இயேசுவின் வரலாறு 25 : வலுவான போதனைகள்

தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுபவரே தாயும் சகோதரியும் ஃ இந்த நிகழ்ச்சிக்குப் பின் இயேசுவைக் குறித்த பேச்சுகள் இன்னும் தீவிரமடைந்தன. இயேசுவை ஆதரித்தும் அவருடைய செயலை எதிர்த்தும் மக்களிடையே இருவேறுபட்ட பேச்சுகள் உலவின. இயேசுவின் பாதத்தைத் கண்ணீரால் துடைத்தவன் விபச்சாரத் தொழில் செய்து வந்த பெண். பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த, பாவி என்று மக்களால் அழைக்கப்பட்ட பெண் இயேசுவைத் தொட்டாள் என்பதே அவருடைய இறைவாக்கினர் என்னும் அடைமொழிக்கு எதிரானது என்பது ஒரு தரப்பு மக்களின் வாதம். பாவிகளைக் கூட மன்ன...
More

இயேசுவின் வரலாறு 24 : பாதத்தில் கழுவப்பட்ட பாவம்

  சீமோன் என்னும் பரிசேயர் ஒருவர் இயேசுவை விருந்துக்கு அழைத்தார். அவர் இயேசுவின் மீது முழு நம்பிக்கை கொண்டிருந்தவர் அல்ல, சட்டதிட்டங்களின் மேல் சுற்றிக் கிடந்தவர் தான். இயேசுவின் புகழைக் கேள்விப்பட்டு அவரை நேரடியாக சந்தித்து அவரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது. இயேசு எல்லா இடங்களிலும் பரிசேயர்களை எதிர்த்து வந்ததால் இந்த அழைப்பை ஏற்பாரா என்னும் சந்தேகமும் அவரிடம் இருந்தது. இயேசு அழைப்பை ஏற்றுக் கொண்டால் அவரை எப்படியேனும் சிக்க வைக்க வேண்டும் என்று மனதுக்குள் ச...
More

இயேசுவின் வரலாறு 23 : மலைக்க வைத்த மலைப் பொழிவு.

திருமுழுக்கு யோவானின் படுகொலை இயேசுவின் மனதில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தன்னுடைய பணியை இரண்டு மடங்கு தீவிரப்படுத்த வேண்டும் என்று இயேசு முடிவெடுத்தது அப்போது தான். இன்னும் தன்னுடைய பணியை திட்டமிட்டுச் செய்யவேண்டும். இதுவரை சுகமாக்குதல் மற்றும் சிறு சிறு போதனைகள் வழியாக மக்களின் கவனத்தைக் கவர்ந்த இயேசு இப்போது தன்னுடைய அடுத்த அடியை எடுத்து வைக்கிறார். அதற்கு இன்னும் அவருக்கு ஆள்பலம் தேவை. தன்னுடைய கொள்கைகளைப் பரப்பவும், தன்னுடன் பணிபுரியவும் இன்னும் சிலரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் எ...
More

இயேசுவின் வரலாறு 22 : யோவானின் படுகொலை

  சிறையிலிருந்த யோவான் இயேசுவின் பணிகளைப் பற்றி கேள்விப்பட்டார். ஆனால் அவர் கேள்விப் படுபவை எல்லாம் அவருக்கு நம்பிக்கையையும் குழப்பத்தையும் ஒரு சேர கொடுத்தன. இயேசு நோயாளிகளைக் குணமாக்கினார் என்பதைக் கேள்விப்படுகையில் ஆனந்திப்பார், ஆனால் உடனே அடுத்த தகவல் வரும், இயேசு பாவிகளோடு பந்தியமர்கிறார். போதனைகளை வழங்குகிறார் என்று ஆனந்தப்படுவார் கூடவே ஓய்வு நாளை அனுசரிப்பதில்லை, நோன்பு இருப்பதில்லை என்று தகவல்களும் வரும். இதற்கு முன் வந்த எல்லா இறைவாக்கினர்களுமே மக்களுக்குப் போதனைகள் செய்வதுடன் கூ...
More

இயேசுவின் வரலாறு 21 : நயீன் விதவையின் மகன்

  நயீன் ஊரை இயேசு நெருங்கினார். அவருடன் ஏராளமான மக்கள் கூடவே சென்றார்கள். நயீன் ஊர் வாசலில் ஒரு மரண ஊர்வலம் அவர்களை எதிர்கொண்டது. அழுகையும், ஒப்பாரியுமாய் அவர்களை நெருங்கியது அந்த ஊர்வலம். இறந்து போனவன் ஒரு இளைஞன். அவனுடைய தாய்க்கு அவன் ஒரே மகன். அவள் ஒரு கைம்பெண். ஊர்வலம் இயேசுவின் அருகே வந்தது. இயேசு நின்றார். அந்தத் தாயைப்பார்த்தார். ஆதரவற்ற நிலையில், அனாதைபோல அழுது புலம்பிக் கொண்டிருந்த அவளுடைய நிலை அவருடைய மனதைத் தொட்டது. 'அழாதீர்கள் அம்மா..' இயேசு சொன்னார். 'ஐயா... எனக...
More

