உனது குரல்

எப்போதோ நீ விட்டுச் சென்ற குரலின் விரல்களை இன்னமும் இறுகப் பற்றிக் கொண்டு நடக்கிறேன். பார்வையற்ற ஒருவனின் பாதங்களுக்குக் கீழே பரவும் வெளிச்சம் போல பயனற்று வழிகிறது என் எதிர்பார்ப்பின் கதறல். உன் குரலில் இப்போது இனிமை கூடியிருக்கலாம். அல்லது கரகரப்பு கலந்திருக்கலாம். அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவற்றில் மிகப் பழமையான சிற்பம் போல, அதிகபட்சக் கவனத்துடனே அன்றைய உன் குரலை பாதுகாக்கிறேன். அந்தக் ஒலிக்குள் இருக்கும் மொழி என்னைக் காயப்படுத்திய விலகலின் வார்த்தை தான், ...
More

துளி

நீளமான ஒரு மழைத்துளி போல அகல் விளக்கில் எரிகிறது ஒரு துளி நெருப்பு. பதறியோடும் பறவைக்கூடம் போல நாலாபக்கமும் சிதறி ஓடக் காத்திருக்கிறது அந்த ஒரு துளிக்குள் ஒளிந்திருக்கும் ஏழ் கடல். பெருமழையின் முதல் துளி அழகாய் தான் விழுகிறது. நாற்படை போல வெறித்தனமாய் ஓடி நாலா பக்கமும் முற்றுகையிட்டு ஊரைக் கைப்பற்றிக் கொள்ளாதவரை திரிக்கு மேல் அமைதியாய் அமர்ந்திருக்கும் சுடரைப் போல மழை அழகாய் தான் இருக்கிறது. சிறு காற்றுக்கே அணையக் கூடுமெனினும் ஏதாவது ஒரு கரம் அதை ஆதரவாய்ப...
More

பெறுதல்

ஆயிரம் பேர் கூடியிருக்கும் அவையில் எனக்குப் பொருளுதவி செய்யாதே. விரும்பினால் என் குடிசைக்கு வந்து யாருமறியாமல் தந்து போ நீ தரவிரும்பியவற்றை. கனம் குறைந்திருந்தாலும் மனம் நிறையும் எனக்கு. உன்னுடைய அன்பளிப்புகளை ஆலய முற்றங்களில் கூனிக் குறுகிப் பெற்றுக் கொள்ள வலிக்கிறது. நான் ஏழையென்பதை பிரகடனப் படுத்துவதற்காய் பொதுக்கூட்டங்கள் போடாதே. பசியை விட பட்டினியை விட சாவை விடக் கொடுமையானது எல்லோரையும் விட நான் தாழ்ந்திருப்பதாய் நீ அறிவிப்புக் கூட்டம் நடத்துவது. ...
More

வினாடி

ஒவ்வோர் வினாடியை இழக்கும் போதும் கவலையாய் இருக்கிறது. ஏதோ ஒரு ஆனந்தம் என் கைகளை விட்டு விட்டு விடைபெற்றுச் செல்வதாய். ஏதோ ஒரு நிறைவு என்னை நிறைவில்லாமல் செய்வதாய், ஏதோ ஓர் மகிழ்வின் ஈரத் துளி உலர்ந்து போவதாய் வலிக்கிறது. அந்த உணர்வுகளுக்குள் புரளுகையில் கடந்து போகின்றன மேலும் சில வினாடிகள். ஒவ்வோர் வினாடியையும் இழுக்க வேண்டும் நிமிடமாய் மணியாய் காலமாய்... அந்த வினாடிக்குள் வாழவேண்டும் என் மழலையில் அழைத்தல் ஒலிக்குள் அடைபட்டு. விலகிப் போகாத வினாடிக...
More

