மலர்களே மலர்களே

தினசரி காலையில் விரல் வருடி ஊர்ஜிதப் படுத்துகிறேன் இன்னும் முளைக்கவில்லை மொட்டு. தரையில் ஈரமிருக்கிறதா தேவைக்கு பச்சையம் இருக்கிறதா என பரிசோதனைப் பார்வைகளைப் பதியமிடுகிறேன். உரங்களுக்கும் மண்புழுக்களுக்கும் கூட ஏற்பாடு செய்து பூக்கள் வேண்டி பிரார்த்தனைகளும் செய்தாயின்று. செழித்து வளரும் செடியில் எங்கும் மொட்டுகளைக் காணோம். பூக்களைக் காணும் கனவுகள் வெறித்து கரு விழிகள் இரண்டிலும் கூட பூக்கள் விழுந்து விட்டன. என் பூ தேடலைப் புரிந்து கொள்ளாமல் புன்னகைத்துக் கொண்...
More

தாயில்லாமல்

இப்போதும் எங்கேயோ ஒரு தாய் தன் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். எப்போதும் எங்கேனும் ஒரு மகன் தன் தாயை மிதித்துக் கொண்டிருக்கிறான். எப்போதும் எங்கேயோ எழுதப்படாத வலிகளின் வரிகளால் நிரம்பிக் கொண்டிருக்கின்றன அன்னையரின் டைரிகள். எப்போதும் எங்கேனும் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது ஒரு கவிதை தாய்ப்பாசத்தின் மகத்துவம் குறித்து.
More

காமம் விலகாக் காதல்

என் கவிதை தேசத்தின் கர்வக் கிரீடமே. உன் நினைவுச் சரிவுகளில் வெள்ளாட்டுக் குட்டியாய் தள்ளாடித் திரிகிறது மனது. தேவதை ஒன்றை தேவலோகம் அனுப்பியதாய் தேகங்களில் சுடுகிறது தனிமை. ஸ்பரிசங்களின் அகராதியை புரட்டிப் பார்க்க தருணங்களின் தயவின்றி உருகிக் காய்கிறது இளமை. ஏகாந்தத்தின் பள்ளத்தாக்குகளில் காதலின் புதைகுழிக்குள் ஊமையின் குரலென மூழ்கிச் சாகிறது கிழமை. உன் பிறந்த நாளில் விரல்களின் விண்ணப்பங்களை உன் மேனியின் முகவரிக்கு அனுப்பி வைக்காத அவஸ்தை மோகத்தின் முனகல்கள...
More

கோயிலும், தாவணியும்

ஆலயம் போக முரண்டு பிடித்ததில்லை. பாவாடை தாவணி சுடிதார் சேலை ஜீன்ஸ் எப்படிப் பெண்கள் ஆலயம் வந்தார்கள் என கண்கள் கணக்கு வைத்துக் கொள்ளத் தவறியதுமில்லை. அப்போதெல்லாம் ஆலயம் வருவது ஆண்டவனைத் தரிசிக்க என்பது புரியாமலேயே போய்விட்டது. மத்தவங்க மாதிரியில்லை நம்ம பையன் தவறாமல் ஆலயம் போகிறான். பதின் வயது மகனைப்பற்றி பெருமைப்படும் மனைவியிடம் என்ன தான் சொல்லிவிட முடியும் ? நான் !
More

என் காதல்

கும்மிருட்டுப் பாதையில் தைரியமாய் எடுத்து வைக்கும் பாதப் பதிவுகள் போன்றவை என் காதல் விண்ணப்பங்கள். பாம்புகள் பதுங்கியிருக்கலாம். படுகுழுகள் பசித்திருக்கலாம் விலங்குகள் விழித்திருக்கலாம் அல்லது பாதையே இல்லாமல் இருக்கலாம். எனினும் கனவுகளின் வெளிச்சத்தை மனம் தூக்கிச் சுமக்கும் காதல் லாந்தரில். நள்ளிரவில் வைத்தியரைத் தேடி ஓடும் பிள்ளைத் தாச்சியின் கணவன் போல தைரியமாய் ஓடிக்கொண்டிருக்கின்றன காதலின் விண்ணப்பங்கள். பின்னணியில் ஓர் தாய்மைத் தாயின் தவிப்பொலியைச் சும...
More

