கவிதை : முத்தக்கூடு

முல்லைப்பூஞ் சிரிப்பினிலே முள்தைத்துப் போனவளே பிச்சிப்பூஞ் சிரிப்பாலே பிடுங்கிடவே மாட்டாயோ ? 0 பாலைப்போல் புன்னகைத்து வேலொன்றைத் தைத்தவளே சேலைதன் தலைப்பாலே சரியாக்க மாட்டாயோ ? 0 காலைப்பனி கதிரவனால் களவாடும் நிலைபோலே காதல்கனி ஒன்றாலே பசியாற்ற மாட்டாயோ ? 0 நதிமேலே சுதிபோடும் அலைபோலே அலைபவளே கதிநீயே என்றேனே கண்பார்க்க மாட்டாயோ ? 0 கண்ணுக்குள் மயிலிரண்டைக் கட்சிதமாய் வளர்ப்பவளே வானவெளி விண்மீனாய்க் கண்சிமிட்டிப் பாராயோ ? 0 உன்னழகை வரைகையிலே ...
More

கவிதை : சாயம் பூசா சம்பா அரிசி !

கவலைகளின் மீது கல்லெறியக் கற்றுக் கொண்டேன். நேற்றுவரை என் இதயத்துக்குள் விழுந்த இனிய நிகழ்வுகளை ஒதுக்கிவிட்டு சோகத்தை மட்டுமே ஓட விட்டிருந்தேன் மனதின் பாதைகளில். புரிந்து விட்டது... வாழ்க்கை என்பது கவலை ஆணிகளால் நெய்யப்படும் சவப்பெட்டி அல்ல. அதோ அந்த நீள் கடலின் சிறு துளி நான்... இதோ இந்த மணல் மேட்டின் ஒரு அணு நான்... என் கரங்களின் ரேகையைப் பிடுங்கி விட்டு பூமத்திய ரேகையைப் புகுத்த முடியாது. அழுத்தமாய் இழுத்தாலும் அட்சக்கோடுகள் அறுந்து விழப்போவதில்லை ...
More

கவிதை : அறிவுரைகள்

  திரும்பும் திசையெல்லாம் அறிவுரைகளின் ஆரவாரங்கள். அந்த அறிவுரைகளோ பெரும்பாலும் பொது உரைகளில் கேட்டவற்றின் பிரதிபலிப்புகள். அதிக அறிவுரைகள் அரைகுறைகளிடமிருந்தே அவதாரமெடுக்கின்றன. அல்லது சாய்வு நாற்காலிகளிலிருந்து அவை ஜீவன் பெற்று நடக்கின்றன. அந்த அறிவுரைகளும் காதுகளில் விழுந்து வாய் வழியாக வேறு காதுகளுக்கு ஏற்றுமதியாகிக் கொண்டே இருக்கின்றன இதயங்களுக்குள் இறக்குமதியாவதில்லை. முதியவர்களின் சுருக்குப் பையில் மிச்சமிருக்கும் ஒரே பொருள் அறிவுரை தான். அதனால் ...
More

கவிதை : பெண்

கள்ளிப்பாலை கவனமாய் ஊற்று. தொண்டைக் குழிக்குள். வேகமாய் சுற்றும் மின் விசிறி இருந்தால் சுவிட்சைப் போட்டு கதவைப் பூட்டு. இல்லையேல் தண்ணீர் தொட்டிக்குள் தூக்கிப் போடு. அல்லது கொஞ்சம் நெல்லையாவது வாய்க்குள் போடு. அப்படியே வீட்டுக்கும் தீ வை. இருபது வருடம் கழிந்து இடிவிழவும் சாத்தியமுண்டு.
More

கவிதை : திருமணங்கள் நடந்தன !

வீட்டுக்கு முன்னே தோரணம் கட்ட செவ்வாழை தேடியலைந்து, அலங்காரச் சள ஓலைக்காய் காடெல்லாம் ஓடியலைந்து, பந்தலில் வந்திறங்கும் சந்தை மூட்டை பிரித்து, விடிய விடிய கதைகளைக் கூர்தீட்டி காய்கறி நறுக்கி, காக்கோட்டையில் தண்ணீர் எடுத்து கொல்லப்புறக் குட்டுவங்கள் நிரப்பி, மணமக்கள் உட்கார சேலைகளால் மணப் பந்தல் அமைத்து, தூங்கியும் தூங்காமலும் அதி காலையில் தாலி கட்டிக் கொண்ட திருமண விழாவின் சுகம், மண்டபத்தில் எட்டுமணிக்குப் போய் எட்டரைக்கு முடியும் தற்காலத் திருமணங்களில் ...
More

காளான் கவிதை !

