அன்பின்றி அமையாது உலகு

  நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்திக்கும் நண்பர்கள் தங்களுக்குத் தெரிந்த மற்ற நண்பர்களைப் பற்றிப் பேசாமல் இருப்பதில்லை. “குமார் இப்போ நல்லா இருக்கான். நாலஞ்சு மாசத்துக்கு  முன்னாடி ஒரு கார் வாங்கினான். போனவருஷம் தான் வீடு வாங்கினான். ஒரு இருபத்தைஞ்சு முப்பது சம்பளம் வாங்குவான்னு நினைக்கிறேன். அப்படியே லைஃப்ல செட்டில் ஆயிட்டான்” “அருள் பாவம்டா. இன்னும் சரியான வேலை கிடைக்காம கஷ்டப்படறான். வாடகை வீட்ல தான் இருக்கான்.” இப்படிப்பட்ட கதைகளைக் கொஞ்சம் அலசி ஆராந்து பாருங்கள். நமது ஒப்...
More

இந்த வயசுலயா ?

  “இந்த வயசுல இதெல்லாம் முடியாது .. “ எனும் வாக்கியத்தை எல்லா இடங்களிலும் வெகு சகஜமாய்க் கேட்கலாம். பல சந்தர்ப்பங்களில் நாமே கூட இதைப் பயன்படுத்தியிருப்போம். நமது பிள்ளைகளிடமோ, நண்பர்களிடமோ அல்லது நாம் சந்திக்கும் ஏதோ ஒரு நபரிடமோ போகிற போக்கில் சொல்லி விட்டுப் போயிருப்போம். இந்தச் சின்ன வாக்கியம் மனதில் உருவாக்குகின்ற பாதிப்பு எவ்வளவு என்பதை நாம் பெரும்பாலும் உணர்வதில்லை. நாம் ஜஸ்ட் லைக் தேட் சொல்லிவிட்டுப் போகும் இந்த வாக்கியம் ரொம்பவே ஆக்ரோஷமானது. இதைப் பெற்றுக் கொள்ளும் நபருடைய...
More

குறை சொல்தல் வேண்டாமே !

முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட தங்கதேசத்தில் வாழ நேர்ந்தால் கூட, “சே… எங்கே பாத்தாலும் மஞ்சளா இருக்கே” என குறை சொல்லும் மக்கள் இருக்கிறார்கள் என்கிறார் லார்ட் ஜெஃப்ரி. குறை சொல்தல் சர்வதேசக் கெட்ட குணம். சிலர் மனிதர்களைக் குறி வைத்து குறை சொல்வார்கள். சிலர் மனிதர்கள் என்றில்லை, விலங்குகள், தெய்வங்கள், அஃறிணைப் பொருட்கள் என எல்லாவற்றையும் குறை சொல்வார்கள். இதொன்றும் இன்று நேற்று தோன்றிய சமாச்சாரமல்ல. ஆதி மனிதன் ஆதாமே பழத்தைச் சாப்பிட்டு விட்டு “நீர் தந்த இந்த ஏவாள் தான் பழத்தைக் கொடு...
More

Top 10 தாதா படங்கள்

கேங்ஸ்டர் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஏராளம் உண்டு. அதனால் தான் சர்வதேச அளவில் எல்லா மொழிகளிலும் தாதா திரைப்படங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. நாயகன், கபாலி என தமிழிலும் தாதா படங்கள் முத்திரை பதித்திருக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் தலை சிறந்த நூறு திரைப்படங்களை வரிசைப்படுத்தினால் அதில் நிச்சயம் சில தாதா திரைப்படங்கள் நிச்சயம் இருக்கும். தாதா படங்களின் முன்னோடி என ஹாலிவுட் படங்களைச் சொல்லலாம். அங்கே வரிசைகட்டி வந்த பல தாதா படங்கள் கல்லா கட்டியிருக்கின்றன. சர்வதேச அளவில் மறக்க முடியாத ப...
More

உங்கள் மினியேச்சர்…

RIBA II – ரோபோ நர்ஸ்   ரோபோ பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. நான் சூப்பர் ஸ்டாரின்  திரைப்படத்தைச் சொல்லவில்லை, நிஜமான ரோபோவைச் சொல்கிறேன். இன்றைக்கு எல்லா இடங்களிலும் ரோபோக்களின் பங்களிப்பு நுழையத் துவங்கியிருக்கிறது. அந்த வகையில் இப்போது புதிதாக வந்திருக்கிறது வியக்க வைக்கும் ரிபா 2 எனும் ரோபோ. ரோபோ என்றதும் உடனடியாக ஜப்பான் உங்கள் மனதுக்குள் வந்திருக்குமே ! ஆம் !.. இதையும் ஜப்பானில் தான் உருவாக்கியிருக்கிறார்கள். ரோபோ ஃபார் இண்டராக்டிவ் பாடி அசிஸ்டென்ஸ் என்பதன் சுருக்கம் தா...
More

