வேலையில் அசத்தலாம் வாங்க !

  சிலர் வெற்றி பெறவேண்டுமென கனவு காண்பார்கள். சிலர் விழித்தெழுந்து கடின உழைப்பால் வெற்றியின் பாதையில் நடப்பார்கள். வேலை கிடைப்பது குதிரைக் கொம்பு ! ஆனால் அதைவிடக் கடினமானது கிடைத்த வேலையில் வெற்றிக் கொடியை உயரப் பறக்க விடுவது ! சிலரைப் பாருங்கள். அலுவலகத்தில் நுழைந்த சில வருடங்களிலேயே வெற்றிப் படிகளில் தடதடவென ஏறிக் கொண்டே இருப்பார்கள். சிலரோ முதல்படியிலேயே முடங்கி விடுவார்கள். வெற்றி எட்டாக்கனியுமல்ல, கைகளில் கிட்டாக்கனியல்ல. சரியான முறையில் வேலையை அணுகினால் உயர் பதவிகள் உங்களுக்கே ! வேலை...
More

சேமிப்பதல்ல, செலவு செய்வதே புது டிரென்ட்

  “நாலு ஏக்கர் தென்னந் தோப்பையா கழுத்துல போட்டுட்டு திரிஞ்சே” என்று கதாநாயகியைப் பார்த்து பாட்டி கேட்பது ஒரு திரைப்பட வசனம். இளம் வயதினரும், பெரியவர்களும் பணத்தைப் பார்க்கும் பார்வையின் வேறுபாட்டை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது. இளம் வயதினரிடையே பற்றியெரியும் பழக்கங்களில் ஒன்று வீண் செலவு. அதற்கு அவர்கள் ஃபேஷன் என்றோ டிரண்ட் என்றோ பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். தேவைக்கும், ஆடம்பரத்துக்குமிடையேயான வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் நிலை இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது. உங்களுக்கு எதிரே...
More

கூடப் பொறந்த பாசம் !

கிராமப் புறங்களில் சகோதர சகோதரிகளை “கூடப் பொறந்ததுக” என்பார்கள். கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் என்பதே அதன் பொருள். அப்படி ஆனந்தமாய்க் கூடி வாழ்வதற்காகப் பிறந்தவர்கள் இன்று எப்படி இருக்கிறார்கள் எனும் கேள்வியை ஒவ்வொருவரும் எழுப்ப வேண்டியது அவசியம். சின்ன வயதில் தோப்பிலும், வரப்பிலும், குளத்திலும்  ஆனந்தமாய் குதித்து விளையாடும் சகோதரர்கள் வளர வளர தங்களுடைய பிணைப்பைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைத்துக் கொள்கிறார்கள்.  இந்த அன்னியோன்யம் முழுமையாய் மறைந்து போய் பல நேரங்களில் வெறுப்பாய் மாறுவது த...
More

95 Health Tips

    அடிக்கடி போரடிக்கிறது என காபி, டீ குடிக்க கிளம்பாமல் அதற்குப் பதிலாக தூய்மையான தண்ணீரைக் குடியுங்கள்.   “தம்” அடிப்பதை நிறுத்துங்கள். தம் அடிக்கத் தோன்றும்போது பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதை வழக்கமாக்குங்கள்.     கணினியில் வேலை பார்ப்பவர்கள் 20-20-20 பயிற்சியை நிச்சயம் செய்யுங்கள். இருபது நிமிடங்களுக்கு ஒருமுறை, இருபது வினாடிகள், இருபது அடி தொலைவிலுள்ள பொருளைப் பார்த்து கண்ணை இலகுவாக்குவது தான் இந்த பயிற்சி.   கணினியில் வே...
More

உடலைப் பேணினால், மனமும் வலுவாகும்

“நமது உடலை ஆரோக்கியமாய் வைத்திருக்க வேண்டியது நமது முதன்மையான வேலை. இல்லையேல் நமது மனம் வலுவாகவும், தெளிவாகவும் இருக்காது” என்கிறார் புத்தர். உடலும் மனமும் எதிரெதிர் துருவங்களல்ல, ஒன்றின் ஆரோக்கியமும், பலவீனமும் அடுத்ததைப் பாதிக்கும் என்பதே புத்தர் சொல்லும் அறிவியல் உண்மையாகும். உலக அளவில் நடத்தப்படும் ஆய்வுகளும், இந்திய அளவில் நடத்தப்படும் ஆய்வுகளும் அச்சத்துடன் தெரிவிக்கும் விஷயம் “ இன்றைய இளம் தலைமுறையினர் ஆரோக்கியமில்லாமல் இருக்கிறார்கள்” என்பது தான். அதற்குக் காரணம் இளம் வயதினரின் ஏன...
More

கல்வியால் ஆய பயன் !

