இயேசு சொன்ன உவமைகள் 27 : விதைப்பவன் உவமை

இயேசு சொன்ன உவமைகள் 27 : விதைப்பவன் உவமை மார்க் 4 : 1 முதல் 20 வரை அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர். அவர் உவமைகள் வாயிலாகப் பலவற்றை அவர்களுக்குக் கற்பித்தார். அவர் அவர்களுக்குக் கற்பித்தது; “இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும் பொழுது சில விதைகள் வழியோரம் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றை விழுங்கிவிட்டன. ...
More

இயேசு சொன்ன உவமைகள் 20 : மினா நாணயமும், பணியாளர்களும்

மினா நாணயமும், பணியாளர்களும் லூக்கா 19 : 11 முதல் 27 வரை இயேசு எருசலேமை நெருங்கி வந்துகொண்டிருந்தார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் இறையாட்சி உடனடியாகத் தோன்றப்போகிறது என்று நினைத்தார்கள். அப்போது இயேசு மேலும் ஓர் உவமையைச் சொன்னார்: “உயர் குடிமகன் ஒருவர் ஆட்சியுரிமை பெற்றுவரத் தொலை நாட்டிற்குப் போகப் புறப்பட்டார். அப்போது அவர் தம் பணியாளர்கள் பத்துப் பேரை அழைத்து, பத்து மினாக்களை அவர்களிடம் கொடுத்து அவர்களை நோக்கி, ‘நான் வரும்வரை இவற்றை வைத்து வாணிகம் செய்யுங்கள்’ என்று சொன்னா...
More

இயேசு சொன்ன உவமைகள் 19 : இரண்டு விதமான பிரார்த்தனைகள்

லூக்கா 18: 9 முதல் 14 வரை தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: “இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்று கொண்டு, இவ்வாறு இறைவனிடம் வேண்டினார்: ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக...
More

இயேசு சொன்ன உவமைகள் 18 : மனம் தளரா விதவை

அவர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். “ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந்தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந்தார். அவர் நடுவரிடம் போய், ‘என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்’ என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்பவில்லை. பின்பு அவர், ‘நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்த...
More

சாலமோனின் நீதிமொழிகள் : 4

  நீ, யார் கடனுக்கோ பொறுப்பேற்றிருந்தாலோ, அன்னியனுக்காய் பிணையாய் நின்றால், அவனை வருந்தி வேண்ட வருந்தாதே. வலைகளில் சிக்கிய மான், புரண்டு படுத்து துயிலாது, பொறியில் சிக்கிய கிளி கண் மூடி கனா காணாது. நீ விடுவிக்கப் படும் வரை போராடு. உன் ஞானம் உன் மேலான இக்கட்டுகளின் கட்டுகளை வெட்டிப் போடும். சோம்பேறிகளாய் சொக்கித் திரியாதீர்கள். தலைவனோ, கண்காணிப்பாளனோ, அதிகாரியோ இல்லாத எறும்புகளை பொறுமையாய் பாருங்கள். கோடையில் சேமிக்கிறது பசியால் வாடையில் உண்க...
More

சாலமோனின் நீதிமொழிகள் : 3

அறிவைத் தேடுதலே அறிவு. ஞானம் தேடுதலே உண்மை ஞானம். அதை நீ உயர்வாய் கொள் உன்னை அது உயர்த்தும். வேண்டாமென்போரை அது தீண்டாது. நேரிய பாதை உன்னை இடறாது, ஏனென்றால் உன் நடையில் தெளிவுகள் இருக்கும். சறுக்காத பாதை அது ஏனெனில் நீ வெறுக்காத ஞானம் அது. தீயவர்களோ, தீவினை உண்டு கொடுஞ்செயல் குடித்து இருட்டின் மடியில் குருடாய் கிடக்கிறார்கள். அவர்கள் கண்களை வைகறை உறுத்தும். நல்லோருக்கோ வைகறை மெல்ல மெல்ல விரிந்து நண்பகல் நோக்கி நடக்கும். உன் கோட்டைகளை காவல் செய்வ...
More

