டாப் 10 : விடுபடா மர்மங்கள்

1.   வாய்னிச் எழுத்துகள்   பதினைந்தாம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் ஒரு நூல் இது. படங்களும், எழுத்துகளும், குறியீடுகளும் நிரம்பியிருக்கும் இந்த‌ நூல் 240 பக்கங்கள் கொண்டது. இந்த நூல் சொல்ல வரும் விஷயம் என்ன என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. இடமிருந்து வலமாக, மிகத் தெளிவாக படங்களோடு எழுதப்பட்டிருக்கிறது இந்த நூல். அப்புறம் ஏன் வாசிக்க முடியவில்லை என வியக்காதீர்கள், அது என்ன எழுத்து, என்ன மொழி என்பது தான் புரியாத புதிர். இப்படி ஒரு மொழி எங்கும் இர...
More