TIPS : விஷவாயு : தீதும், நன்றும் பிறர் தர வாரா

  சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் போபாலில் ஏற்பட்ட விஷவாயுக் கசிவும் அதன் விளைவாக நிகழ்ந்த அதிர்ச்சிகரமான மரணங்களும் இன்னும் மக்களின் கண்களில் அனலாய் வீசிக்கொண்டிருக்கிறது என்பதையே சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட மெல்லிய விஷ வாயு கசிவு ஏற்படுத்திய பீதி சுட்டிக் காட்டுகிறது. அந்த பீதி அகலும் முன்னமே ஹுண்டாய் கார் கம்பெனியில் நிகழ்ந்த விஷ வாயு கசிவும் உயிரிழப்புகளும் மேலும் பீதியை கிளப்பி விட்டிருக்கிறது. பல இலட்சம் சப்பானில் நிகழ்ந்த அணு குண்டு தாக்குதலுக்கு அடுத்தபடியாக , ரசியாவில் நிகழ...
More

நேர்முகத் தேர்வு : TIPS

  நேர்முகத் தேர்வு குறித்த பயமும், தயக்கமும் படபடப்பும் பெரும்பாலானோரிடம் இருப்பது இயல்பே. சரியான திட்டமிடுதல் மூலம் இந்த தேவையற்ற பதட்டத்தை விலக்கி நேர்முகத் தேர்வுகளில் வெற்றி பெற முடியும். நேர்முகத் தேர்வு என்பது குற்றவாளியிடம் வழக்குரைஞர் நடத்தும் விசாரணை அல்ல என்பதை முதலில் நேர்முகத் தேர்வுக்குச் செல்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தான் அந்தப் பணிக்குத் தகுதியான நபர் என்னும் எண்ணம் நிர்வாகத்துக்கு இருப்பதால் தான் தன்னை அழைத்திருக்கிறார்கள் என்னும் உயர்ந்த சிந்தனை முதலில் உள்...
More

வேலையில் ஸ்டார் ஆக 20 டிப்ஸ் !

  பலருக்கும் ஒரு வேலை வேலை வாங்க வேண்டும் என்பது தான் தலையாய பிரச்சினையாய் இருக்கும். வேலை கிடைத்தபிறகோ அந்த வேலையில் அசத்துவது எப்படி எனும் சூட்சுமம் புரிவதே இல்லை. சிலர் சடசடவென உயரத்தில் போய்விடுவார்கள். சிலர் கடைசிப் படிக்கட்டையேக் கட்டிக் கொண்டு கலங்குவார்கள்.  சரி, வேலையில் ஸ்டார் ஆக நிலைக்க என்னென்ன செய்ய வேண்டும் ? கொஞ்சம் அலசுவோமா ? வேலை கிடைத்ததும் எல்லாம் முடிந்துவிடவில்லை. இது தான் ஆரம்பமே. உங்கள் வேலையில் நீங்கள் ஜொலிப்பது தான் முக்கியம். புதிதாக வேலைக்குச் சென்றிருக்கும் ...
More

புத்தகங்கள் அழியுமா ?

ஒவ்வொரு புதிய தொழில் நுட்பம் வரும்போதும் பழைய தொழில் நுட்பத்துக்கு அச்சுறுத்தல் எழும் என்பதை மறுக்க முடியாது. “ஊருக்கு போனதும் மறக்காம கடுதாசி போடுப்பா” என்று இப்போது யாராவது சொல்கிறார்களா ? அவர்களுக்கு செல்போனும், எஸ்.எம்.எஸ் ம் பக்க துணையாய் இருக்கின்றன. பிறந்தநாள், தீபாவளி, பொங்கல் என வரிசையாய் வரும் பண்டிகைகளுக்காக கடைகளில் போய் வாழ்த்து அட்டைகள் வாங்குவது பழைய பல்லவி. இப்போது எல்லாம் மின்மயம். ஏதோ ஒரு இணையப் பக்கத்தில் போய் ஒரு வாழ்த்தை கிளிக் பண்ணி மெயில் பண்ணிவிட்டால் விஷயம் முடிந்தது ! ...
More

புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !

    நிறைய விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது ? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும். தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான...
More

அசத்தப் போகும், NFC !

