காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை

    மகிழ்ச்சி !   காதல் எல்லாம் கல்யாணத்தில் முடிவதில்லை. எல்லா காதலும் கல்யாணத்தில் முடிந்திருந்தால் என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஆரம்பப் பள்ளியின் அரும்பு நாட்களில் கண்களுக்குள் சின்ன மின்மினிக் காதல் ஒன்று விட்டு விட்டு ஒளிகொடுக்கும். கணக்கு பாடத்தின் விடையைக் காட்டிக் கொடுத்ததன் மூலமாகவோ, இருந்த பலப்பத்தை இரண்டாய் ஒடித்து பாதி கொடுத்த பாசத்தின் பார்வையிலோ அந்த மின்மினிகள் தோன்றியிருக்கலாம். காமத்தின் அரிச்சுவடி கூட அருகில் நுழையாத, ...
More

குழந்தைகளைப் பாதுகாப்போம் ! 

ஒரு காலத்தில் ஒரு டஜன் பிள்ளைகளைப் பெற்று ஒரு கவலையும் இல்லாமல் நமது முன்னோர்கள் வாழ்ந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஒன்றோ இரண்டோ குழந்தைகளை வைத்துக் கொண்டு நமது பெற்றோர்கள் படும் பாடு சொல்லி மாளாது ! காரணம் சமூகத்தில் நிலவுகின்ற அச்சுறுத்தும் நிகழ்வுகள். “ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்” என்பதெல்லாம் பழைய மொழிகளாகிவிட்டன. இன்று பிள்ளைகளெல்லாம் கிரில் கேட்டுகளுக்கு உள்ளே கிரிமினல்களைப் போல அடைபட்டுக் கிடக்க வேண்டிய சூழல். குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக நிகழும் தொந்தரவுகள்...
More