மக்கா நம்ம சாள மீனு….

சாளை மீன் ஆங்கிலத்தில் சார்டைன் என அழைக்கப்படும் சாளை மீன் அற்புதமான மீன் உணவு. நிஜமாகத் தான் சொல்கிறேன். மற்ற மீன்களில் இருப்பதை விட பல சிறப்பம்சங்கள் இந்த சாளை மீனில் உண்டு. கேரளாவிலும், குமரியிலும் சாளை என்று அழைக்கப்படும் இந்த மீனை மத்தி என மற்ற இடங்களில் அழைக்கிறார்கள். ஆனால் அதிலும் இரண்டு வகை உண்டு. நான் சொல்வது அளவில் சின்னதாக இருக்கும் சாளை மீன் பற்றி ! தனிப்பட்ட முறையில் என்னுடைய ஃபேவரிட் மீன் எது என கேட்டால் சட்டென சாளை மீன் என்று சொல்வேன். அதிலும் பொரித்த சாளை மீன் எனது சூப...
More

வஞ்சிரம் மீன் : சாப்பிடும் முன்னாடி படிங்க…

பெரும்பாலான உணவகங்களிலும், வீடுகளிலும் வஞ்சிரம் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. விளம்பரங்களில் நேர்த்தியாகப் பொரித்து வைக்கப்பட்டிருக்கும் நீள் வட்ட மீன் துண்டைப் பார்த்திருப்பீர்களே. பெரும்பாலும் அது வஞ்சிரமாகத் தான் இருக்கும். அலாதியான சுவை. அதிலும் ஃப்ரெஷ் மீனில் இருக்கும் சுவை ரொம்பவே மெய்மறக்க வைக்கும். கேரளாவிலும், குமரி மாவட்டத்திலும் இதை நெய்மீன் என்று சொல்கிறார்கள். குழம்பு வைத்தாலும், பொரித்தாலும் சூப்பர் சுவையுடன் இருக்கும் இந்த மீன் தமிழகம் முழுவதுமே மிகவும் விரும்பிச் சாப்பிடும்...
More

நெத்திலி மீன்…ம்ம்ம்…

  மீன் வகைகளிலே ஒரு ஸ்பெஷல் மீன் நெத்திலி மீன் தான். கருவாடாகவும் இது மிக அற்புதமான சுவையைத் தரும். பச்சை மிளகாய் மிதக்கும் நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு சுவை அறிந்தவர்களுக்கே தெரியும். மாங்காய், முருங்கைக்காய் என இந்த குழம்பு இடத்துக்குத் தக்கபடி பல்வேறு முகம் காட்டும் என்பது சுவாரஸ்யமான அம்சம். இந்த நெத்திலி மீன் சுவையில் மட்டுமல்லாமல் பயன்களிலும் அசரடிக்கக் கூடிய விஷயங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பது தான் சிறப்பம்சம். மேலை நாடுகளில் இந்த மீனைக் கொண்டு சால்ட், பிஸ்ஸா, பாஸ்தா ...
More

ஆக்டபஸ் சாப்பிட்டிருக்கீங்களா ?

  ஆக்டபஸ் என்றதும் ஆஜானுபாகுவான தலையுடன் மலைப்பாம்பு போன்று நீண்ட ஒரு கொத்துக் கைகளுடன் அலையும் உருவம் தானே நினைவுக்கு வருகிறது ? இதையெல்லாமா சாப்பிடுவாங்க என மனசுக்குள் ஒரு சின்ன கேள்வியும் எழும் இல்லையா ? சாப்பிடலாம். ஆனால் அந்த பெரிய சைஸ் ஆக்டபஸை அல்ல, குட்டி ஆக்டபஸை. பிரபலமான உணவு வகையான சுசி, சூப்கள், பாஸ்தா போன்ற பலவற்றில் ஆக்டபஸின் அம்சம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆக்டபஸ் எல்லாம் வேண்டாம் என ஒதுக்குவதற்கு முன் அதிலுள்ள விஷயங்களை ஒரு தடவை பார்த்து விடுவோமே. ஆக்டப...
More

ஆற்று மீன் ஆரோக்கியமானதா ?

மீன் என்றவுடனே நமது நினைவுக்குச் சட்டென வருவது கடல் மீன் தான் இல்லையா ? . ஆனால் ஆற்று மீன்கள் மிகப்பெரிய வர்த்தக எல்லையைக் கொண்டிருக்கின்றன. ஆற்று மீனை ஒரு கை பார்ப்பதற்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் உண்டு. இவற்றை ஆங்கிலத்தில் “ஃப்ரஷ் வாட்டர் ஃபிஷ்” என்பார்கள். நன்னீர் மீன்கள் அல்லது நல்ல தண்ணீர் மீன்கள் என்று சொல்லலாம். நல்ல தண்ணீரில் ஏதோ சில வகை மீன்கள் தான் இருக்கும் என நினைத்தால் அந்த நினைப்பை அப்படியே கடலில் போடுங்கள். உலகில் உள்ள மீன் வகைகளில் 41.21 சதவீதம் வகைகள் நல்ல தண்ணீரிலும்...
More