பழைய கால “சூப்பர் ஸ்டார்” படங்களில் ஒரு காட்சி வரும். ஹீரோ ஸ்டைலாக கையைத் தூக்கி கதவை நோக்கி நீட்டுவார். கதவு திறந்து கொள்ளும். ஞாபகம் இருக்கிறதா ? கைத்தட்டல்களால் திரையே கிழிந்த காலம் அது ! இப்போது அப்படி ஒரு காட்சி வந்தால் நாம் கொட்டாவி தான் விடுவோம். காரணம், நமது அலுவலகங்களிலேயே தானே திறக்கும் கதவுகள் தான் இருக்கின்றன ! சென்சார்கள் கதவைத் திறந்து விடும் செக்யூரிடி வேலையை செவ்வனே செய்து விடுகின்றன ! அதே போல தான் அமானுஷ்ய படங்களில் சட்டென டிவி ஓடுவதும். டேப் ரிக்கார்டர் பாடுவதும் என வெலவெலக்க ...
More

POS ! என்ன ? ஏன் ? எப்படி ?

“சார், லைஃப் டைம் ஃபிரீ கிரெடிட் கார்ட் சார்.. வாங்கிக்கிறீங்களா ?” என வசீகரிக்கும் குரலில் உங்களுக்கு பல முறை அழைப்புகள் வந்திருக்கலாம் ! காரணம் கார்ட்களுக்கு இருக்கக் கூடிய மார்க்கெட் மற்றும் தேவை. காய்கறி வாங்குவதற்குக் கூட கிரடிட் கார்ட் எடுத்துக் கொண்டு போவது நகர்ப்புறங்களில் இன்றைக்கு சர்வ சாதாரணம். கிரடிட் கார்ட் வேண்டாம் என நினைப்பவர்களிடமும் இருக்கவே இருக்கும் ஒரு டெபிட் கார்ட். மிச்சம் வைக்காமல் மாதா மாதம் பணம் கட்டுபவர்களுக்கு கிரடிட் கார்ட் ரொம்பவே வசதி. மாதா மாதம் ஒழுங்...
More

IOT : பொருட்களின் இணையம் ! .. தெரிஞ்சுக்கோங்க !

<a href="http://sirippu.wordpress.com/2012/12/14/iot/internet-of-things/" rel="attachment wp-att-2824"><img class="alignleft size-medium wp-image-2824" alt="Internet-of-Things" src="http://sirippu.files.wordpress.com/2012/12/internet-of-things.jpg?w=300" width="300" height="208" /></a>“<strong><span style="color:#ff0000;">இ</span></strong>ன்டர்நெட் ன்னா என்னங்க ? ” என யாரிடமாவது கேட்டால் நம்மைப் பார்த்து அவர்கள் வயிறு வலிக்கச் சிரிக்கக் கூடும். “இந்தியாவ...
More

கண்ணோடு காண்பதெல்லாம்…

    சண்டை போடுபவர்கள் போடலாம், அடிக்க வருபவர்கள் அடிக்கலாம், நான் கூகிள் கிளாஸை, கூகுள் கண்ணாடி என்றே அழைக்கப் போகிறேன். கடந்த சில் ஆண்டுகளாகவே தொழில் நுட்பத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய கூகுள் கண்ணாடி சமீபத்தில் ஒரு நாள் முதல்வன் போல ஒரு நாள் மட்டும் விற்பனைக்கு வந்தது. ஒரு குட்டியூண்டு மூக்குக் கண்ணாடிக்குள் வயர்லெஸ், ஜிபிஎஸ், கேமரா, தொடு திரை இத்யாதி இத்யாதி என கடுகைத் துளைத்து ஆழ்கடல் தொழில் நுட்பம் புகுந்திருக்கிறது. நடந்து கொண்டே இருக்கும் போது ஒரு கட்டிடத்தைப் ப...
More

தொடு திரைத் தொழில்நுட்பம்

 தொழில் நுட்பம் ஒவ்வோர் காலகட்டத்திலும் ஒவ்வொரு அதிசயப் பக்கத்தை விரிப்பது வழக்கம். சினிமா உருவான காலத்தில் திரையில் அசையும் காட்சிகள் பிரமிப்பாய் இருந்தன. அது மிகப்பெரிய தொழில் நுட்பப் புரட்சி. முதலில் திரையிடப்பட்ட காட்சி இது தான். “தூரத்திலிருந்து ஒரு இரயில் வண்டி ஓடி வருகிறது”. அதை திரையிட்டபோது தியேட்டரில் இருந்தவர்களெல்லாம் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள். அது திரையைக் கிழித்துக் கொண்டு வந்து தங்களை இடித்து விடும் என பயந்தார்கள் ! சினிமா இன்றைக்கு பல்வேறு மாற்றங்களைக் கண்டு மிரட்டும் வகைய...
More