தமிழ்ப் புத்தாண்டு…

தமிழா…. இதோ உனக்கு இன்னுமோர் புத்தாண்டு. திரைப்பட வெளியீடுகள் மட்டும் தேடி இந்தப் பகலை எரித்து விடாதே. தள்ளுபடிக் கடைகளின் வாசலில் இந்த நாளை தள்ளி நகர்த்தாதே. இந்த ஒருநாள் விடுமுறை தூக்கத்துக்காய் வழங்கப் பட்ட துக்க தினமல்ல. உன் சோம்பேறித் தனத்தை சொறிந்து கொள்ளக் கிடைத்த நக நாளும் அல்ல. இது, உள்ளொளிப் பயணத்துக்கான ஒரு நாள். ஒரே ஒரு கேள்வி உன்னையே கேட்டுப்பார், தாண்டிப் போன வருடத்தில் தமிழனாய் தான் இருந்தேனா என்று.
More

கிராம வைத்தியம்

கால்விரலில் அடிபட்டால் அதில் மூத்திரம் பெய்தால் போதும் சரியாகிவிடுமென்பார் தாத்தா. அதெல்லாம் என்ன எழவு ? சாம்பல் போடு புண்ணு பொறுக்கும் என்பார் பாட்டி. வேப்பெண்ணையை லேசா சூடாக்கி காயத்தில் தடவுப்பா, சரியாயிடும் என்பார் அப்பா. எல்லாம் நினைவில் இருந்தாலும், அவசரமாய் காரோட்டி இன்சூரன்ஸ் கார்ட் காட்டி கிரடிட் கார்ட் தேய்த்து பெருசாய் பேண்டேஜ் போட்டு கூட்டி வருகிறேன் மகனை.
More

இப்படியும் சில கவிதைகள்

காய்க்காவிட்டாலும் மாமரம் மாமரம் என்பது மாமரத்துக்குத் தெரிந்தே இருக்கிறது ! மனிதர்களுக்குத் தான் தெரிவதில்லை. * தம் வாங்கி இழுத்தான் சியர்ஸ் சொல்லிக் குடித்தான் அப்போது அவனும் நானும் சமத்துவ பியர் ஜாதி. வெளியே வருகையில் சொன்னான் அவன் மட்டும் உயர் ஜாதி ! * செண்ட் அடித்து திரும்பிய போது மனம் சொன்னது இதுக்கு வியர்வை நாற்றமே பரவாயில்லை !
More

ரப்பர்

கொல்லையில் தவறாமல் வாழை மரங்கள், பப்பாளி மரங்கள். தோப்பில் கம்பீரமாய் தென்னைமரங்கள், கிணற்றின் ஓரமாய் கரும்புகள் சில மேற்குப் பக்கம் கொய்யா மரம் சில மாமரங்களோ எல்லா பக்கங்களிலும் ! தெற்குப் பக்கத்தில் நல்ல மிளகாய் சுற்றி விட்ட அயனி மரங்கள். தோட்டத்தில் முழுக்க மரவள்ளிக் கிழங்கு, தோட்டத்து ஓரத்தில் வேலி போல பலா மரங்கள். புளிய மரம் வேப்பமரம், நாரந்தி, என வாலாய் நீளும் பட்டியல் பருவங்கள் தோறும் வாசனை விரிக்கும் வீட்டைச் சுற்றி. இன்றோ, முக் கனிகள் முக்கியம...
More

உன்னைப் பிரிந்தபின்

  உன்னைப் பிரிந்தபின் என் வாழ்க்கை வயலில் விளைச்சலே இல்லை, என் ஆனந்தத் தோட்டத்தின் திராட்சைச் செடிகள் வைக்கோல்களாய் உருமாறிவிட்டன. என் கனவுகளின் கதவிடுக்கில் இன்னும் உன் குரலே கசிகிறது நாம் செலவிட்ட பொழுதுகளின் விழுதுகளில் தான் ஊசலாடுகிறது எனது இயக்கமும் உயிரின் மயக்கமும். என்றெல்லாம் சொல்வாய் என நம்பிக் கொண்டிருந்தேன். உன் பிரிவின் கண்ணீர் துளியைக் கையில் ஏந்தியபடி. உற்சாக அரட்டையும், பரவச விளையாட்டுமாய் ஆனந்தமாய் விளையாடிக் கொண்டிருக்கிறாய் மழ...
More

