் சொன்னார். உடனே நூற்றுவர் தலைவர் பதட்டப்பட்டார். "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் ஊழியன் ந...
More

106. போந்தியு பிலாத்து

  இயேசுவை அறிந்த பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கக் கூடிய ஒரு பெயர் பிலாத்து. இயேசுவின் மீது பொய் குற்றம் சாட்டி அவரை பிலாத்துவின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் தான் அப்போதைய ஆளுநர். தனக்கு முன்னால் நின்றிருந்த இயேசுவை விசாரணை செய்தான் பிலாத்து. ஆனால் இயேசுவிடம் குற்றம் எதையும் காண அவனால் முடியவில்லை. "இவனிடம் நான் குற்றம் ஏதும் காணவில்லை." என மக்களைப் பார்த்துச் சொன்னான். அவன் இயேசுவை அப்போதே விடுவித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. அவன் நீதி இருக்கையில்...
More