அறிவியல் புனைக் கதை : நவீனன்

அசோக் நகர் காவல் நிலையம் : சென்னை மாலை 6 மணி. “யோவ்.. இந்த சைக்கோ எவன்யா ? பொழுது சாஞ்சாலே மனுஷனுக்கு மண்டை காஞ்சு போயிடுது. அவன் மட்டும் என் கைல கிடச்சான்.. மவனே ... “ கோபத்தையெல்லாம் உள்ளுக்குள் எரிமலையாய் வழியவிட்டுக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர் கனகராஜ். கடந்த சில மாதங்களாகவே சென்னையில் நள்ளிரவிலோ அதிகாலையிலோ மர்மமாய் வாட்ச்மேன்கள் படுகொலை செய்யப்படுவதும், எரிக்கப்படுவதும் காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாய் இருந்தது. வழக்கமான பார்முலா படி யாரையேனும் பிடித்து இவன் தான் சைக்கோ என சொல்ல...
More

உன்னைப் பற்றி உயர்வாக நினை

வெற்றி என்பது மனதில் இருக்கிறது. நீ வெற்றி பெற வேண்டும் என விரும்பினால், உன்னை ஒரு வெற்றியாளனாய் இந்த வினாடியிலிருந்தே கருதத் துவங்கு. -டாக்டர்.ஜாய்ஸ் பிரதர்ஸ். வெற்றியின் துவக்கம் எது என்பதில் பலருக்கும் சந்தேகம் எழுகிறது. அடுத்தவர்கள் நமது கழுத்தில் சூட்டும் பூமாலை தான் வெற்றியின் முதல் படி என்கிறார்கள் பெரும்பாலானவர்கள். ஆனால் அது வெற்றியின் துவக்கமல்ல, வெற்றியின் அடையாளங்களில் ஒன்று என வைத்துக் கொள்ளலாம். உண்மையான வெற்றி நமது மனதில் நம்மை ஒரு வெற்றியாளராய்க் கருதிக் கொள்வதில் தான...
More

தீர்ப்பிடாதீர்கள்

நீங்கள் பிறரைத் தீர்ப்பிடத் துவங்கினால் உங்களுக்கு அன்பு செய்ய நேரமே இருக்காது – அன்னை தெரசா ஒரு கணவன் எப்போதுமே மனைவி சமைக்கும் காலை உணவில் திருப்திப் படுவதேயில்லை. இட்லி சுட்டால் ஏன் தோசை இல்லை என்பான். தோசை சுட்டால் ஏன் தோசை முறுகலாய் இல்லை என்பான். முறுகலாய் இருந்தால் ஏன் அப்பளம் போல் இருக்கிறது என்பான். தன் கணவனை எப்படி மகிழ்ச்சியாய் உண்ண வைப்பது என்பது மனைவிக்குத் தெரியவே இல்லை. தினமும் அவனுக்கு காலையில் ஒரு முட்டை வேண்டும். அதை பொரித்து வைத்தால் ஏன் அவிக்கவில்லை என்பான், வேகை வைத...
More

என்ன செய்யப் போகிறாய்

நம்ப முடியாத ... என்று சொல்வார்களே ! அதற்குரிய அத்தனை இலக்கணங்களும் கொண்ட உண்மை நிகழ்வு இது. என் தோழி ஒருத்தியின் வாழ்க்கையில் நடந்தது !    1. கீழே தூரத்தில் மேகங்கள் வானத் தடாகத்தின் தலை கீழ் தாமரைகளாய் மிதந்தன. மேலும் கீழும் அசைவதற்கு இசையாத மேக வீரர்களின் அணிவகுப்புக்கிடையே சத்தத்தைத் துரத்தியபடி நின்ற நிலையிலேயே ஓடிக் கொண்டிருந்தது அந்த விமானம். அதிகாலைச் சூரியன் மேகம் துளைத்து மெலெழும்பும் காட்சியை சன்னலோரம் அமர்ந்து ரசித்துச் சிலிர்த்தாள் மலர்விழி. ...
More

95. மத்தேயு

இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர் ம‌த்தேயு. அவ‌ர் சுங்க‌ச்சாவ‌டியில் அம‌ர்ந்து வ‌ரி வ‌சூல் செய்யும் ப‌ணியைச் செய்து வ‌ந்தார். ஒரு நாள் இயேசு அவ‌ரைப் பார்த்து, "என்னைப் பின்பற்றி வா” என்றார். சுங்கச்சாவடியில் வேலை செய்து கொண்டிருந்த அவர் எல்லாவற்றையும் விட்டு விட்டு உடனே இயேசுவைப் பின்சென்றார். இயேசு த‌ன‌து திருத் தூத‌ர்க‌ளைத் தேர்ந்தெடுத்த‌போது, எல்லோரையும் வேலையில் இருந்த‌போது தான் தேர்ந்தெடுத்தார். அதே அடிப்ப‌டையில் தான் ம‌த்தேயுவையும் தேர்ந்தெடுத்தார். வரிவசூலி...
More

