இருமுகன் : திரை விமர்சனம்

மிரட்டலாய் ஆரம்பிக்கிறான் இருமுகன். போர்ன் அல்டிமேட்டம் இசையின் சாயலில், ஹாரிஸ் ஜெயராஜின் இசைக்கோர்வையில், ஒரு மிரட்டலான தொனியில் படம் ஆரம்பிக்கிறது. கற்கால மனிதன் முதல் தற்கால மனிதன் வரை, மனித வரலாற்றில் வன்முறை ஆயுதங்களின் வளர்ச்சி, ஓவியங்களாக பின்னணியில் ஓட "வாவ்.. என மனம் ஒரு வண்ணத்துப் பூச்சியைப் பறக்க விடுகிறது" ஒரு எழுபது வயது முதியவர், மலேஷியாவிலுள்ள இந்தியன் எம்பஸிக்குள் நுழைகிறார். இன்ஹேலர் ஒன்றை அடிக்கிறார், அசுர பலம் வருகிறது. அதிரடி சரவெடியாய் ஒரு சண்டை. படத்தின் மீதான எதி...
More