அச்சம் என்பது மடமையடா திரை விமர்சனம்

கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு எனும் அதே வெற்றிக் கூட்டணியின் வந்திருக்கும் படம் அச்சம் என்பது மடமையடா. கௌதம் படங்களின் டிரென்டுக்கு மாறாக இதில் படித்த கதாநாயகன். அரியர் வைக்காத நாயகன். ஏன் இந்தப் படத்தில் மட்டும் கதாநாயகன் எம்பிஏ எல்லாம் படித்தான் என்பது கிளைமேக்ஸ் காட்சியில் விளங்கும். வழக்கம் போல ஜாலியாய் நண்பர்களுடன் கேரம் விளையாடியும், பளிச் வசனங்கள் பேசியும் பொழுதைக் கழிக்கும் சிம்புவுக்கு பெண்களைப் புரிந்து கொள்ளும் வரம் கைவரவில்லை. இரண்டு தங்கைகள் இருந்தும் பெண்களின் மனத...
More

ஆண்டவன் கட்டளை : கிராமம் vs நகரம் ( திரை விமர்சனம் )

கிராமம், அடிமைகளையும் ராஜாவாய் உலவ வைக்கும் நகரம், ராஜாக்களையும் அடிமைகளாய் அலைய வைக்கும் புதிய நூறு ரூபாய் நோட்டு ஒன்றை இரண்டாய் மடித்து அதன் நிறம் வெளியே தெரியக்கூடிய ஒரு மெல்லிய சட்டையில் போட்டுக் கொண்டு, லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு நடப்பான் கிராமத்து ராஜா. அவனுக்கு வேறெதைப் பற்றியும் கவலையில்லை. முற்றத்துக்கு வெளியே கிடக்கும் காற்றும், காற்று முதுகு தடவிவிடும் நாற்றும், சோர்வுகளைக் கழற்றி எறியும் ஆறும் அவனுக்கு இலவச சேவை செய்யும். உறவுகளும், நட்பும், ஆடம்பரங்கள் தேவைப்படாத வ...
More

கிடாரி ஒரு தாமதமான‌ விமர்சனம்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சிப் பூ பூக்கும் என்று சொல்வார்கள். பன்னிரண்டு ஆண்டுகள் திரைத்துறையில் உதவி இயக்குனர், நிர்வாகத் தயாரிப்பாளர் என பல்வேறு தளங்களில் பணியாற்றிய பிரசாத் முருகேசன் இந்தப் படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்தப் படத்துக்காக சுமார் இரண்டு ஆண்டுகள் காத்திருந்ததாக ஒரு பேட்டியில் அவர் சொன்ன ஞாபகம். இருக்கட்டும் படத்துக்கு வருவோம். கொம்பையா பாண்டியன் எனும் சாத்தூர் பகுதி கட்டப்பஞ்சாயத்து கில்லாடி குத்தப்படுகிறார். "என்னது ஆணிவேரையே சாச்சுடாய...
More

ஜோக்கர் : திரை விமர்சனம்

ஒரு ஆப்பிள் பழத்துக்குள் இருக்கும் விதைகளை எண்ணி விட முடியும். ஆனால் ஒரு விதைக்குள் இருக்கும் ஆப்பிள் பழங்களை எண்ணி விட முடியாது ! ஜோக்கர் திரைப்படம் அப்படி ஒரு விதையாக தமிழ்த் திரையுலகிலும், தமிழ் சமூகத்திலும் விழுந்திருக்கிறது. அது எத்தனை கனிகளைக் கொடுக்கப் போகிறது என்பது அந்த விதை விழுந்த நிலங்களைப் பொறுத்தது. மனநிலை சரியில்லாதவன் போன்ற ஒரு ஜோக்கரை அறிமுகப்படுத்தி, அவனது வாழ்க்கையையும், வலியையும், சமூக அக்கறையையும் காட்சிப்படுத்தி, கடைசியில் "ஜோக்கர் யாருப்பா ? அவனா ? நீயா ? " என கொ...
More