தினத்தந்தி வாரம் 1 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

செல்போன்கள் பேசுவதற்கானவை எனும் காலம் மலையேறிப் போய்விட்டன‌. செல்போனில் பேசவும் செய்யலாம் என்பது தான் இப்போதையை புது மொழி. காரணம் இன்றைய செல்போன்கள் தகவல் தொடர்பு சாதனம் எனும் சின்ன எல்லையிலிருந்து கையடக்கக் கணினி எனும் நிலைக்கு இடம்பெயர்ந்தாகி விட்டது. வங்கியில் பணப் பரிமாற்றம் செய்யணுமா ? சோபாவில் அமர்ந்து கொண்டே ஷாப்பிங் செய்யணுமா ? செல்போன் பில், எலக்ட்ரிக் பில், கேபிள் டிவி பில் என பில்களையெல்லாம் கட்டி முடிக்கணுமா ? ஊருக்கு போக டிரெயின் டிக்கட், பஸ் டிக்கட், விமான டிக்கட் ஏதாச்சும் புக்...
More

புத்தகங்கள் அழியுமா ?

ஒவ்வொரு புதிய தொழில் நுட்பம் வரும்போதும் பழைய தொழில் நுட்பத்துக்கு அச்சுறுத்தல் எழும் என்பதை மறுக்க முடியாது. “ஊருக்கு போனதும் மறக்காம கடுதாசி போடுப்பா” என்று இப்போது யாராவது சொல்கிறார்களா ? அவர்களுக்கு செல்போனும், எஸ்.எம்.எஸ் ம் பக்க துணையாய் இருக்கின்றன. பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என வரிசையாய் வரும் பண்டிகைகளுக்காக கடைகளில் போய் வாழ்த்து அட்டைகள் வாங்குவது பழைய பல்லவி. இப்போது எல்லாம் மின்மயம். ஏதோ ஒரு இணையப் பக்கத்தில் போய் ஒரு வாழ்த்தை கிளிக் பண்ணி மெயில் பண்ணிவிட்டால் விஷயம் முடிந்தது ! ...
More

கண்ணோடு காண்பதெல்லாம்…

    சண்டை போடுபவர்கள் போடலாம், அடிக்க வருபவர்கள் அடிக்கலாம், நான் கூகிள் கிளாஸை, கூகுள் கண்ணாடி என்றே அழைக்கப் போகிறேன். கடந்த சில் ஆண்டுகளாகவே தொழில் நுட்பத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய கூகுள் கண்ணாடி சமீபத்தில் ஒரு நாள் முதல்வன் போல ஒரு நாள் மட்டும் விற்பனைக்கு வந்தது. ஒரு குட்டியூண்டு மூக்குக் கண்ணாடிக்குள் வயர்லெஸ், ஜிபிஎஸ், கேமரா, தொடு திரை இத்யாதி இத்யாதி என கடுகைத் துளைத்து ஆழ்கடல் தொழில் நுட்பம் புகுந்திருக்கிறது. நடந்து கொண்டே இருக்கும் போது ஒரு கட்டிடத்தைப் ப...
More

அழைக்கும் ஐடி துறை ( தினத்தந்தி கட்டுரைகள் தொகுப்பு )

அழைக்கும் ஐடி துறை 1 நீண்ட நாட்களுக்குப் பிறகு ச‌ந்தித்துக் கொள்ளும் நண்பர்கள் கேட்கும் இரண்டு விஷயம் பெரும்பாலும் இவையாகத் தான் இருக்கும். "நல்லா இருக்கியாடே... ?" "இப்ப என்ன பண்ணிட்டிருக்கே ?" வேலை என்பது ஒரு மனிதனுடைய அடையாளமாகி விட்டது. ஒரு வேலை செய்து சம்பாதிக்கணும் என்பதெல்லாம் பழைய கதை. இப்போ, வேலை என்பது ஒரு அந்தஸ்து. ஒரு சமூக அங்கீகாரம். ஒரு திருமணத்துக்கான அனுமதிச் சீட்டு என சொல்லிக் கொண்டே போகலாம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளைப் பொறுத்தவரையில் எந்த வேலை செய்தாலும் ஒண்...
More

USB Drive : கொஞ்சம் தெரிஞ்சுக்கலாமா ?

