கவிதை : ஒரு நண்பனுக்கு…

உனக்கு நான் அனுப்பிய கண்ணீர்த் துளிகளை உப்புத் தயாரிக்க நீ உபயோகித்துக் கொண்டாய். இருட்டில் நடந்துகொண்டே உன் நிழல் களவாடப்பட்டதாய் புலம்புகிறாய் பாறைகளில் பாதம் பதித்துவிட்டு சுவடு தேடி சுற்றிவருகிறாய். நீ பறக்கவிடும் பட்டத்தின் நூலறுந்ததை மறந்துவிட்டு வாலறுந்ததற்காய் வருந்துகிறாய். முதுமக்கள் தாழிக்குள் மூச்சடக்கி முடங்கிவிட்டு சுதந்திரக்காற்று சிறைவைக்கப் பட்டதாய் அறிக்கைவிடுகிறாய். உன் இறகுகளை உடைத்துவிட்டு சிறைகள் திறக்கவில்லையென்று வாக்குவாதம் செய்கி...
More

கவிதை : வாழ்வின் மகத்துவம்

அடுத்தவர் வாழ்க்கை அமைதியாய் கழிவதாகக் கருதிக் கொள்கிறது ஒவ்வொருவர் வாழ்க்கையும். ஒப்பீடுகளின் உரசல்களால் எரிந்து கொண்டிருக்கின்றன உறவுகளின் காப்பீடுகள். அழுகையையும் இயலாமையையும் புதைக்க எல்லோரும் தேடுகின்றனர் சதுர அடிகளில் சில அறைகள். திரைச் சீலைகளும் தாழிட்ட சன்னல்களும் மம்மிகளை உள்ளுக்குள் நிறைத்து பூங்காக்களை வாசல் வழியே அனுப்பிக் கொண்டிருக்கின்றன எப்போதேனும் ஆறுதல் தேடி அடுத்த வீட்டுக் கிணற்றடியில் அமரும் பெண்களும், எதேச்சையாய் பார்களில் சந்தித்துக் கொள...
More

கவிதை : அமெரிக்காவின் அடர்ந்த குளிர் இரவில்

கருப்புப் போர்வைக்குள் குளிர் உறங்கும் இரவு. அமெரிக்காவின் அகன்ற சாலைகளெங்கும் கால் வலியுடன் விழுந்து கிடக்கிறது கனத்த காற்று. ஜன்னல் திறந்தால் பாய்ந்து விடலாமென்று குத்தூசிகளுடன் காத்திருக்கிறது குளிர். செயற்கைச் சூரியனை குழாய்களில் செலுத்தும் வீடுகள். விரல்கள் அனிச்சைச் செயலாய் நடுங்க. பல் வரிசை இரண்டும் காலாட்படை போல நேருக்கு நேர் மோதிக் கொள்ள. நாக்கு தொண்டைக்குள் சென்று நங்கூரமிடும் இரவு. மெலிதாய்க் கசியும் நிலவில் சாலைகளுக்கு இலையாடை போர்த்தி நிர்வாணம...
More

கவிதை : பூக்கள் பேசினால்…

நான் தான் பூ பேசுகிறேன். மொட்டுக்குள் இருந்தபோதே முட்டி முட்டிப் பேசியவைகள் தான் எல்லாமே. ஆனாலும் உங்கள் திறவாச் செவிகளுக்குள் விழுந்திருக்க வாய்ப்பில்லை. என் விலா எலும்புவரை வண்டுகள் வந்து கடப்பாரை இறக்கிச் செல்லும். வருட வரும் வண்ணத்துப் பூச்சியும் மகரந்தம் திருடித் திரும்பும். என்னை உச்சி மோந்துச் சிரிப்பாள் இல்லத்தரசி, ஆனாலும் அவள் இப்போது மிதித்து நிற்பது நேற்றைய ஒரு மலரைத்தான். எனக்குப் பிடிக்கவில்லை இந்த வாழ்க்கை. தீய்க்குள் புதைக்கப்பட்ட மெழுகு ...
More

கவிதை : நான் தான் கடவுள் பேசுகிறேன்.

பிரிய பக்தனே, வா. வந்தமர். ஏன் இத்தனை அவசரம் ? வாசலில் நீ போட்ட செருப்பு அங்கேயே தான் கிடக்கும். உட்காரேன். கொஞ்ச நேரம். இங்கே வருவோரெல்லாம் கூடை நிறைய கோரிக்கைகளோடும், வண்டி நிறைய வேண்டுதல்களோடும் வரும் வாடிக்கையாளர் தான். ஓர் வேண்டுதலுக்கு முன்புதான் என்றோ பெற்றவற்றுக்கு நன்றி சொல்ல நினைக்கிறார்கள். வேடிக்கை பார்ப்பதற்கும் சுய புராணம் வரைவதற்கும் வருபவர்கள் தான் ஏராளம். நூல் கையிலிருந்தாலும் ஏங்கோ பறக்கும் பட்டம் போல, எண்ணங்களை எங்கோ எறிபவர்கள் தான...
More