இயேசுவின் வரலாறு 20 : ஒரு வார்த்தை போதும்

  பரிசேயர்களின் அச்சுறுத்தல் இயேசுவைப் பணி செய்வதிலிருந்து இம்மியளவும் பாதை மாற்றவில்லை. கப்பர்நாகும் என்னும் ஊரில் படைத்தளபதி ஒருவர் இருந்தார். அவருக்குக் கீழே நூறு வீரர்கள் இருந்ததால் அவர் நூற்றுவர் தலைவர் என்று அழைக்கப் பட்டார். அந்நாட்களில் நூறுபேர், ஐம்பது பேர், பத்து பேர், ஆயிரம் பேர் என்று பல அளவுகளில் படைகள் இருந்தன. ஒவ்வொரு குழுவும் ஒவ்வொரு படைத்தளபதியின் கீழ் செயலாற்றி வந்தன. படைவீரர்களின் எண்ணிக்கையை வைத்து குழுக்கள் பெயரிட்டு அழைக்கப் பட்டன. இந்த தலைவன் தன்னுடைய படைவீரர...
More

இயேசுவின் வரலாறு 19. பாவிகள் வீட்டில் பரமனா ?

அக்காலத்தில் வரி வசூலிக்கும் ஆயக்காரர்கள் மிகவும் கீழ்த்தரமானவர்களாகக் கருதப்பட்டார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் நேர்மையற்ற முறையில் தான் வரி வசூலித்து வந்தார்கள். எனவே தான் யோவான் கூட வரி வசூலிப்பவர்களுக்கு அறிவுரை செய்யும் போது ' அளவுக்கு அதிகமான வரியை வசூலிக்காதீர்கள்' என்று அறிவுரை வழங்கினார். மக்களின் வெறுப்பைச் சம்பாதித்துத் தான் வாழ்க்கை நடத்தி வந்தார்கள் இந்த ஆயக்காரர்கள். அந்த வரி வசூலிப்பவர்களில் நல்லவர்களும் இருந்தார்கள். ஆனால் அவர்களையும் மக்கள் திருடன் என்றும் தீண்டத் தகா...
More

இயேசுவின் வரலாறு 18 : குதர்க்கக் கேள்விகள்

  வாழ்க்கை என்பது மண்ணுலக வாழ்க்கை மட்டும் தான். அதன்பின் உயிர்த்தெழுதல், விண்ணகம் செல்லுதல் போன்றவை எதுவும் இல்லை. மண்ணுலகில் நல்லவர்களாக வாழ்ந்தால் அதன் பலன் மண்ணுலகிலேயே கிடைக்கும் என்று நம்பும் ஒரு கூட்டத்தினர் அந்த காலத்திலும் இருந்தார்கள். அவர்கள் சதுசேயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து, 'போதகரே... ஒருவன் பிள்ளைப்பேறு இல்லாமல் இறந்து போனால், அவனுடைய சகோதரன் அவளை மணந்து கொண்டு வழிமரபு உருவாக்க வேண்டும் என்பது மோசேயின் சட்டங்களில் ஒன்று. அதன்படி ஒருவன் மகப்பேற...
More

இயேசுவின் வரலாறு 17 : கூரை வழியே திமிர்வாதக் காரன்

  தொடர்ந்த நீண்ட நாள் பயணத்தின் முடிவில் ஏரியோர நகர்களை எல்லாம் சுற்றி முடித்து இயேசுவும் சீடர்களும் மீண்டும் கப்பர்நகூமுக்கு வந்தார்கள். இதற்கிடையில் இயேசுவின் புகழ் எருசலேம் தேவாலயம் வரைக்கும் பரவ, அங்கிருந்த குருக்கள் இயேசுவைப் பற்றி விசாரிக்க இரண்டு உளவாளிகளை அனுப்பினார்கள். அதற்குள் இயேசுவின் பெருமை பல மடங்கு அதிகரித்திருந்தது. இயேசுவைக் காண கூட்டம் முண்டியடித்தது. இயேசு ஒரு வீட்டில் அமர்ந்து கேள்விகளுக்குப் பதிலளிப்பதும், மக்களுக்குப் போதிப்பதுமாய் இருந்தார். அந்த கூட்டத்தினரிடை...
More

இயேசுவின் வரலாறு 16 : மனிதர்களைப் பிடிப்போராகுங்கள்

ஒரு நாள் அதிகாலையில் கெனேசரேத்துக் ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். அவருடைய போதனைகளைப் பற்றி அறிந்திருந்த மக்கள் கூட்டம் அவருடைய அருளுரையைக் கேட்பதற்காக அவரை நெருங்கி வந்தார்கள். மக்களைக் கண்ட இயேசு மகிழ்ந்தார். அவர்களுக்கு ஏதேனும் நற்செய்தி சொல்லவேண்டுமே என்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் நின்று பேசுவதற்கு வசதியான ஒரு இடமும் தென்படவில்லை. கரையில் கூட்டம் முண்டியடித்தது. இயேசு சுற்றுமுற்றும் பார்த்தார். அங்கே ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நின்றிருந்தன. அதில் ஒன்று சீமோனுடையது. இன்னொன்று செபதேயுவ...
More