சாலமோனின் நீதிமொழிகள் : 2

    உணவுக்கான ஓடுதலோடு உணர்வுக்கான தேடுதலையும் வளர்த்துக் கொள். மெய்யறிவுக்காய் மன்றாடு. சுரங்கம் தோண்டி புதையல் தேடும் ஆர்வத்தை ஞானம் தோண்டுவதில் நடத்து. அறிவும், ஞானமும் ஆண்டவன் அருள்வதே. மாசற்றோனுக்கான கேடயம் கடவுளே. அவருடைய வரைபடத்தில் வருபவை எல்லாம் நேர்மையின் பாதைகளே. நீதியையும், நேர்மையையும் நீ பற்றிக் கொள். ஞானம் வந்து உன்னைத் தொற்றிக் கொள்ளும். பின், உன் நுண்ணறிவும் மெய்யறிவும், உன் வழியை உருவாக்கும். உன் நிழல் விழும் ஓரமும் ...
More

சாலமோனின் நீதிமொழிகள் : 1

ஆண்டவன் மீதான அச்சமே, அற்புத ஞானத்தின் ஆரம்பம். பெற்றோரிடம் உள்ளது. அறிவின் முதல் படி. தவறாமல் அதைக் கடைபிடி. அதுவே, உன் தலையை அலங்கரிக்கும் தங்கக் கிரீடம், கழுத்தைத் தழுவும் பவழ மாலை. தீயவர்களின் வார்த்தைகளுக்கு வானவில் போல ஏராளம் வண்ணங்கள். அப்பாவிகளைக் கொள்ளையடிப்பதும், பாதாளச் சமாதிக்குள் வேதாளங்களாய் சுற்றி வருவதும், யாரையேனும் அழித்து அந்த செல்வம் சுருட்டி மிரட்டும் மாளிகை கட்டுவதும், என, கொடியவன் வார்த்தைகளில் இனிப்பு விஷ‌ம் கனியும். நீ, அவர்களோ...
More

110. ஏழைக் கைம்பெண்

  இயேசு ஒரு நாள் ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார். "மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் பிறரிடமிருந்து வணக்கமும், பெருமையும் பெற விரும்புகிறார்கள். எங்கும் அவர்களுக்கு முதல் மரியாதை கிடைக்கவும், முதன்மை இடங்கள் கிடைக்கவும் ஆசைப்படுகிறார்கள். கைம்பெண்கள் மேல் இரக்கம் காட்டுவதில்லை. அவர்களுடைய வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள். ரொம்ப நேரம் செபம் செய்வது போல நடிக்கிறார்கள். அவர்களுக்கு தீர்ப்பு கடுமையாய் இருக்கும்" என்று நேரடியாக மறை நூல் அறிஞர்களைப் பற்றிப் ப...
More

109. பத்து தொழுநோயாளர்

இயேசு எருசலேமுக்குச் சென்று கொண்டிருந்தார். சமாரியா, கலிலேயா பகுதிகள் வழியாகச் சென்றபோது தொழுநோயாளியர் பத்து பேர் தூரத்தில் நின்று கொண்டு இயேசுவை நோக்கிக் கத்தினார்கள். "ஐயா.. இயேசுவே.. எங்களுக்கு இரங்கும்" தொழுநோயாளிகள் பாவிகள் என்பது அந்தக் கால நம்பிக்கை. அவர்கள் நகருக்குள் நுழைய முடியாது. நகரத்துக்கு வெளியே குகைகளில் தான் அவர்களுடைய வாழ்க்கை. அவர்கள் வெளியே வந்தால் ஒரு மணிச்சத்தத்தை எழுப்பிக் கொண்டே தான் வர வேண்டும். வரும் போதே "தீட்டு..தீட்டு..விலகுங்கள்" என சத்தமிட்டுக் கொண்டே ...
More