கலையாத சுவடுகள்

புதிய வெளிச்சங்கள் பழைய பிரமிப்புகளை புறக்கணிப்பின் பக்கமாய் புரட்டிப் போடுகிறது. வெளிநாட்டுப் பயணத்தைத் துவங்குகையில் அழகாய்த் தெரிந்த சென்னை விமான நிலையம் திரும்பி வருகையில் அழகின்றிக் கிடந்தது. அனுமன் தோள் சஞ்சீவி மலைபோல, காலம் தன் தோளில் பல வருடங்களைச் சுருட்டிக் கட்டிப் பறந்தபின் எனக்கு ஆனா ஆவன்னா அறிமுகப்படுத்திய ஆரம்பப் பாடசாலைக்குச் சென்றிருந்தேன். கடலெனத் தெரிந்த பள்ளி மைதானம் இப்போது கையளவாய்த் தோன்றியது. பெரிதாய்த் தெரிந்த பெஞ்சுகள் முழங்காலின் ...
More

புதிதென்று ஏதுமில்லை

'இன்று என்ன புதிதாய் ? ' என்று ஆரம்பித்தே பழகி விட்டாய். பழையவற்றை அசைபோட யாருக்கும் நேரமிருப்பதில்லை. தேவையானதெல்லாம் புதியவை மட்டுமே. அந்தப் புதியவற்றின் வால் பிடித்துக் கீழிறங்கினால் பழைய படிக்கட்டுகள் இடறுகின்றன. எப்போதோ புதியதாய் விசாரிக்கப்பட்ட பழையவை. எழுதி முடித்ததும் பழையதாய்ப் போய்விடும் இந்த கவிதை உட்பட எதுவுமில்லை என்னிடம் புதியதாய்.
More

அப்பாவே தான்

அப்பா தான் எல்லாம் கற்றுத் தந்தார். எல்லாம். மரண வீடுகளில் ஒலிக்கும் ஒப்பாரியை விட மிக மிக நீளமானது அதைத் தொடர்ந்து நிலவும் மெளனம், என்பது உட்பட. ஃ
More

இரகசியம்

உன்னிடம் இரகசியங்கள் இல்லையென்றே கருதியிருந்தேன் அக்கணம் வரை. நீ சொல்லியவை எல்லாமே இரகசியங்கள் என்றும் பிரசுரிக்கத் தகுதியற்றவை என்றும் அக்கணம் தான் எனக்கு அறிவித்தது. இரகசியங்கள் இரசிப்பதற்கானவை அல்ல அவை குருதி தோய்ந்த வலிகள் என்பதையும் அக்கணமே தெரிவித்தது எனக்கு. இனிமேல் என்னிடம் சொல்ல உனக்கு இரகசியங்கள் இருக்கப் போவதில்லை. நானே உனக்கு ஓர் இரகசியமாகி விட்ட பிறகு.
More

கலைதல்

காலையில் அங்கே இருந்த நிழல் மாலையில் அங்கே இல்லை. காலையில் மெளனமாய் நின்றிருந்த காற்று இப்போது அவ்விடத்தில் இல்லை. அப்போது பார்த்த ஓரிரு பல்லிகளை இப்போது காணவில்லை காலையில் வீட்டுக்குள் கிடந்த நான்கைந்து துண்டு வெயில்கள் கூட வெளியேறியிருக்கின்றன. ஆனாலும் கதவு திறந்து நுழைகையில் நினைத்துக் கொள்கிறோம் எல்லாம் அப்படியே இருக்கின்றன. ஃ
More

விழாக்கால வாழ்த்துக்கள்

வயலோர ஒற்றையடிப்பாதையில் சாயமிழந்து போன சைக்கிளை நிறுத்தி வைத்து விட்டு வருவார் தபால்காரப் பெரியவர். கிறிஸ்மஸ், புது வருடம், பொங்கல் என ஒவ்வோர் பண்டிகைக்கும் அவருக்கான காத்திருப்பு அதிகரிக்கும். காத்திருத்தலைக் கலைக்க ஒரு சில வாழ்த்துக் கடிதங்களேனும் இருக்கும் அவருடைய கைகளில் எனக்காய், எப்போதும் தோன்றியதே இல்லை அவருக்கும் ஓர் வாழ்த்துக் கடிதம் அனுப்ப.
More