கிறிஸ்தவம் : குழந்தைகளும், கிறிஸ்தவமும்

இறைவனின் குழந்தைகள். "உனக்கு என்ன கொழுந்த பொறந்திருக்கு ?" "ஆம்பள !" "நல்லாயிருக்கட்டு பிள்ள.. நல்லாயிருக்கட்டு" "உனக்கு ஆணா பெண்ணா ?" "பெண்ணு.." "ஆணாயிருந்தா என்ன பெண்ணா இருந்தா என்ன ? ஆயுசோட இருக்கணும். அத்தற தேன்" ஒரு சில பத்து ஆண்டுகளுக்கு முன் நம்ம ஊர் கிராமங்களில் இத்தகைய உரையாடல்கள் சர்வ சாதாரணம். ஆண் குழந்தையென்றால் உடனடி மகிழ்ச்சி ! மனப்பூர்வமான வாழ்த்துகள். பெண் பிள்ளையெனில், "சரி, கடவுள் கொடுத்தது நல்லா இருக்கட்டும்" எனுமளவில் ஒரு வார்த்தை ! ஒரு ஆறுதல் வார்த்தை போல. ஒருவேளை ...
More

நிறைவாகத் தருகிறவர்.

  அதிகமாகப் பிறருக்குக் கொடுக்கும் நபர்களை எல்லோரும் பாராட்டுவார்கள். "அவன் கிள்ளிக் கொடுக்கிற ஆள் இல்லடா, அள்ளிக் கொடுக்கிற ஆள்" என புகழ்ந்து தள்ளுவார்கள். கஞ்சன் எப்போதுமே சமூகத்தில் இழிவான பெயரைத் தான் சம்பாதிப்பான். அவன் சுயநலத்தின் சுருக்கமான வடிவம். நமது தேவன் நிறைவாகக் கொடுக்கிற தேவன். நமது தேவன் மிகுதியாகக் கொடுக்கிற தேவன். ஐந்து அப்பம் இரண்டு மீனை பகிர்ந்து கொடுத்தபோது பன்னிரண்டு கூடைகள் மிகுதியாய் இருந்தன. போதும் போதும் எனுமளவுக்கு சாப்பிட்டார்கள். நிறைவைத் தாண்டியும் அவ...
More

உயிர்ப்பு தரும் உத்தரவாதம்.

உலக வரலாற்றில் நிகழ்ந்த மிகப்பெரிய நிகழ்வு இறைமகன் இயேசுவின் உயிர்ப்பு தான். இயேசுவின் பிறப்பு உலகிற்கு வியப்பாய் இருந்தது. இயேசுவின் உயிர்ப்பு உலகிற்கு மீட்பாய் மிளிர்ந்தது. உயிர்ப்பு இல்லையெனில் கிறிஸ்தவ நம்பிக்கைகளும், விசுவாசமும் வலுவிழந்து போய்விடும். உயிர்ப்பே நமக்கு அடிப்படை. எனவே தான் அப்போஸ்தலர்களும், ஆதிகால கிறிஸ்தவ தலைவர்களும் தங்கள் போதனைகளை சிலுவையிலிருந்தும், இயேசுவின் உயிர்ப்பிலிருந்து துவங்கினார்கள். இயேசுவின் உயிர்ப்பு நமக்குத் தருகின்ற உத்தரவாதங்கள் நமது ஆன்மீக வாழ்க்கைய...
More