வைட்டமின் மாத்திரைகள் வேஸ்ட்..

வைட்டமின் மாத்திரைகளை எதற்கெடுத்தாலும் உண்பது என்பது மேலை நாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதியான கலாச்சாரங்களில் ஒன்று. வைட்டமின் சி, இ  என எல்லா வைட்டமின்களும் இப்போது பல்வேறு நிறங்களில், பல்வேறு வடிவங்களில் மாத்திரைகளாகக் கிடைக்கின்றன. மேலை நாடுகளில் வைட்டமின்களுக்கென தனிக் கடைகளே இருக்கின்றன. அங்கே நிரம்பி வழியும் கூட்டம் வைட்டமின்களை அள்ளிச் சென்று உண்கின்றனர். அவர்களுடைய நம்பிக்கையெல்லாம் இந்த மாத்திரைகளை உண்டால் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் கிடைக்கும், நோய்களெல்லாம் நீங்கிவ...
More

உடல் எடையும், புற்றுநோயும்

அளவுக்கு அதிகமான எடையுடன் இருப்பது எப்போதுமே ஆபத்தானதே. இப்படி அதிக எடையுடன் இருக்கும் பெண்களுக்கு கருக்குழாய்களில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக அதிகம் என்கிறது புதிய ஆராய்ச்சி ஒன்று. அதிலும் மாதவிலக்கு நின்று போன, நடுவயதைத் தாண்டிய பெண்கள் அதிக எடையுடன் இருந்தால் அவர்களுக்கு இந்த புற்று நோய் வரும் வாய்ப்பு 80 விழுக்காடு அதிகம் என எச்சரிக்கிறது இந்த ஆராய்ச்சி. அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் கழகம் சுமார் ஒரு இலட்சம் பெண்களை கடந்த பல வருடங்களாக ஆராய்ச்சியில் ஈடுபடுத்தியதன் விள...
More

த‌மிழும், ம‌னைவியும்

விலகலில் வியாபித்துக் கிடக்கும் என் விழியோர வெற்றிடங்கள். மோகத்தின் கருகிப் போன தீக்குச்சிகள் திரி தாண்டி திரி தாண்டி பரவி எரியும் ஆத்மார்த்த ஸ்னேகத்தின் படிக்கட்டு வெளிச்சங்கள், கடந்த மாதங்களின் எரிச்சல் திட்டுகளெல்லாம் நித்திரைத் திண்ணைகளில் கூர்மையாகிக் கிடக்கும். கையசைத்து அனுப்பி வைத்த ரயில்வே நிலைய நினைவுகள், சுகப்பிரசவ பிரார்த்தனைகள் எல்லாம் அடர்ந்து பரவும் உள்ளுக்குள் எழுத முடியாத நாட்களில் விரல்களில் எழும் அழுகை மனசுக்குள். மனைவியாய் பார்க்கத் தோணுது த...
More

தமிழ் என் தாய்

<a href="https://xavi.files.wordpress.com/2015/10/108220275.jpg"><img class="size-medium wp-image-2691" src="https://xavi.files.wordpress.com/2015/10/108220275.jpg?w=300" alt="Silhouette of mother kissing child on head" width="300" height="202" /></a> வளைகுடாக்கள் கால் நீட்டிப் படுத்திருக்கும். இந்திய வறுமை வயிறுகள் ஆண்டு வருமானத்தின் பாதிப் பணத்தை விசாவுக்கென ஏஜெண்டு தொப்பைகளில் தாரை வார்க்கும். அமெரிக்கச் சாலைகள் மூன்றாம் உலக நாடுகளுக்கு கொஞ்சம் பருக்கை வினியோ...
More

தமிழ் என் காதலி.

மனதைப் பிசையும் சீருடன் அசையும் நடைகள் உனதடி நயமும் உளதடி – அன்பே உனைநான் தமிழெனச் சொல்லவோ ? புரியும் புன்னகை புதிதாய் தோன்றுது, புரியா மெளனம் மரபாய் தெரியுது – கவிதையே உனைநான் தமிழெனக் கொள்ளவோ ? நகைப்பில் நவீனம் பார்வையில் படிமம் விளக்கத் தெரியா விளக்காய் தெரிகிறாய் – புதுமையே உனைநான் தமிழெனில் தவறோ ? உனையே உரைத்து உயிரை நுரைத்து மூச்சு நரைக்க மனதில் கரைக்கிறேன் – வியப்பே உனை நான் தமிழெனில் பிழையோ ? விலக நினைத்தால் அகல மறுத்தாய் விலக்க முடியா நிலையது தந்தாய் ...
More

