தலைப்பிரசவம்

காதுக்குள் டன் டன் னாய் ஈயம் காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது டாக்டர் சொன்ன வார்த்தைகள். குழந்தையின் இதயத் துடிப்பு கேட்கவில்லையாம் காலை யாரோ பாதாளத்திலிருந்து இழுப்பது போல் இருக்கிறது. நாளை மனைவிக்கு பிரசவம் என்று நாள் சொல்லியிருந்தார்கள், அதனால் தான் இன்று மனைவி பிரியாவுடன் வந்திருந்தான் விக்னேஷ் சிரிப்பும் கனவுகளுமாக வந்து செக்கப் பண்ணியபோது தான் டாக்டர் முகம் மாறத் துவங்கியது எதிர்பார்க்கவே இல்லை திடீரென்று இப்படி சொன்னபோது இடிவிழுந்தது போல் இருந்தது டாக்டர் நீங்க என்ன சொல்றீங்க ? ஒவ...
More

மெளனமாய் ஒரு மரணம்.

  தயவு செய்து என்னுடைய வக்கீல் சொல்வதை நம்பாதீர்கள். என் அப்பாவைக் கொன்றது நான் தான்... குற்றவாளிக் கூட்டிற்குள் நின்றிருந்த விக்னேஷ் கத்தினான். நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த அனைவரும் ஒட்டுமொத்த அதிர்ச்சிக்குள் தள்ளப்பட்டார்கள். மிகுந்த பிரயாசைப்பட்டு வக்கீலை ஏற்பாடு செய்து, வாதிட வைத்து எப்படியாவது விக்னேஷை வெள்ளிக்கொண்டு வரவேண்டுமென்று கத்திமேல் உட்கார்வது போல் ஓரமாக அமர்ந்திருந்த சந்துரு தலையிலடித்துக் கொண்டான். இன்று தீர்ப்பு நாள்... கண்டிப்பாக தீர்ப்பு விக்னேஷ்க்கு சாதகமாக வரும்...
More

சிறுகதை : சர்ப்ப தோஷம்

அந்த ஆலமரத்தின் விழுதுகள் போல தோன்றும் பல உண்மையில் விழுதுகள் அல்ல, பாம்புகள் !! என்னும் பயம் பாபுவுக்கு சிறுவயதிலிருந்தே ஊட்டப்பட்டிருந்தது. அவனுக்கு மட்டுமல்ல அந்த கிராமம் முழுவதுக்குமே அந்த தகவல் தான் காலம் காலமாக சொல்லப்பட்டு வந்திருந்தது. எனவே அந்த ஆலமரம் அந்த ஒட்டு மொத்த கிராமத்துக்குமே ஒரு பயத்தின் சின்னமாக நிமிர்ந்து நின்றது. ஆலமரத்தின் கீழே இருந்த சிறு சிலையில் நாகம் ஒன்று படமெடுத்து ஆடியது. ஆலமரத்தின் இடது பாகத்தில் சின்னதாய் ஒரு நாகராஜா கோயில். கிராமத்தில் நாக தோஷம் ஏதும் வந்த...
More