Christianity : நீங்களே உணவு கொடுங்கள்.

உணவு ! இந்த உலகில் உயிர்வாழ நமக்கு உணவும் நீரும் அடிப்படைத் தேவைகள். அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அந்த அடிப்படைத் தேவைகள் நமக்குக் கிடைக்கின்றனவா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. வேர்ல்ட் ஃபுட் புரோக்ராம் அமைப்பின் புள்ளி விவரத்தின் படி உலகில் 795 மில்லியன் மக்கள் தேவையான அளவு உணவு கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள். புரியும் படி சொல்ல வேண்டுமெனில் ஒரு ஒன்பது பேரை எடுத்துக்கொண்டால் அதில் ஒருவர் பட்டினியின் பிரஜை ! அதிலும் ஆசியா தான் ஏழை கண்டம். உலக பட்டினி வாசிகளில் 67% பேர் ஆசியக் கண்ட...
More

Christianity : மிகுதியாகத் தருகிற தேவன்.

அதிகமாகப் பிறருக்குக் கொடுக்கும் நபர்களை எல்லோரும் பாராட்டுவார்கள். "அவன் கிள்ளிக் கொடுக்கிற ஆள் இல்லடா, அள்ளிக் கொடுக்கிற ஆள்" என புகழ்ந்து தள்ளுவார்கள். கஞ்சன் எப்போதுமே சமூகத்தில் இழிவான பெயரைத் தான் சம்பாதிப்பான். அவன் சுயநலத்தின் சுருக்கமான வடிவம். நமது தேவன் நிறைவாகக் கொடுக்கிற தேவன். நமது தேவன் மிகுதியாகக் கொடுக்கிற தேவன். ஐந்து அப்பம் இரண்டு மீனை பகிர்ந்து கொடுத்தபோது பன்னிரண்டு கூடைகள் மிகுதியாய் இருந்தன. போதும் போதும் எனுமளவுக்கு சாப்பிட்டார்கள். நிறைவைத் தாண்டியும் அவர்களிடம் உ...
More

Christianity : இறைவனின் குழந்தைகள்.

இறைவனின் குழந்தைகள். "உனக்கு என்ன கொழுந்த பொறந்திருக்கு ?" "ஆம்பள !" "நல்லாயிருக்கட்டு பிள்ள.. நல்லாயிருக்கட்டு" "உனக்கு ஆணா பெண்ணா ?" "பெண்ணு.." "ஆணாயிருந்தா என்ன பெண்ணா இருந்தா என்ன ? ஆயுசோட இருக்கணும். அத்தற தேன்" ஒரு சில பத்து ஆண்டுகளுக்கு முன் நம்ம ஊர் கிராமங்களில் இத்தகைய உரையாடல்கள் சர்வ சாதாரணம். ஆண் குழந்தையென்றால் உடனடி மகிழ்ச்சி ! மனப்பூர்வமான வாழ்த்துகள். பெண் பிள்ளையெனில், "சரி, கடவுள் கொடுத்தது நல்லா இருக்கட்டும்" எனுமளவில் ஒரு வார்த்தை ! ஒரு ஆறுதல் வார்த்தை போல. ஒருவ...
More

இயேசு சொன்ன உவமைகள் : 7 : வலையும், வாழ்வும்.

  மத்தேயு 13 : 47 - 50 “விண்ணரசு கடலில் வீசப்பட்டு எல்லா வகையான மீன்களையும் வாரிக் கொண்டுவரும் வலைக்கு ஒப்பாகும். வலை நிறைந்ததும் அதை இழுத்துக்கொண்டு போய்க்கரையில் உட்கார்ந்து நல்லவற்றைக் கூடைகளில் சேர்த்து வைப்பர்; கெட்டவற்றை வெளியே எறிவர். இவ்வாறே உலக முடிவிலும் நிகழும். வானதூதர் சென்று நேர்மையாளரிடையேயிருந்து தீயோரைப் பிரிப்பர்; பின் அவர்களைத் தீச்சூளையில் தள்ளுவர். அங்கே அழுகையும் அங்கலாய்ப்பும் இருக்கும்.”   மத்தேயு 13 : 47 - 50 பரலோகராஜ்யம் கடலிலே போடப்பட்டு, ச...
More