நிற்காத நிமிடங்கள்

விரல் உரசினாலே மின்னலடித்த காலம் உண்டு என் உதடுகள் உரசினால் கூட சலனமற்றிருக்கிறாய் இப்போது. உன்னுடைய மனசுக்கு வயதாகி விட்டது. உன்னுடைய காமத்தின் கலத்தில் ஊற்றப்பட்டிருந்த காதல் காலாவதியாகி விட்டிருக்கிறது. உன்னுடைய பேச்சிலிருந்த கவிதை காணாமல் போய் அவசர தொனியே அலாரமடிக்கிறது எப்போதும். உன்னுடைய கோபத்தின் எருதுகள் மிருதுவான புன்னகையை மிதித்துச் செல்கின்றன. என்னோடு அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது உனக்கு நேரத்தை வீணடிப்பதாகி விட்டது. நீர்வீழ்ச்சியிலேயே தங்கி விட ...
More

நில் நிதானி காதலி

எதையும் யோசிக்காமல் பேசிக் கொண்டிருந்தது ஒரு காலம். இப்போது எதுவும் பேசாமல் யோசித்துக் கொண்டிருக்கிறேன். உன்னால். ஃ நீ சிரிக்க வேண்டுமென்பதற்காகவே நான் பேசியதுண்டு. நான் பேசுவதற்காகவே நீ சிரித்த நிஜம் தெரியாமல். ஃ நிமிட நேரம் தான் உன்னைப் பார்த்தேன் இப்போது நிமிட நேரமும் விடாமல் நினைத்துத் தொலைக்கிறேன். ஃ உன் கண்களில் கண்ணீர் வரக்கூடாதே என்னும் கவலையில் நான். நான் கவலைப் படுவதால் கண்ணீர் விடுகிறாய் நீ ஃ பூவா தலையா கேட்கிறாய் நீ. காசு என்கி...
More

மெளனம் உரைத்தல்

தனிமையாய் நிற்கும் ஒற்றைப் பாறையில் முதிர்ந்த முகத்திலோ, ஆளில்லாத ஒற்றையடிப்பாதையின் வரப்போர கற்றாழை இலைகளிலோ, தற்காலச் சுற்றுலாத் தலங்களின் கற்காலக் குகைகளிலோ, குறைந்த பட்சம் பேருந்தின் முன்புற இருக்கை முதுகிலோ, எங்கும் காணக் கிடைக்கிறது ஏதேனும் ஓர் காதல் ஜோடியின் பெயர். நேரில் சொல்லத் தயங்கிய பட்டியல் இத்தனை பெரிதாமோ ? நினைக்கும் நெஞ்சில் குத்தும் நினைவுகள். கல்லூரி கால பின் பெஞ்சில் காம்பஸ் கிழித்த அவள் பெயர் இப்போது எங்கே இருக்கிறதோ ?
More

மோகம் மிச்சமில்லை

மோகத்தின் பானம் ஊற்றிய கோப்பைகளில் காதல் உவமைகள் தெறிக்கின்றன. வாத்சாயன விழிகளோடும் கம்பன் விரல்களோடும் காகிதக் குடுவைகளில் தயாராகின்றன காதல் கவிதைகள். தூரமாய் போன நிலவை எட்டித் தொட கவிதை வாலில் தீ கட்டி நீட்டுகின்றனர் சிலர், தீ நாக்குகளின் வெப்பத்தில் மூச்சு முட்டும் மோகத் திணிப்புகளில் கவிதையை வழிய விடுகின்றனர் சிலர், அசைந்து நடக்கும் அழகையும், பார்வைக்குத் தெரியும் பாதங்களையும் கவிதைச் சமையலறை மிகச் சுவையாய் சமைக்கிறது. காமத்திற்கு ஆயிரம் கோடி விரல்கள...
More

முக்கியமற்ற முக்கியங்கள்

முத்து தேடிய காலங்களில் மீன் பிடிக்கத் துவங்கியிருந்தால் சில முத்துக்களை இப்போது வாங்கியிருக்கக் கூடும். நாகக் கல் தேடி ஓடிய தூரத்தை நீளமாய் போட்டிருந்தால் கைகூடியிருக்கும் ஏதேனும் ஓர் மாரத்தான் வெற்றி. காதலுக்காக நழுவ விட்ட கணங்களை இறுகப் பிடித்திருந்தால் ஒருவேளை முற்றத்தில் பூத்திருக்கக் கூடும் சில காதல்கள் என்ன செய்வது முக்கியமற்றதாய் தோன்றும் நிகழ்வுகளின் கூட்டுத் தொகையில் தான் வாங்க முடிகிறது முக்கியமான சில இலட்சியங்களை.
More