மன்னிச்சுக்கோங்க‌

மன்னிப்பு மகத்துவமானது ! வீல் சேரில் அமர்ந்திருந்தாள் அந்த ஐந்து வயதுச் சிறுமி கேய் லீ ஹேரியட். இடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகர நீதிமன்றம். 2003ம் ஆண்டில் அவளுக்கு மூன்று வயதாக இருக்கும்போது தான் அந்தத் துயரம் நடந்தது. ஒரு நாள் சகோதரியுடன் உற்சாகமாய்ப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்த போது மூன்று இரக்கமற்ற துப்பாக்கிக் குண்டுகள் எங்கிருந்தோ பறந்து வந்தன. அவளுடைய முதுகெலும்பை உடைத்தன. பறவைக்கு வீல் சேர் வாழ்க்கையானது. நீதிமன்றத்தில் அவளுக்கு முன்னால் நின்றிருந்தான் இருபத்து ஒன்பது வயதான ஆண்டனி வா...
More

மன்னிப்பு

சிலுவையின் சிரத்தில் விரித்த கரத்தில் குருதி குளிப்பாட்டிய ஆணிகளுடன் வடிந்தன மன்னிப்பின் வார்த்தைகள். பாவங்களின் படிக்கட்டுகளில் நிரந்தரப் பாய் விரித்து படுத்துக் கிடந்தவர்களிடமும் இயேசுவின் மனம் மன்னிப்பு வினியோகம் செய்தது. சினத்தை சுருக்குப் பையில் சொருகி, மன்னிப்பை மறுகன்னத்திலும் ஏந்தி நடக்கச் சொன்னார். தவறுகளின் அரிவாள் வீச்சுக்கு தண்டனையின் கோடரி வீச்சு தற்காலிகத் தீர்வுகளையே தந்து செல்லும் என்பதும், மாற்றங்களின் மெழுகுவர்த்திகளை மன்னிப்புகள் மட்டுமே கொளுத...
More

இயேசுவின் சிலுவை மொழிகள் : 2

நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன் ( லூக்கா 23 : 43 ) இயேசுவைச் சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பளித்த அரசு, அவரை அடித்து, துன்புறுத்தி, அவமானப்படுத்தி, சிலுவை சுமக்க வைத்து கொல்கொதா மலையில் சிலுவையில் அறைந்தது. அத்துடன் நிற்கவில்லை. அவருடைய வலப்புறம் ஒருவனும், இடப்புறம் இன்னொருவனுமாக இரண்டு கள்வர்களையும் சிலுவையில் அறைந்தது. இயேசுவும் ஒரு கள்ளன் என்று சொல்லி அவருடைய மரணத்தையும் அவமானப்படுத்துவதே அவர்களுடைய நோக்கம். "யூதர்களின் அரசன்" என நக்கல் தொனியு...
More

இயேசுவின் சிலுவை மொழிகள் : 1

தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை ( லூக்கா 23 : 34 ) சிலுவை மீட்பின் சின்னம். இன்றைக்கு அது காதுகளிலும், கழுத்திலும், விரல்களிலும், வாகனத்தின் கண்ணாடிகளிலும், வீடுகளின் சுவர்களிலும் ஒரு அலங்காரச் சின்னமாக இடம்பெற்று விட்டது. பல வடிவங்களில், பல உலோகங்களில், தங்கமும் வைரமும் இழைத்த செல்வ மினுமினுப்புகளில் சிலுவை இன்று காட்சி தருகிறது. சிலுவை அலங்காரப் பொருளா ? கல்வாரியில் இயேசுவின் குருதியும், வலி நிறைந்த வார்த்தைகளும், உயிர் உறைந்த அவ...
More

மன்னிக்காதவன் ஆன்மீக ஏழை !

  `ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை. இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, "முழுமையாய் மன்னிப்பவர்" என்பது அதன் அர்த்தம். 'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்லவே முடியாது' என்கிறது கிறிஸ்தவம். மதங்கள் எல்லாம் இப்படி மன்னிப்பைக் குறித்து விலாவரியாகச் சொன்னாலும் மனிதனுடைய மனதில் மட்டும் மன்னிப்பு குதிரைக் கொம்பாகத் தான் முளைக்கிறது. மன்னிப்பது கோழைகளின் செயல் என்றே பலரும் நினைக்கிறார்கள். 'எதிரி நாட்டு மன்னனைப் போரிட்டு...
More