சென்னை வாழ்க்கை

அவசரமாய் கிளம்புகையில் தோளில் தொற்றிக் கொள்ளும் எரிச்சல் வீட்டிலிருப்போரை பிராண்ட, எதிரே வரும் ஆட்டோக்காரரை காரணமேயில்லாமல் திட்டி, பொறுமையைச் சோதிக்கும் நெரிசல் சாலையை நிறுத்தாமல் சபித்து, வழி விட மறுத்த சிக்னல் முன்னால் கோபத்தில் முனகி, அலுவலகம் சென்றதும் அதிகாரியைப் பார்த்து சிரிக்கக் கற்றுத் தந்திருக்கிறது சென்னை வாழ்க்கை.
More

மங்கையர்

  மடியில் நெருப்பைக் கட்டி அலைவதாக கிராமத்துத் தாய் வலியுடன் சொன்னாள் வயது வந்த மகளைப்பற்றி விறகடுப்பில் ஊதி ஊதி வியர்க்கும் முகத்தோடும் எரியும் விழிகளோடும் தங்கை சிரித்தாள். எங்கோ ஸ்டவ் வெடித்து ஏதோ ஓர் இளம் பெண் இன்னும் இறந்து கொண்டிருக்கிறாள். நாங்கள் கனல்கள் நீரையும் எரிக்கும் அனல்கள் என்று பெண்ணியக் கவிதைகள் சுட்டுக் கொண்டிருக்கின்றன. நங்கையர் நெருப்பாக இருக்கிறார்கள். நெருப்புக்கு நெருக்கமாகவும்.
More

தமிழ்ப் புத்தாண்டு…

தமிழா…. இதோ உனக்கு இன்னுமோர் புத்தாண்டு. திரைப்பட வெளியீடுகள் மட்டும் தேடி இந்தப் பகலை எரித்து விடாதே. தள்ளுபடிக் கடைகளின் வாசலில் இந்த நாளை தள்ளி நகர்த்தாதே. இந்த ஒருநாள் விடுமுறை தூக்கத்துக்காய் வழங்கப் பட்ட துக்க தினமல்ல. உன் சோம்பேறித் தனத்தை சொறிந்து கொள்ளக் கிடைத்த நக நாளும் அல்ல. இது, உள்ளொளிப் பயணத்துக்கான ஒரு நாள். ஒரே ஒரு கேள்வி உன்னையே கேட்டுப்பார், தாண்டிப் போன வருடத்தில் தமிழனாய் தான் இருந்தேனா என்று.
More

உன்னைப் பிரிந்தபின்

  உன்னைப் பிரிந்தபின் என் வாழ்க்கை வயலில் விளைச்சலே இல்லை, என் ஆனந்தத் தோட்டத்தின் திராட்சைச் செடிகள் வைக்கோல்களாய் உருமாறிவிட்டன. என் கனவுகளின் கதவிடுக்கில் இன்னும் உன் குரலே கசிகிறது நாம் செலவிட்ட பொழுதுகளின் விழுதுகளில் தான் ஊசலாடுகிறது எனது இயக்கமும் உயிரின் மயக்கமும். என்றெல்லாம் சொல்வாய் என நம்பிக் கொண்டிருந்தேன். உன் பிரிவின் கண்ணீர் துளியைக் கையில் ஏந்தியபடி. உற்சாக அரட்டையும், பரவச விளையாட்டுமாய் ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருக்கிறாய் மழ...
More

ஆட்டைத் தொலைத்த இடையனைப் போல…

  ஆட்டைத் தொலைத்த இடையனைப் போல தேடிக் கொண்டிருக்கிறேன் கவிதை வரிகளை, அது யாராலோ களவாடப்பட்டிருக்கலாம். வேண்டுமென்றே வெளியேறிச் சென்றிருக்கலாம். முள் செடிகளிடையே முடங்கியிருக்கலாம். பள்ளத்தில் விழுந்து காயமாகியிருக்கலாம். அல்லது வெள்ளத்தில் விழுந்து மாயமாகியிருக்கலாம். எனினும் தேடல் தொடர்கிறது. கட்டப்படாத வார்த்தைக்குக் கட்டுப்பட மறுக்காத ஆடுகள் எனது. தொலைந்த ஆட்டின் வரவுக்காய் மலையடிவாரத்திலேயே காத்திருக்கின்றன மிச்சம் தொன்னூற்று ஒன்பது ஆடுகளு...
More