திருக்குறளும், சாலமோனின் நீதிமொழிகளும்

 VS திருக்குறளைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க இயலாது எனுமளவுக்கு தமிழ் மொழிக்கு அற்புதமான ஒரு பொக்கிஷத்தைத் தந்தவர் வள்ளுவர். கி.மு. முதல் நூற்றாண்டில் ( கி.மு. 31 ) வாழ்ந்தவர். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று அறைகளுக்குள் வாழ்வின் அத்தனை தத்துவங்களையும் அடக்கிய ஞானி அவர். . ரோமக் கவிஞர் ஓவிட் என்பவர் ( 43 BC - 18 AD ) மட்டுமே அவருடைய காமத்துப் பாலை கொஞ்சம் ஒத்து எழுதியவர். கன்பூசியஸ் சில இடங்களில் ஒத்துப் போகும் கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார், அதைத் தவிர்த்தால் அறத்துப் பால், பொர...
More

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 1

நேரம் !!!!   நம்பினால் நம்புங்கள், கணவன் மனைவியரிடையே உள்ள பிரச்சினைகளின் மையம் இந்த விஷயம் தான். "எனக்காக அவரு டைம் ஸ்பென்ட் பண்ண மாட்டேங்கறாரு" ! ஆண்களுடைய விருப்பங்களும் பெண்களுடைய விருப்பங்களும் தனித்தனியானவை. ஆண்களுக்கு கிரிக்கெட் மோகம் இருக்கும் போது, பெண்களுக்கு சீரியல் மோகம் இருக்கும். ஆண்கள் தூங்கி ஓய்வெடுக்க விரும்பும் போது பெண்கள் பேசிக்கொண்டிருக்க விரும்புவார்கள். ஆண்களுக்கு ஷாப்பிங் அலர்ஜியாய் இருக்கும். பெண்களுக்கோ அது தான் எனர்ஜியாய் இருக்கும். இப்படி மாறி மாறி இ...
More

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 2

வித்தியாசங்களே வலிமையானவை ! சின்ன வயதில் நிறைய பாட்டிக் கதைகள் கேட்டிருப்போம். அரசகுமாரியின் உயிரை ஏழு மலை, ஏழு கடல் தாண்டி ஒரு குகையில் கிளியின் உடலில் ஒளித்து வைத்திருப்பான் அரக்கன். அந்த அரக்கனைக் கொன்று இளவரசியை மீட்பான் இளவரசன். பிரம்ம பிரயர்த்தனத்துடன் இளவரசன் நடத்தும் வீர தீரப் போராட்டங்கள் மெய் சிலிர்க்க வைக்கும். குடும்ப வாழ்க்கையும் இத்தகைய ஒரு மிகப்பெரிய சவாலான, கஷ்டமான, போராட்டமான விஷயம் என்று தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் உண்மை அப்படியல்ல. பெரிய பெரிய போர்களிலல்ல, சின்னச...
More

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 3

மரியாதை கலந்த அங்கீகாரம்     மரியாதை என்றதும் பதற வேண்டாம். மரியாதை என்பதற்கு சமூகம் ஏகப்பட்ட அர்த்தங்களை வைத்திருக்கிறது. சிலருக்கு சாஷ்டாங்கமாய்க் காலில் விழுவது தான் மரியாதை. சிலருக்கு ஒரு சின்னப் புன்னகை கூட மரியாதை தான். சிலருக்கு வார்த்தைகள், சிலருக்கு வணக்கம், சிலருக்கு சின்னச் சின்ன செயல்களின் வெளிப்பாடுகள். மரியாதை என்பது மனித இனத்தின் தனித் தன்மை. அது கணவன் மனைவியரிடேயும் இருக்க வேண்டியது முக்கியம். அதற்காக ஏதோ ஐயா, அம்மா என்று அழைத்து மரியாதை செய்ய வேணுமா என டெ...
More

குடும்ப வாழ்க்கையின் ரகசியங்கள் – 4

நமக்கே நமக்கான நேரங்கள் வெயில் சுட்டெரிக்கும் மத்தியான நேரம் பீச் பக்கம் போனால் பார்க்க முடியும் வெயிலுக்கே சவால் விடும் காதலர்களை. சூரியபகவானே டென்ஷன் ஆகிற அளவுக்கு அவரை அலட்சியப் படுத்தி காதலில் கலந்திருப்பார்கள் காதலர்கள். திருமணம் முடியும் வரை, அல்லது காதல் முறியும் வரை இந்த நெருக்கமும், பிணைப்பும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருக்கும். கொஞ்சம் நேரம் கிடைச்சா கூட அந்த சைக்கிள் கேப்பில் சந்திக்கவும், பேசவும், தனிமையாய் நேரம் செலவிடவும் காதலர்களின் மனம் தவியாய்த் தவ...
More