‘ஃபிளாப்பி டிஸ்ட்’ பார்த்திருக்கிறீர்களா ? நீங்கள் ‘இல்லை’ என்று சொன்னாலும் நான் ஆச்சரியப் படப் போவதில்லை. காரணம் இன்றைக்கு அது அருங்காட்சியகத்தில் ஆதிமனிதனைப் போல போல சைலன்டாகப் போய் அமர்ந்து விட்டது. ஆனால் ஒரு பத்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு நிலமை இப்படி அல்ல. ஃப்ளாப்பி டிஸ்க் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு சுற்றுவதை ஒரு கௌரவமாகவே பார்த்த தலைமுறை அது ! அதன் சேமிப்பு அளவே 1.44 மெகா பைட் தான் என்பதை நினைத்தால் வியப்பாக இருக்கும். இப்போது ஃப்ளாப்பி டிஸ்க் முற்றிலுமாக வழக்கொழிந்து போய்விட்டது....
More

வை-ஃபை (WiFi) எனும் வசீகரம்.

திரு.விக்டர் கேய்ஸ் க்கு ஒரு மிகப்பெரிய கும்பிடு போட்டு இந்தக் கட்டுரையைத் துவங்குவது தான் நல்லது என நினைக்கிறேன். ஏன்னா, 1941ம் ஆண்டு ஜூலை 31ம் ஆண்டு பிறந்த இவர் தான் “வை-ஃபை’ யின் தந்தை என்று செல்லமாய் அழைக்கப்படுகிறார். வை-ஃபை பற்றிய முன்னுரை எல்லாம் தேவையில்லை என நினைக்கிறேன். எலக்ட்ரானிக் கருவிகளை வயர் இல்லாமல் இணைத்து தகவல்களைப்  பரிமாறும் முறை தான் இந்த வை-ஃபை ! இதைச் சாத்தியமாக்கித் தருவது ரேடியோ அலைகள் ! “ கண்ணம்மாபேட்டை ஏழாவது தெருவில ஒரு ஆக்சிடன்ட் ஓவர்” என ஒரு காலத்தில் ஓவர்-ஓவராய...
More

ஜி.பி.எஸ் : தெரியும்.. ஆனா, தெரியாது

  தெரியாத ஊருக்குத் தன்னந் தனியே காரில் போகிறீர்கள் என வைத்துக் கொள்ளுங்கள். வழி கேட்கவும் யாருமில்லை ! இரவு நேரம் வேறு ! என்ன செய்வீர்கள் ? பாதி ராத்திரியில் பேயைக் கண்டது போல மிரண்டு போய்விடுவீர்கள் தானே ? அதெல்லாம் உங்களிடம் ஜி.பி.எஸ் எனும் புவியிடங்காட்டி இல்லாவிட்டால் தான் ! இப்போதெல்லாம் கார்களில் பயன்படுத்தக் கூடிய சின்ன ஜி.பி.எஸ் கருவிகள் ரொம்ப சாதாரணமாகக் கிடைக்கின்றன. “எனக்கு இந்த அட்ரஸ் போணும்பா” என விலாசத்தைக் கொடுத்தால் போதும். கிளம்பு, இங்கே லெப்ஃட் எடு, நேரா போ, அடுத்த வளைவில் ர...
More

செல்ஃபி !

1. இன்றைக்கு ஒரு தொற்று நோய் போல‌ எல்லா இட‌ங்க‌ளிலும் ப‌ர‌விவிட்ட‌து. அதிலும் குறிப்பாக‌ இள‌ம் வ‌ய‌தின‌ரிடையே அது ஒரு டிஜிட‌ல் புற்று நோய் போல‌ விரைந்து ப‌ர‌வுகிற‌து. ஸ்மார்ட் போன்க‌ள் செல்ஃபி ஆசைக்கு எண்ணை வார்க்கிற‌து, ச‌மூக‌ வ‌லைத்த‌ள‌ங்க‌ள் அதைப் ப‌ற்ற‌ வைக்கின்ற‌ன‌. த‌ன‌து செல்ஃபிக‌ளுக்குக் கிடைக்கும் லைக்க‌ளும், பார்வைக‌ளும் இள‌சுக‌ளை செல்பிக்குள் இன்னும் இன்னும் இழுத்துக் கொண்டே செல்கின்ற‌ன‌. பொது இட‌ங்க‌ளில், சுற்றுலாத் தள‌ங்க‌ளில், ந‌ண்ப‌ர் ச‌ந்திப்புக‌ளில் என‌ தொட‌ங்கி இந்த‌ செல்...
More