ஆண்டு இறுதித் தேர்வு வந்தாலே போதும் பள்ளி மாணவர்களெல்லாம் எதோ கொள்ளி வாய்ப் பிசாசு கொல்லையில் காத்திருப்பது போல வெலவெலக்கத் துவங்குவார்கள். அரக்கப் பரக்க ஓடுவார்கள். கண்களில் ஒரு கிலி எப்போதுமே எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும். பெற்றோரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். ஏதோ ஒரு கொடிய நோய் வந்திருப்பது போல அவர்களுடைய பதட்டம் இருக்கும். “பையனுக்கு எக்ஸாம் இருக்குல்ல..” என்று தான் பேச்சையே ஆரம்பிப்பார்கள். சாப்பாடு தூக்கம் எல்லாம் மறந்து போய் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி விழித்திருப்பார்கள். அந்த பர...
More

மன்னிப்பு மகத்துவமானது !

வீல் சேரில் அமர்ந்திருந்தாள் அந்த ஐந்து வயதுச் சிறுமி கேய் லீ ஹேரியட். இடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகர நீதிமன்றம். 2003ம் ஆண்டில் அவளுக்கு மூன்று வயதாக இருக்கும்போது தான் அந்தத் துயரம் நடந்தது. ஒரு நாள் சகோதரியுடன் உற்சாகமாய்ப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்த போது மூன்று இரக்கமற்ற துப்பாக்கிக் குண்டுகள் எங்கிருந்தோ பறந்து வந்தன. அவளுடைய முதுகெலும்பை உடைத்தன. பறவைக்கு வீல் சேர் வாழ்க்கையானது. நீதிமன்றத்தில் அவளுக்கு முன்னால் நின்றிருந்தான் இருபத்து ஒன்பது வயதான ஆண்டனி வாரன். நீதிமன்றம் அவனைக் குற்ற...
More

அடுத்தவன் சொல்வதல்ல நீ…

நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது. பலவேளைகளில் பிறர் நம்மைப் பற்றி என்ன நினைக்கிறார்களோ அந்த வடிவமாகவே நாம் மாறிவிடுகிறோம். பிறருடைய விருப்பங்களின் படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது நமது இலட்சியங்களை நோக்கிய ஓட்டத்தில் வேகத் தடையாக அமைந்து விடுகிறது. பல வேளைகளில் அந்த விமர்சனங்கள் பெரும் புதை குழிகளாய் மாறி நம்மை விழுங்கி விடுவதும் உண்டு. பிறர் ...
More

வீண் செலவு வேண்டாமே !

“நாலு ஏக்கர் தென்னந் தோப்பையா கழுத்துல போட்டுட்டு திரிஞ்சே” என்று கதாநாயகியைப் பார்த்து பாட்டி கேட்பது ஒரு திரைப்பட வசனம். இளம் வயதினரும், பெரியவர்களும் பணத்தைப் பார்க்கும் பார்வையின் வேறுபாட்டை இந்த வசனம் வெளிப்படுத்துகிறது. இளம் வயதினரிடையே பற்றியெரியும் பழக்கங்களில் ஒன்று வீண் செலவு. அதற்கு அவர்கள் ஃபேஷன் என்றோ டிரண்ட் என்றோ பெயர் சூட்டிக் கொள்கிறார்கள். தேவைக்கும், ஆடம்பரத்துக்குமிடையேயான வித்தியாசம் தெரியாமல் தடுமாறும் நிலை இன்றைக்கு அதிகமாகியிருக்கிறது. உங்களுக்கு எதிரே செல்லும் ...
More

எல்லாரையும் போல நானும்…

நீங்கள் பல முறை பார்த்திருப்பீர்கள். கூட்டம் கூட்டமாக ஆடுகளை ஓட்டிக்கொண்டு போவார் ஒருவர். அவருக்குப் பின்னால் ஆடுகளெல்லாம் ஒரு தாள லயத்தில் நடந்து போகும். முன்னே செல்லும் ஆடுகள் பின்னால் செல்லும் ஆடுகளுக்கு வழிகாட்டும். முன்னால் செல்லும் ஆடுகள் குப்பையில் இறங்கினால் பின்னால் போகும் ஆடுகளும் குப்பையில் இறங்கும். முன்னால் செல்லும் ஆடுகள் ஓடினால் பின்னால் வருபவையும் ஓடும், நின்றால் நிற்கும். முன்னால் செல்லும் ஆடுகள் தான் பின்னால் வரும் ஆடுகளின் போக்கை நிர்ணயிக்கின்றன. இது நம் எல்லோருக்கும் தெரி...
More