கவிதை : ஏதேனும் ஓர் சொல்

ஏதேனும் ஒரு செயல் சந்தேகப் பொறியை சொல்லாமல் பற்ற வைக்கிறது. ஏதேனும் ஒரு சொல் சந்தேகப் பொறியாய் மாறி எலி வாலுக்காய் வாய் திறக்கிறது. சொல் கற்பனையில் வாக்கியங்களை இடைவிடாமல் இணைத்து பெருங்கதையாய் மாற, செயல் நிகழாதவற்றை நிதமும் படம்பிடித்து நீள் படமாயும் நிரம்பி வழிகிறது. அந்த செயல் குறித்து அவளோ, அந்தச் சொல் குறித்து அவனோ பேசிக் கொள்ளாத கவலையில், மௌனப் படுக்கைக் கால்களருகே கவிழ்ந்து படுத்து கதறி அழுகின்றன அந்த அப்பாவிச் சொல்லும் செயலும் .
More

கவிதை : தூரிகையுடன் ஒரு காரிகை

யாரடி நீ. எப்போதேனும் என் கனவுக் கட்டிலில் வந்தமர்கிறாய். தூரிகை தொட்டெடுத்து முத்தச்சாயம் பூசி என்னை நித்திரைத் தொட்டிலில் விட்டுச் செல்கிறாய். கனவுகளில் பேருந்துகள் நகர்ந்தால் நீ பயணியாகிறாய், நதி நடந்தால் ஈரமாய் ஓர் ஓரமாய் கரையேறுகிறாய். அலுவலகக் கனவுகளில் நீ எப்போதேனும் எட்டிப் பார்த்துச் செல்கிறாய், கடற்கரைக் கனவுகளில் சிலநேரம் மணல் கிளறி நடக்கிறாய். விளையாடினாலும், உரையாடினாலும் நீ விலகாதிருக்கிறாய். ஆனாலும், உன் முகத்தை பகல் வெளிச்சத்தில் மீண...
More

கவிதை : புரியவில்லையே அம்மா

அம்மா.. வார்த்தைகள் பழகும் வரைக்கும் என் அழுகையை மொழிபெயர்த்து அமுதூட்டுவாய். தொட்டிலின் ஈரம் துடைத்துத் தாலாட்டுவாய். பாவாடைப் பருவத்தில் என் இடுப்பில் புடவை கட்டிவிட்டு உன்வயிற்றில் நெருப்புக் கட்டியிருப்பதாய் சொல்லிச் சிரித்துக் கொண்டாய். ஏனோ எனக்குப் புரியவில்லை. அறிவுக்குள் காரணங்கள் விளங்காத ஒரு மாலைப்பொழுதின் விளையாட்டுத் திடலில் பயந்து அழுது நடுங்கிச் சிவந்தபோது, பூப்பெய்தினேன் என்றுசொல்லிப் பூரித்தாய். எனக்கென்னவோ பாதிதான் புரிந்தது. அந்தி வந்து வாசல் தட்டும் ...
More

கவிதை : எனக்குப் பின்னால் வாருங்கள்…

விடாமல் ஒடும் கடிகாரங்களே உங்கள் ஓட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள். புல்லாங்குழல்களே உங்கள் துளைகளை பொத்திக் கொள்ளுங்கள். குயில்களே பருக்கைகளுக்காக மட்டுமே இனி அலகு திறவுங்கள். இசைக் கருவிகள் மௌனம் மட்டும் வெளித்தள்ளட்டும். பல்லவி தவறாத பாடல்கள் இனி வேண்டாம். பூக்களே பேசாமல் மொட்டுக்குள் சென்று பூட்டிட்டுக் கொள்ளுங்கள். நகர வேண்டாம் நதிகளே நின்ற நிலையிலேயே உறைந்து விடுங்கள். இல்லையேல் ஆவியாகிக் கரைந்து விடுங்கள். கொஞ்ச காலம் என்னைத் தொடாதே தென்றலே, வரு...
More

உன்னத சங்கீதம் (சுமார் 3000 வருடங்களுக்கு முந்தைய கவிதை)

  சாலமோன் அரசரின் ஓர் சரித்திரப் புகழ் கவிதை இது. இதன் ஒவ்வோர் வரிகளிலும் காதலின் வாசம். ( கி.மு 971 க்கும் 931 க்கும் களில் இடைப்பட்ட காலத்தில் எபிரேய மொழியில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் இன்றும் வியப்பூட்டுகின்றன )   1   தலைவனே, உன் இதழ்களுக்குள் நீர் இறுக்கி வைத்திருக்கும் முத்தத்தின் முத்துக்களை என் இதழ்கள் மேல் இறக்கி வைத்து விடுக. உமது காதல், போதையின் படுக்கை, அது திராட்சை இரசத்தின் போதையைக் கடந்தது. உமது பரிமள தைலம் எல்லைகளை வெட்டி ...
More