94. நத்தானியேல்

நத்தானியேல் (நாத்தான் வேல்) இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர். இவருக்கு பார்த்தலமேயு என்றொரு பெயரும் உண்டு. இவ‌ரை இயேசுவின் சீட‌ராகும்ப‌டி முத‌லில் அழைப்பு விடுத்த‌வ‌ர் பிலிப்பு. "இறைவாக்கின‌ர்க‌ளும், மோசேவும் குறிப்பிட்டுள்ள‌வ‌ரைக் க‌ண்டோம்" என‌ பிலிப்பு ந‌த்தானியேலை அழைத்தார். நத்தனியேலோ, “நாசரேத்திலிருந்து நல்லது எதுவும் வர முடியுமோ?” என்று கேட்டார். பிலிப்பு அவரிடம், “வந்து பாரும்” என்று கூறினார் ந‌த்தானியேல் இயேசுவைத் தேடி வ‌ந்தார். ந‌த்தானியேலைப் பார்த்த‌ இயேசு...
More

92. கானானியனாகிய சீமோன்

இயேசுவின் ப‌ன்னிர‌ண்டு அப்போஸ்த‌ல‌ர்க‌ளில் ஒருவ‌ர் கானானிய‌னாகிய‌ சீமோன். இவ‌ரை தீவிர‌வாதியாகிய‌ சீமோன் என்றும், செலோத்தே என‌ப்ப‌டும் சீமோன் என்றும் பைபிள் குறிப்பிடுகிற‌து. இவ‌ருடைய‌ சொந்த‌ ஊர் கானாவூர். எனவே தான் கானானியனாகிய சீமோன் என அழைக்கப்பட்டார். கானாவூரில் தான் இயேசு த‌ன‌து முத‌லாவ‌து அற்புத‌த்தைச் செய்தார். ஒரு திரும‌ண‌ வீட்டில் திராட்சை இர‌ச‌ம் தீர்ந்து விட்ட‌து. இயேசு ஆறு க‌ற்சாடிக‌ளில் நிர‌ப்ப‌ப்ப‌ட்ட‌ த‌ண்ணீரை திராட்சை ர‌ச‌மாய் மாற்றி அற்புதம் செய்திருந்தார். இயேசுவின் சீடர்க...
More

90 யூதாசு இஸ்காரியோத்து

இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் ஒருவர் யூதாசு. யூதேயாவிலுள்ள காரியோத்து என்னுமிடத்தவன்.  இயேசுவை பகைவர்களிடம் காட்டிக் கொடுத்தவன். இயேசுவின் சீடர்கள் பன்னிருவரில் யூதாஸ் மட்டுமே யூதேயாவைச் சேர்ந்தவர் மற்றவர்கள் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள். இயேசுவைக் கொல்ல வேண்டுமென மதவாதிகளும், அரசியல் தலைவர்களும் முடிவு செய்து விட்டார்கள். முக்கியமான காரணங்கள் இரண்டு. ஒன்று, இதுவரை வல்லுநர்கள் போதித்து வந்த சிந்தனைகளுக்கு எதிராக இயேசு போதித்தார். அன்பை மட்டுமே முன்னிறுத்தினார். இதனால், எளிய மக்கள் எல்லோரும் இய...
More

89 தோமா

இயேசுவின் திருத்தூதர்களில் ஒருவர் தான் தோமா. இயேசுவின் ந‌ண்ப‌ர் லாச‌ர் ம‌ர‌ண‌ம‌டைந்து விட்டார். இயேசுவும் சீடர்களும் வேறோரு இடத்தில் இருந்தார்கள். அங்கிருந்து பெத்தானியாவுக்குச் செல்ல‌ வேண்டும். பெத்தானியா யூதேயாவில் இருந்த‌து. அங்கே இரண்டு முறை இயேசுவைக் க‌ல்லால் எறிந்து கொல்ல‌ முய‌ன்றார்க‌ள். எனவே சீடர்கள் அங்கே செல்ல‌ அஞ்சினார்கள். தோமா மட்டும் அஞ்சவில்லை." நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்" என இயேசுவோடு பெத்தானியா செல்ல ஆயத்தமானார். இதனால் இயேசு லாசரை உயிர்ப்பித்த மாபெரும் நிகழ்வை சீடர்...
More

87. ஏரோது மன்னன்

இயேசு பிறந்த காலத்தில் யூதேயாவை ஆண்டு வந்தவர் ஏரோது மன்னன். தந்திரமும், சூழ்ச்சியும், கல் மனசும் கொண்டவன் என ஏரோதைச் சொல்லலாம்.முதலில் கலிலியா வின் கவர்னராக இருந்தார். ரோமர்களின் உதவியுடன் ஆட்சிக்கு வந்தார். அதற்காக பல படுகொலைகள் செய்தார். ஆட்சிக்கு வந்த பின்பும் தனது மனைவி மரியம், மாமியார், மச்சான், இரண்டு மகன்கள் உட்பட குடும்ப உறுப்பினர்களையே கொன்று குவித்தவன். மனைவி தனது கிரீடத்தைப் பறித்து விடுவாரோ எனும் பயத்தில் தான் அவளைக் கொன்றான். முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜோஸபஸ் எனும் வரலாற்று அறி...
More