கைகள்

      நெரிசல் சாலையில் தடுமாறுபவர்களை சாலை கடத்தும் கைகளை விட,   நெருப்புச் சாலையில் வியர்வை ஆறு வழிய வழிய பாரம் இழுப்பவருக்கு உதவும் கைகளை விட,   தபால் அலுவலகத்தில் நலமா எனும் நாலுவரிச் செய்தியை முதியவர் எவருக்கோ பிழையுடனேனும் எழுதித் தரும் கைகளை விட,   நீளும் வறுமைக் கைகளை வெறும் விரல்களோடேனும் தொட்டுப் பேசும் கைகளை விட,   எந்த விதத்திலும் உயர்ந்ததில்லை கவிதை எழுதும் கைகள்.
More

மின் வெட்டு

      நள்ளிரவு நேரத்து மின் வெட்டுகள் வணக்கத்துக்குரியவை.   பக்கத்து வீடுகளில் வசிப்போரின் எண்ணிக்கையை மொட்டை மாடிகளில் கணக்கெடுக்க அப்போது தான் வாய்க்கிறது  
More

பழைய நண்பர்கள்

நேர்கின்றன, பழைய நண்பர்களை எதேச்சையாய் சந்தித்துக் கொள்ளும் பரவசப் பொழுதுகள். கண்களில் மிதக்கும் குறும்புகளைத் தொலைத்தும், உரக்கப் பேசும் இயல்புகளைத் தொலைத்தும் புது வடிவெடுத்திருக்கிறார்கள் பலர் பலருடைய மனைவியர் பெயரில் கல்லூரி கால காதலியர் பெயர் இல்லை. ஒருவேளை குழந்தைகளின் பெயரில் இருக்கக் கூடும். ஒல்லியானவர்களை தொப்பையுடனும், குண்டானவர்களை ஒல்லிக்குச்சானாகவும் சந்திக்க நேர்ந்திருக்கிறது. சாலையோர தேனீர் கடையில் டீ குடித்து நினைவு கிளறிய நிம்மதியில் விடை ...
More

நட்புக் கவிதைகள்

"எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! " என சிலிர்ப்புடன் பெயர் சொல்லி அழைக்கும் நண்பனுடன் பேசுகையில் பயமாய் இருக்கிறது “எம் பேரு ஞாபகமிருக்கா” என கேட்டு விடுவானோ ? ஃ அப்பப்போ போன் பண்ணுடா… எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு “கண்டிப்பா” என நகர்வான், நான் கொடுக்காத நம்பரை அவன் எழுதிக் கொள்ளாமலேயே. ஃ பொய்கள் தான் உண்மையாகவே நட்பைக் காப்பாற்றுகின்றன. “நேற்று கூட பேச நினைத்தேன்” என யாரோ பேசிக் கடக்கிறார்கள் செல்போனில் ஃ அவளா இது ? மீன் வாங்கிச் செல்லும் பெண்ணிடம் கொஞ்...
More