மழைத் துளி விதைகளில் விழித்தெழும் காளான்கள் மர அடிவாரங்களில் மழை விட்டபின் குடைவிரிக்கும் எந்த காளான் நல்லதென்று தொட்டுப் பார்த்தும், கிள்ளிப் பார்த்தும் வடிவம் பார்த்தும் அடிப்பாகத்தின் நிறத்தைப் பார்த்தும் பட்டென சொல்வார் ஞானம்மா பாட்டி. எந்த மரத்தடியில் நல்ல காளான் முளைக்குமெனும் காளான் வரலாறு பாட்டிக்கு அத்துப்படி. தாவர ஈசலாய் தலைநிமிரும் காளான்கள் பசிக்கும் கிராமத்துக்கு இலவச உணவாகும். ரப்பர் பால் கசியும் கிராமத்து மண் வெளிகளில் இப்போதெல்லாம் காளான்கள் முளை...
More

தள்ளுபடி…

ஆடித் தள்ளுபடிக்கென காத்திருந்த கூட்டம் தெருக்களில் உலவிய சுதந்திரக் காற்றை மிதித்து நசுக்கி புறந்தள்ளின. போக்குவரத்து நெரிசல்களில் சிக்கிய ஆம்புலன்ஸ்களின் பதறும் குரலைக் கேட்டு செய்வதறியாது திகைத்தது சாலை. அடுத்தவர் எடுத்த சேலையே அழகானதென பெருமூச்சு நெரிசலுடன் சேலைக் குவியலில் சிக்கிக் கொள்கின்றனர் பெண்கள். சேதாரம் விலக்கி விட்டு செய்கூலியில் சேர்த்து விட்டதாய் வந்து சென்றவர்களின் வார்த்தைகள் நகைக்கடை வாசல்களில் மண்புழுக்களாய் உலவின. கைக்கு நாலு பை வாங்கி நுழையு...
More

அவர்கள் அறியாதிருக்கிறார்கள்

உனது பார்வை உரசுகையில் வேதியல் மாற்றம் விளங்கிக் கொண்டேன் விரல்களின் ஸ்பரிசங்களில் எல்லா தொடுதலுக்கும் சமமான எதிர் வெட்கம் உண்டென்று இயற்பியல் அறிந்தேன் உனது புன்னகையின் கூட்டுத் தொகையில் தான் என் ஆனந்தத்தின் அகலம் என கணிதம் கற்றேன். உன் நுனிநாக்கில் தவறி விழுந்த வாக்கியங்களில் வெட்கப்பட்ட சேக்ஸ்பியரைக் கண்டேன். உன் தோழியரின் துணையில் சங்ககால தூதுகளை கண்டுகொண்டேன். எனினும் எதுவும் கற்கவில்லையென பேராசிரியர்கள் பொறுமித் திரிகிறார்கள்
More

இப்படியே அழையுங்கள்…

சரேலென்று திரும்பிய உன் பார்வையின் விழுதுகளில் என் முதல் புலன் மூச்சிழந்தது. உன் கூந்தலின் அலைவரிசை ஒலிபரப்பிய வாசனையில் என் அடுத்த புலனும் அடங்கியது. இசைகளிள் உச்சத்தை உன் வாய் உச்சரித்த வினாடியில் என் செவிப் புலனும் சொக்கியது. உன் முத்தத்தின் சுவையை கற்பனைக் காட்டுக்குள் அலையவிடுகையில் என் நாவும் நாவடக்கியது. உன் விரல்களின் நுனிகளில் சுவர்க்கத்தைக் கட்டி என் கைகளில் அதன் ஸ்பரிசத்தைக் காட்டுகையில் தொடு புலனும் தளர்ந்தது. என் புலன்களெல்லாம் இப்போது உன்ன...
More

இப்படியும் எழுதலாம்

1 நிலவில் நடப்பதை விட நிலவுடன் நடப்பதே பெருமை காதலுக்கு 2 காதல் வாழ்க்கையைத் தருமாம் மரணங்கள் சொல்கின்றன   3 முதல் பார்வையில் காதல் வருமென்பதை நம்புங்கள் இல்லையேல் காதல் வருகையில் தான் முதல் பார்வை வருமென்பதையேனும்
More