காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை

    மகிழ்ச்சி !   காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை. எல்லா காதலும் கல்யாணத்தில் முடிந்திருந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆரம்பப் பள்ளியின் அரும்பு நாட்களில் கண்களுக்குள் சின்ன மின்மினிக் காதல் ஒன்று விட்டு விட்டு ஒளிகொடுக்கும். கணக்கு பாடத்தின் விடையைக் காட்டிக் கொடுத்ததன் மூலமாகவோ, இருந்த பலப்பத்தை இரண்டாய் ஒடித்து பாதி கொடுத்த பாசத்தின் பார்வையிலோ அந்த மின்மினிகள் தோன்றியிருக்கலாம். காமத்தின் அரிச்சுவடி கூட அருகில் நுழையாத, ...
More