ஆட்டைத் தொலைத்த இடையனைப் போல…

  ஆட்டைத் தொலைத்த இடையனைப் போல தேடிக் கொண்டிருக்கிறேன் கவிதை வரிகளை, அது யாராலோ களவாடப்பட்டிருக்கலாம். வேண்டுமென்றே வெளியேறிச் சென்றிருக்கலாம். முள் செடிகளிடையே முடங்கியிருக்கலாம். பள்ளத்தில் விழுந்து காயமாகியிருக்கலாம். அல்லது வெள்ளத்தில் விழுந்து மாயமாகியிருக்கலாம். எனினும் தேடல் தொடர்கிறது. கட்டப்படாத வார்த்தைக்குக் கட்டுப்பட மறுக்காத ஆடுகள் எனது. தொலைந்த ஆட்டின் வரவுக்காய் மலையடிவாரத்திலேயே காத்திருக்கின்றன மிச்சம் தொன்னூற்று ஒன்பது ஆடுகளு...
More

கவிதைப் பயணம்

ஏதோ ஓர் தூரத்து இலக்கை இலட்சியமாய்க் கொண்டு என்னுடைய கவிதைகள் ஓடத்துவங்குகின்றன. பல வேளைகளில் மரத்துப் போய்க்கிடக்கும் கால்களை நான் தான் வலுக்கட்டாயமாய் வெளியே அனுப்புகிறேன். எல்லையின் வரைபடத்தை உள்ளுக்குள் எழுதிக் கொண்டாலும் அது தலை தெறிக்க ஓடுகிறது தாறுமாறாய்ப் பாய்கிறது. நான் தடுப்பதில்லை. அதற்குரிய சுதந்திரத்தை நான் கொடுப்பதில்லை, அதுவாய் எடுத்துக் கொள்கையில் எதிரே நிற்பதும் இல்லை. திசைகளையும் பருவங்களையும் மறந்து விட்டு பல வேளைகளில் அது எங்கோ ச...
More

காதலியுங்கள்

காதலியுங்கள் பாதங்களுக்குக் கீழ் ஓர் பூந்தோட்டம் தொடர்ந்து வரும். ஆழ்மனதில் தினமும் அகழ்வாராய்ச்சி நடக்கும் நீர்த்துளியிலிருந்தும் மேகத்தைப் பிரித்தெடுக்கும் மந்திரம் புலப்படும் வார்த்தைகள் வலுக்கட்டாயமாய் வெள்ளையடிக்கப்படும் விரல்களின் நுனிகளிலும் சிறகுகள் முளைக்கும் சுவாசிக்க மறந்து நாசிகள் நங்கூரமிடும் இமைகளை மறந்து விழிகள் விரிந்திருக்கும் நயாகராவின் நீர்ச்சரிவும் நிசப்த மண்டபமாகும் உயிருக்குள் ஓர் உருக்காலை உற்பத்தியாகும் மனசுக்குள் நிதமும் ...
More

அருகிலிருக்கும் தூரம்

முன்பெல்லாம் பத்து மைல் என்றாலே பதட்டப் படாமல் நடந்து சென்றனராம். அதிகாலைச் சந்தைக்கும் மாலை நேர மாட்டு வியாபாரத்துக்கும். முக்கால் மைல் என்றாலே முட்டி வலிக்கிறது எனக்கு. அன்றெல்லாம் நேரம் தேவைப்பட்டது நடந்து நடந்தே இடத்தை அடைய. இப்போது அது இல்லை அதனால் தானோ என்னவோ, ஆயுளிலும் தரப்படுகிறது ஐம்பது சதம் தள்ளுபடி.
More