மூளை வளரணுமா ? மீன் சாப்டுங்க

  “பணம் இருக்கா ?” என்று யாராவது உங்களிடம் கேட்டால் கோபப்படுவீர்களா ? இல்லை தானே ? அதே நேரத்தில் “யோவ் மூளை இருக்கா ?” என கேட்டால் சட்டென மூக்குக்கு மேல் ஒரு துளி கோபம் புயலாய் மையம் கொள்ளும் இல்லையா ? காரணம் மனிதனாய் இருக்கும் ஒவ்வொருவரும் எல்லாவற்றையும் விட முக்கியமாய் நேசிப்பது அறிவையும், அது தரும் மூளையையும் தான். எந்தக் குறைபாடையும் எளிதில் தீர்த்து விடலாம். ஆனால் மூளை வளர்ச்சி குறைபாடு உடையவர்களுடைய கஷ்டமும் அவர்களைச் சுற்றியிருப்போர் படும் வேதனையும் சொல்லி மாளாது. சின்னக் க...
More

கேன்சர் நோயும் மீனும்

மீன் சாப்பிட்டா கேன்சர் வரும் வாய்ப்பு குறையும்ன்னு சொன்னா சைவப் பிரியர்கள் கொலை வெறியோடு பார்க்கக் கூடும். ஆனால் அது உண்மை என அடித்துச் சொல்கின்றன சில ஆய்வு முடிவுகள். குறிப்பாக யூ.கேவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு என்ன சொல்கிறது தெரியுமா ? தொடர்ந்து மீன் சாப்பிடும் மக்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு, வெறும் சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களை விட மிக மிகக் குறைவு என்கிறது ! ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் 32,403 அக்மார்க் அசைவப் பார்ட்டிகளும், 8562 அசைவ வகையில...
More

மீன் சாப்பிடுங்க, சருமம் அழகாகும் !

  மேனி அழகுக்கு இந்த சோப், அந்த கிரீம், அந்த பவுடர் என நிமிடத்துக்கு நான்கு விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கும் காலம் இது. எல்லாமே எதை விற்று என்ன சம்பாதிக்கலாம் என தலையைச் சொறிந்து கொண்டிருக்கும் விளம்பர நிறுவனங்களின் ஐடியாக்கள். உண்மையான சரும எழில் வெளிப்பூச்சுகளால் வருவதல்ல. உடலிலுள்ள சத்துக்களால் உருவாகவேண்டும். ஏதேனும் சத்துக் குறைபாடு உண்டென்றால் அதை நிவர்த்தி செய்து மேனி எழிலைப் பராமரிப்பதே நீண்டகால நன்மை தரும். தோலையும், உடலையும் பிரித்துப் பார்ப்பதே அ...
More

கண்ணுக்கு மீன் அழகு !

  பெண்களோட கண்களை அசைந்தாடும் மீன் என்று கவிஞர்கள் கிறுக்கித் தள்ளுவதுண்டு. தண்ணீரில் நீச்சலடிக்கிற மீனைப் பாக்கிறது கண்ணுக்கு அழகு. விஷயம் அதோட முடிஞ்சு போயிடலை. அதே மீனைப் பிடிச்சு குழம்பு வைச்சு சாப்பிட்டா கண் பார்வைக்கும் ரொம்ப நல்லது. குறிப்பாக மீனிலுள்ள ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் கண்ணுக்கு ரொம்ப ஆரோக்கியமானது என்கின்றன ஆராய்ச்சிகள். பார்வை இல்லாத வாழ்க்கையை ஒரு வினாடி யோசிச்சுப் பார்ப்பதே முடியாத காரியம். இந்தக் கட்டுரையை வாசிப்பது முதல், எல்லாரையும் பார்த்து நேசிப்பது வரை பார்வ...
More

குழந்தைகளுக்கு மீன் கொடுங்க

  மீன் உணவினால் ரொம்பப் பயனடைபவர்கள் குழந்தைகள் தான். அவர்களுடைய அறிவு வளர்ச்சிக்கு மீன் ரொம்பவே உதவுகிறது. ஏ.டி.ஹைச்.டி தெரியுமா ? அட்டென்ஷன் டிஃபிஸிட் ஹைப்பர் ஆக்டிவிடி டிஸார்டர் என இதை விரிவாக்கலாம். லோக்கல் பாஷைல சொன்னா, குழந்தைகள் ஓவர் ஆக்டிவா இருக்கிற சிக்கல். அதைச் சரிபண்ண மீன் உதவுகிறது. தன்னோட குழந்தை ஓவர் ஆக்டிவ் ஆ இருக்குமோ என பல பெற்றோர் குழம்புவதுண்டு. துருதுருவென ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகளெல்லாம் இந்த சிக்கல் உடையவர்கள் அல்ல என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்....
More