பெண்ணே நீ கட்டுரை : கனாக் காணும் பதின் வயது

டாக்டர் எனக்கு என்ன செய்யறதுன்னே தெரியலை. கடந்த இரண்டு நாட்களா தற்கொலைசெய்தே ஆகவேண்டும் எனும் உந்துதலும், மன உளைச்சலும் மனசு முழுக்க நிரம்பி இருந்தது. இரயில்வே கேட்டைக் கடக்கும்போது ரயிலுக்கு இடையே குதிக்க வேண்டும் என்றும், சாலையோரம் நிற்கும் போது சட்டென காருக்கு இடையே குதித்து விட வேண்டுமென்றும் மனம் நினைக்கிறது. இன்று அப்படி எந்த எண்ணமும் வரவில்லை. இப்படி அடிக்கடி மனம் அழுத்தமடைகிறது என கண்ணீரோடு தன்னைப் பார்க்க வந்த ஒரு பதின் வயதுப் பெண் சொன்னதாகச் சொல்கிறார் "TeTeenager's Guide to the Real ...
More

கனவுகள் !!! கனவுகள் !!! கனவுகள் !!!

  கனவுகள் ஆழ்மனதில் படிந்து கிடக்கும் எண்ணங்களின் வெளிப்பாடுகள் என்றும், இயலாமைகளின் வெளிப்பாடுகள் என்றும், நமது ஆசைகளின் பிரதிபலிப்புகள் என்றும், நமது குணாதிசயத்தைக் கண்டுபிடிக்க உதவும் காரணிகள் என்றும் ஏகப்பட்ட விவாதங்களும் ஆராய்ச்சிகளும் உலக அளவில் பல நூற்றாண்டுகளாக நடந்து கொண்டே இருக்கின்றன. இந்த கனவுகள் ஏன் தோன்றுகின்றன அவற்றின் உண்மையான காரணம் என்ன என்பவற்றுக்கெல்லாம் இதுவரை ஒரு தெளிவான பதில் இல்லை என்றே சொல்லலாம். கனவுகள் நிகழப்போகும் செயல்களை முன்மொழிபவை என்னும் எண்ணம் பல ஆயிர...
More

வீதியில் நாய்கள் , பீதியில் மனிதர்கள்

  தெருநாய் பிரச்சனை ஏதோ தெருவில் உள்ள பிரச்சனையாக இல்லாமல் தேசியப் பிரச்சனையாக உருமாறியிருக்கிறது. பெங்களூர் நகரில் மட்டும் ஒரு நிமிடத்திற்கு பன்னிரண்டு பேரை ஏதோ ஓர் நாய் கடிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரம் எத்தனை தூரம் உண்மை என்று தெரியாது எனினும் இதிலுள்ள சாராம்சமான தெருநாய்ப் பிரச்சனை ஒரு மிகப்பெரிய பிரச்சனை என்பதை கவனத்தில் கொண்டேயாக வேண்டியிருக்கிறது. அதுவும் இரவில் பயணிக்கும் மக்கள் அனுபவிக்கும் தொல்லை சொல்லி மாளாது. இருசக்கர வாகன வாசிகளை நாலு கால் பாய்ச்சலில் த...
More

TIPS : குழந்தை வளர்ப்பின் பத்து கட்டளைகள்

  குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை. பொதுவாக எல்லோருமே குழந்தைகள் தாங்கள் நினைப்பது போல செயல்பட வேண்டும் என்றும், தாங்கள் விரும்புவது போல வளரவேண்டும் என்றும் நினைக்கின்றனர். குழந்தைகள் நமது கையில் இருக்கும் களிமண் போல. அதை நம்முடைய விருப்பத்துக்கு ஏற்ப வனைய முடியும். அதற்கு முக்கியமாக கீழ்க்கண்ட பத்து விஷயங்களைக் கவனிக்க வேண்டும். 1 பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும். பெற்றோரின் செயல்களை உள் வாங்கியே குழந்தை வளரும். தினமும் தன் தந்தையிடம் பர்சைக் கேட...
More

பெண்கள் : குனிவும்  நிமிர்வும்

  மீண்டும் ஒரு பெண்கள் தினம் நமது வாசல்களில் கோலம் போடுகிறது. காலையில் வாசலில் வந்து விழும் சூரிய ஒளியை புன்னகையால் விலக்கி, புள்ளி வைத்துக் கோலமிடும் பெண்கள் தங்கள் வாழ்க்கையை அதன் மூலம் விளக்கி விடுகிறார்கள். மனிதன் என்னதான் பெரிய புள்ளியாக இருந்தாலும், சிறிய புள்ளியாக இருந்தாலும் அதை இணைக்கும் கோடாக ஒரு பெண் இருக்கும் போது தான் கோலமாக வாழ்க்கை அழகாகிறது. இல்லையேல் வெறும் புள்ளிகளாகவும், இலக்கற்ற கோடுகளாகவும் வாழ்க்கை அழகிழக்கிறது. வரலாறுகளில் பெண்களில் வாழ்க்கை குனிவுக்கும், நிம...
More

