காலமாற்றம்

தாள லயத்துடன் கிணற்றில் தண்ணீர் இறைத்த காலத்திலும், காற்றின் முதுகெலும்பாய் கழுத்தை நீட்டும் சாய்ந்த தென்னையில் ஏறி குளத்தில் குதித்து நீச்சலடித்த காலத்திலும், உச்சிக் கொம்பு மாங்காயை எச்சில் ஒழுக குறிபார்த்து கல்வீசிக் கைப்பற்றிய காலங்களிலும் வரப்புக்கும் நிலப் பரப்புக்கும் ஓடி ஓடி பொழுது போக்கிய பொழுதுகளிலும் தெரிந்திருக்கவில்லை, இப்போது தொப்பையைக் குறைக்க மூடிய அறையில் மூன்று மணி நேரம் மூச்சு முட்ட இயந்திரத்தில் ஓடும்போது தான் தெரிகிறது அன்று வாழ்க்கையே...
More

நுனிப்புல் மேயாதீங்க

சகலகலா வல்லவனாக வேண்டும் எனும் ஆர்வம் இன்று பலரிடமும் காணப்படுகிறது. ஒரு விஷயத்தைக் கற்க ஆரம்பிப்பார்கள். நண்பனிடம் இன்னொரு திறமை இருக்கும், அதை நோக்கி மனம் தாவும். அதைக் கற்க ஆரம்பிக்கும் போது இன்னொன்றில் மனம் லயிக்கும். அதன் பின் வேறொன்றுக்குத் தாவும். கடைசியில் நமது ஸ்பெஷாலிடி என்பது பிரித்தறிய முடியாக் கூட்டாஞ் சோறாகிப் போகும். கொஞ்சம் ஆர அமர உட்கார்ந்து உங்களுடைய “பெஸ்ட்” திறமை எதில் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். சட்டென ஒரு விஷயம் உங்களுக்குத் தோன்றினால், உண்மையிலேயே உங்களுடைய ...
More

பாராட்டலாமா ? வேண்டாமா ?

  “மனித மனம் தனது ஆழத்தில் பாராட்டுக்காக ஏங்குகிறது” – என்கிறார் வில்லியம் ஜேம்ஸ்.  தான் முக்கியமானவனாகக் கருதப்படவேண்டும், தான் அங்கீகரிக்கப் படவேண்டும், பிறரால் விரும்பப்படவேண்டும் எனும் ஆசையின் சல்லி வேர்கள் எல்லா மனிதர்களுக்குள்ளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. “இப்போதெல்லாம் பாராட்டும் பழக்கமே குறைந்து விட்டது” என்று சொன்னால் உடனே எல்லோரும் தலையாட்டுவீர்கள். “ஆமாம். யாருமே யாரையுமே பாராட்டுவதில்லை. எல்லோருக்கும் ஈகோ” என சட்டென பதில் வரும். அந்த பேச்சை அப்படியே ஒரு நிமிடம் நிற...
More

கூடா நட்பு கூடாது !

நட்பு என்பது இரண்டு உடல்களில் உலவும் ஒற்றை ஆன்மா – என்கிறார் தத்துவ மேதை அரிஸ்டாட்டில். நட்பின் பிணைப்பையும், இணக்கத்தையும் சொல்லும் ஒரு அசத்தலான வாசகமாய் இதைக் கொள்ளலாம். நட்பு இல்லாத மனிதன் இருக்க முடியாது. எல்லோருக்கும் நண்பர்கள் கிடைக்கிறார்கள். சில நண்பர்கள் ஆரம்ப கால அரை டவுசர் வாழ்க்கையோடு விடை பெறுகிறார்கள். சிலர் கல்லூரி கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓடி ஓய்ந்து விடுகிறார்கள். வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளையெல்லாம் தாண்டி நம...
More

தேசத்தை நேசிப்போம்

சமீபத்தில் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையைக் கைப்பற்றியபோது இரவிலேயே வாண வேடிக்கைகள் ஆரம்பித்து விட்டன. வெற்றிக் கொண்டாட்டங்களை தேசம் நிறுத்தவே சில வாரங்களானது. “இந்தியன் என்பதில் பெருமைப்படு”, “நான் இந்தியன் என்பதில் கர்வமடைகிறேன்” போன்ற வாசகங்கள் நாடுமுழுவதும் ஒலித்தன. மக்கள் புளகாங்கிதமடைந்தார்கள். எல்லாம் நல்லது தான். ஆனால் பெரும்பாலான மக்களுடைய தேசப்பற்று விளையாட்டில் ஆரம்பித்து விளையாட்டிலேயே முடிந்து போய்விடுகிறதே என்பது தான் துயரம். உண்மையில் இது தான் தேசப் பற்றா ? நாட்டுப் ப...
More

விட்டுக் கொடுத்தல் வெற்றியே !

