மின் வெட்டு

      நள்ளிரவு நேரத்து மின் வெட்டுகள் வணக்கத்துக்குரியவை.   பக்கத்து வீடுகளில் வசிப்போரின் எண்ணிக்கையை மொட்டை மாடிகளில் கணக்கெடுக்க அப்போது தான் வாய்க்கிறது  
More

காதலியுங்கள், ஆனால் !…

வாழ்க்கையை அழகாக்கும் வலிமை படைத்த மிகச் சில விஷயங்களில் காதலும் ஒன்று ! “உலகின் மிக அழகான பொருட்களை தொடடோ, பார்க்கவோ முடியாது” என்கிறார் ஹெலன் கெல்லர். அழகானவை பொருட்களல்ல, உணர்வுகளே என்பதையே அவருடைய வார்த்தைகள் உணர்த்துகின்றன. அன்பு செய்வதும், அன்பு செய்யப்படுவதும் தான் உலகின் உன்னதமான விஷயங்கள் என்பதில் சந்தேகமில்லை. அந்த அன்பின் ஒவ்வோர் பக்கத்திலும் ஒவ்வோர் வாசனை ! இளைஞர்களின் வாழ்க்கைப் பக்கத்தில் அதிகமாய் வீசும் வாசனை, காதல் ! காதலும், காதல் சார்ந்த இடங்களும் தான் இளைஞர்களின் எல்...
More

பழைய நண்பர்கள்

நேர்கின்றன, பழைய நண்பர்களை எதேச்சையாய் சந்தித்துக் கொள்ளும் பரவசப் பொழுதுகள். கண்களில் மிதக்கும் குறும்புகளைத் தொலைத்தும், உரக்கப் பேசும் இயல்புகளைத் தொலைத்தும் புது வடிவெடுத்திருக்கிறார்கள் பலர் பலருடைய மனைவியர் பெயரில் கல்லூரி கால காதலியர் பெயர் இல்லை. ஒருவேளை குழந்தைகளின் பெயரில் இருக்கக் கூடும். ஒல்லியானவர்களை தொப்பையுடனும், குண்டானவர்களை ஒல்லிக்குச்சானாகவும் சந்திக்க நேர்ந்திருக்கிறது. சாலையோர தேனீர் கடையில் டீ குடித்து நினைவு கிளறிய நிம்மதியில் விடை ...
More

கவிதை : மருதாணிக் கனவுகள்

அத்தனை குதிரைகளும் விடுப்பில் இருந்தாலும் காலத் தேர் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது. என் வீட்டின் மெழுகிய திண்ணை சிமின்ட் பூசப்பட்டு, இப்போது கம்பி வேலைப்பாடுகளுக்குள் கைதியாய், பின்பக்கம் இருந்த சாம்பல் கூடும், சருகுக் குழியும் ஸ்டவ் மேடைகளுக்கு கீழ் சமாதியாய், ஓட்டை வெறித்துப் பார்க்கும் என் படுக்கையறைக் கட்டில் இப்போது பாதி வழியில் காங்கிரீட் தட்டினால் தடுத்து நிறுத்தப்படுகிறது, அந்த நடு அறையின் பலகை அலமாரி தந்த வேப்பெண்ணை வாசம் இப்போதெல்லாம் வீசவில்லை விட...
More

கவிதை : மலைகளுக்கு மாலையிடு.

  மலைகளே... பூமிப் பந்தின் கர்வக் கிரீடங்களே, மலைகளே, மலைப்பின் மறு பெயர்களே. உங்கள் தலை துடைக்க மென்மையின் மேன்மையான மேகத் துகள். உங்கள் உள்ளுக்குள் ஒளித்து வைத்திருக்கிறீர்கள் ஓராயிரம் ஒய்யாரச் சிற்பங்கள். காற்றுக்கும் கதிரவனுக்கும் கலங்காத கருங்கல்  இதயம் உனக்கு., உன்னை எப்படிப் புகழ்வது ? நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் வீரத்துக்கா, சில செடிகளுக்கு வேர் விட வழி விடும் ஈரத்துக்கா ? உன் மர்மப் பிரதேச மரக்கிளைகளில் தான் உண்மைச் சங்கீதம் உறங்கியே கிடக்கிற...
More

கவிதை : வாடகை அலைகள்

உன் வாழ்க்கை உனக்கான விருது, யாரோ தைத்த பொருந்தாத சட்டைக்குள் நீ நுழைய வேண்டிய நிர்ப்பந்தம் என்ன ? நிலம் மாறி நட்டாலும் மல்லி வாசம் மாறி வீசுமா ? தோட்டக் காரன் நட்டாலும் வீட்டுக் காரன் வைத்தாலும் ரோஜா பாகுபாடின்றி பூத்திடாதா ? உன்னை நீயே வனைந்து முடி, உன்னை விட அதிகமாய் உன்னை நேசிப்பவன் யார் ? உன்னை விட அழகாய் உன் இயல்புகள் அறிந்தவன் யார் ? உள்ளுக்குள் முத்திருக்கும் உண்மையை சிப்பியை விட அருகில் சீக்கிரமே உணர்வது யார் ? உன் வாழ்க்கையின் அடித்தளத்தை நீயே அ...
More

கவிதை : கூடா நட்பு

உன் ஊசிக்குத்தல்கள் இணைக்க என்றே நினைத்திருந்தேன் நீ நூல் கோர்க்காமல் குத்திக் கொண்டிருந்த சேதி தெரியாமல். நீயோ இன்னும் குத்திய இடத்திலேயே குத்திக் கொண்டிருக்கிறாய் என் கிழிசல் ஒட்டுப் போடப்படவில்லை. காயங்களின் காலங்கள் நீண்டபோது என் உறக்கம் கலைத்து எட்டிப் பார்த்தேன், நூல் இல்லா நிலையும் அறிந்தேன். காரணமற்ற காரணங்களுக்காய் என் முதுகைக் காட்டிக் கொண்டிருந்த அறியாமையால் இன்னும் கொஞ்சம் கூடிப் போனது வலி. நூல் கோர்த்துக் கொள் இல்லையேல் கிழிசலோடு எனை வாழவிட...
More