காதலின்றி அமையாது உலகு

காற்றின் இழைகளில் மாலை வெயில் கலந்து வீசிக்கொண்டிருந்த ரம்மியப் பொழுது. மணலில் மெய் பரப்பி, காதலியின் உள்ளங்கையில் உள்ளத்தை வைத்து, அவளுடைய ரேகைகளில்ரயிலோட்டிக் கொண்டிருந்த காதலனிடம் காதலி கேட்டாள். என்னை உனக்கு எவ்ளோ புடிக்கும் ? "நாலு முழம் என அளந்து காட்ட காதலென்ன மல்லிகைச் சரமா ? இல்லை கால் கிலோ என நிறுத்துக் காட்ட காதலென்ன மளிகைச் சாமானா ?" காதலன் ரயிலின் வேகத்தில் கவித்துவம்காட்டினான். 'இருந்தாலும் சொல்லேன்' காதலி சிணுங்கினாள். சாம்ராஜ்யத்தை அசைக்கும் வலிமை காதலியின் சிணுங்கலுக்கு உ...
More

தந்தையன்பு புனிதமானது

  அன்பு என்பதைப் பற்றிப் பேசினாலே முதலில் நினைவுக்கு வருவது தாயன்பு தான். சினிமாக்களை எடுத்துக் கொண்டாலும், அங்கே தாயன்பு தான் மிக அதிகமாகப் பேசப்படுகிறது. இலக்கியங்களும் தாயன்பையே முதன்மைப் படுத்துகின்றன. அதனால், தந்தையன்பு பெரும்பாலும் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு விடும். அன்பு என்றாலே அன்னை தான் தந்தை என்பவருக்கு அந்த அளவு அன்பு இல்லை எனும் வாதங்கள் பொய் என்பதை அன்புடைத் தந்தையர் அறிந்தே இருக்கின்றனர். ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே! சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே! - என...
More

சந்தேகம் வேண்டாம். 

  வசந்திக்கு தூக்கம் வரவில்லை. சில மாதங்களாகவே கணவனின் நடவடிக்கைகளில் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிவது போல அவளுக்குத் தோன்றியது. அடிக்கடி போனை நோண்டுகிறான், யாரிடமோ பேசுகிறான். கம்ப்யூட்டரின் பாஸ்வேர்ட் மாற்றுகிறான், வீட்டுக்கு லேட்டாக வருகிறான் என பல சந்தேகங்கள். ஆனால் எப்படி அவனிடம் கேட்பது. யோசித்து யோசித்து ஓரு முடிவுக்கு வந்து விட்டாள். இன்னிக்கு ராத்திரி அவனோட மொபைலை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இரவு. கணவன் அருகில் படுத்து நல்ல தூக்கத்தில் இருந்தான். இன்னும் கொஞ்ச நேரம் காத்திருப்...
More

நன்றி + பாராட்டு = ஆனந்தம்

கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆச்சா, உஷார் ! ஏகப்பட்ட பிரச்சினைகள் இந்த காலகட்டத்தில் தான் வரும். இதை நான் சொல்லல, கனடாவிலுள்ள பிரபலமான மருத்துவர் பெர்னி கோல்டன் சொல்கிறார். யாரிந்த பெர்னி கோல்டன் ? பல ஆண்டுகளாக தம்பதியருக்கு கவுன்சிலிங் மற்றும் உளவியல் சார்ந்த ஆலோசனைகள் நல்கி வருபவர். ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் தம்பதியர் 2000 பேரை வைத்து அவர் ஒரு ஆய்வு நடத்தினார்.  அதில் தெரிய வந்த விஷயம் தான் இது. திருமணமாகி சுமார் 3 ஆண்டுகள் ஆகும் போது தம்பதியருடைய வாழ்க்கையில் அதிகப்ப...
More

தீர்ப்பிடாதீர்கள். 

வசந்திக்கு காலையில் இருந்தே மனசு சரியில்லை. இப்போதெல்லாம் கணவன் ஒழுங்காகப் பேசுவதில்லையோ, தேவையான அளவு நேரம் செலவிடுவதில்லையோ என மனதுக்குள் ஒரே போராட்டம். "அலுவலகத்தையே கட்டிக் கொண்டு அழுகிறார். அவருக்கு என்னை விட வேலை தான் முக்கியம். என்மீது அன்பே இல்லை "  என்றெல்லாம் மனதுக்குள் போராட்டம். தன்னை அறியாமலேயே இமைகளைப் பிரித்து வெளியே எட்டிப் பார்க்கும் கண்ணீர் துளிகளை உள்ளங்கையால் துடைத்துக் கொண்டே இருந்தாள். மாலையில் கணவன் வரும்போது பேசி விட வேண்டும் என அவளுடைய மனம் சொல்லிக் கொண்டே இருந்தது. என...
More