  வாழ்க்கையை இனிமையாக்குவதும், துயரமாக்குவதும் பெரும்பாலும் சின்னச் சின்ன விஷயங்களே. சின்னச் சின்ன மலர்களின் கைகோத்தல் எப்படி ஒரு மாலையாய் உருவாகிறதோ, அப்படித்தான் வாழ்வின் இனிமைகளும் உருவாகின்றன. மனிதனுக்கே உரிய அடிப்படைப் பண்புகளைக் கொஞ்சம் தூசு தட்டித் துடைத்து வைத்தாலே போதும், வாழ்க்கை பளபளப்பாய் அழகாய் உருமாறிவிடும். அத்தகைய குணங்களில் ஒன்று தான் உறவுகளுக்கிடையே நிகழ வேண்டிய விட்டுக் கொடுத்தல். விட்டுக் கொடுத்தல் என்பது ஒரு வகையில் சகிப்புத் தன்மையின் குழந்தையே ! பல முதியவ...
More

Top 10 தாதா படங்கள்

கேங்ஸ்டர் திரைப்படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் ஏராளம் உண்டு. அதனால் தான் சர்வதேச அளவில் எல்லா மொழிகளிலும் தாதா திரைப்படங்கள் கோலோச்சிக் கொண்டிருக்கின்றன. நாயகன், கபாலி என தமிழிலும் தாதா படங்கள் முத்திரை பதித்திருக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் தலை சிறந்த நூறு திரைப்படங்களை வரிசைப்படுத்தினால் அதில் நிச்சயம் சில தாதா திரைப்படங்கள் நிச்சயம் இருக்கும். தாதா படங்களின் முன்னோடி என ஹாலிவுட் படங்களைச் சொல்லலாம். அங்கே வரிசைகட்டி வந்த பல தாதா படங்கள் கல்லா கட்டியிருக்கின்றன. சர்வதேச அளவில் மறக்க முடியாத ப...
More

மழையவதாரம்

சாலை நெரிசலில் நனைந்து, சேறு வீசிய வாகனத்தைச் சாபமிட்டு, சாலை நீரில் அசுத்தமாகி, 'மழையும் மண்ணாங்கட்டியும்' என எரிச்சல்பட்டு, ஒரு வழியாய் வீடு சேர்ந்து தலை துவட்டி உடை மாற்றி... தேனீரும் கையுமாய் சன்னலோரத்தில் நிற்கையில் அழகாய் தெரிந்தது மழை.
More

மரித்து மீண்டவர்கள்

மரித்து மீண்டவர்களின் வாக்குமூலங்கள் வியப்பூட்டுகின்றன. சிலர் வெளிச்சச் சுரங்கத்துள் வழுக்கிச் சென்றார்களாம். சிலர் வானவில்லுக்கு மேலே பயணித்து மேகத்தின் உள்ளே சுவர்கத்தில் அமர்ந்தார்களாம். சிலர் இயேசுவை நேரில் கண்டு நலம் விசாரித்தும், சிலர் கைலாயத்தில் சிவனோடு கை குலுக்கியும், சிலர் ஆனந்தப் பூந்தோட்டத்தில் நர்த்தனம் ஆடியும் திரும்பி வந்தார்களாம். ஆனந்தக் கதைகள் அளப்பவர்கள் மீண்டும் மரித்துப் போக மறுத்து விடுவது தான் வியப்பளிக்கிறது. -  
More

பந்தல்கள்

  பேதங்கள் இல்லாமல் கட்டப்படுகின்றன பந்தல்கள் திருமண வீட்டின் கெட்டி மேளச் சத்தங்களில் அட்சதை தூவும் பந்தல்கள், தங்கள் அடுத்த பயணமாக சாவு வீடுகளின் விசும்பல்களை விழுங்குகின்றன. பூப்புனித நீராட்டு விழாக்கள் முடிந்த கையோடு பாராட்டு விழாக்களுக்குப் பயணப்படுகின்றன. அரசியல் கூட்டங்களில் காது பொத்திக் கிடப்பவை மறு நாள் சாதிக் கூச்சல்களுக்குக் கூரையாகிக் கொள்கின்றன. பந்தல்களுக்குப் பேதம் இல்லை. துயரங்களையும், ஆனந்தங்களையும் சுமந்து சுமந்து மறு பேச்சு பேசாமல் அ...
More