110. ஏழைக் கைம்பெண்

  இயேசு ஒரு நாள் ஆலயத்தில் போதித்துக் கொண்டிருந்தார். "மறைநூல் அறிஞர்களைக் குறித்துக் கவனமாய் இருங்கள். அவர்கள் பிறரிடமிருந்து வணக்கமும், பெருமையும் பெற விரும்புகிறார்கள். எங்கும் அவர்களுக்கு முதல் மரியாதை கிடைக்கவும், முதன்மை இடங்கள் கிடைக்கவும் ஆசைப்படுகிறார்கள். கைம்பெண்கள் மேல் இரக்கம் காட்டுவதில்லை. அவர்களுடைய வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள். ரொம்ப நேரம் செபம் செய்வது போல நடிக்கிறார்கள். அவர்களுக்கு தீர்ப்பு கடுமையாய் இருக்கும்" என்று நேரடியாக மறை நூல் அறிஞர்களைப் பற்றிப் ப...
More

109. பத்து தொழுநோயாளர்

இயேசு எருசலேமுக்குச் சென்று கொண்டிருந்தார். சமாரியா, கலிலேயா பகுதிகள் வழியாகச் சென்றபோது தொழுநோயாளியர் பத்து பேர் தூரத்தில் நின்று கொண்டு இயேசுவை நோக்கிக் கத்தினார்கள். "ஐயா.. இயேசுவே.. எங்களுக்கு இரங்கும்" தொழுநோயாளிகள் பாவிகள் என்பது அந்தக் கால நம்பிக்கை. அவர்கள் நகருக்குள் நுழைய முடியாது. நகரத்துக்கு வெளியே குகைகளில் தான் அவர்களுடைய வாழ்க்கை. அவர்கள் வெளியே வந்தால் ஒரு மணிச்சத்தத்தை எழுப்பிக் கொண்டே தான் வர வேண்டும். வரும் போதே "தீட்டு..தீட்டு..விலகுங்கள்" என சத்தமிட்டுக் கொண்டே ...
More

108. கனானியப் பெண்

  தீர், சீதோன் நாட்டின் எல்லைப் பகுதிகளில் ஒரு கனானியப் பெண் வசித்து வந்தார். அவள் இயேசுவைப் பற்றியும், அவர் செய்கின்ற அற்புதங்களைப் பற்றியும் கேள்விப்பட்டிருந்தாள். கனானியர்கள் பிற இனத்தவர். இயேசுவின் பணிவாழ்வோ யூதர்களின் மத்தியில் தான் இருந்தது. அந்த கனானியப் பெண்ணுக்கு இயேசு யூதர் என்பதும், அவர் தாவீது மன்னனின் வழிமரபினர் என்பதும், அவரே மீட்பர் என்பதும் எல்லாமே தெரிந்திருந்தது. அவளுடைய மகளை பேய்பிடித்திருந்தது. இயேசுவால் மட்டுமே அவளைக் குணப்படுத்த முடியும் என அவள் நம்பினாள். ...
More

107. நூற்றுவர் தலைவர்

  இயேசு கப்பர்நகூம் எனும் இடத்திற்குச் சென்றார். நூற்றுவர் தலைவர் ஒருவர் அவரிடம் வந்தார். நூற்றுவர் தலைவர் நூறு படை வீரர்களின் தளபதி. அவர் ஒரு ரோமப் படை வீரர். படைத்தளபதி இயேசுவிடம் சொன்னார். "ஐயா, என் ஊழியன் முடக்குவாதத்தால் மிகுந்த வேதனையுடன் படுத்துக் கிடக்கிறான்" "நான் வந்து அவனைக் குணமாக்குவேன்" இயேசு பதில் சொன்னார். உடனே நூற்றுவர் தலைவர் பதட்டப்பட்டார். "ஐயா, நீர் என் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க நான் தகுதியற்றவன். ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும்; என் ஊழியன் ந...
More

106. போந்தியு பிலாத்து

  இயேசுவை அறிந்த பெரும்பாலானோருக்குத் தெரிந்திருக்கக் கூடிய ஒரு பெயர் பிலாத்து. இயேசுவின் மீது பொய் குற்றம் சாட்டி அவரை பிலாத்துவின் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அவர் தான் அப்போதைய ஆளுநர். தனக்கு முன்னால் நின்றிருந்த இயேசுவை விசாரணை செய்தான் பிலாத்து. ஆனால் இயேசுவிடம் குற்றம் எதையும் காண அவனால் முடியவில்லை. "இவனிடம் நான் குற்றம் ஏதும் காணவில்லை." என மக்களைப் பார்த்துச் சொன்னான். அவன் இயேசுவை அப்போதே விடுவித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. அவன் நீதி இருக்கையில்...
More