குறை சொல்தல் வேண்டாமே !

முழுக்க முழுக்க தங்கத்தால் செய்யப்பட்ட தங்கதேசத்தில் வாழ நேர்ந்தால் கூட, “சே… எங்கே பாத்தாலும் மஞ்சளா இருக்கே” என குறை சொல்லும் மக்கள் இருக்கிறார்கள் என்கிறார் லார்ட் ஜெஃப்ரி. குறை சொல்தல் சர்வதேசக் கெட்ட குணம். சிலர் மனிதர்களைக் குறி வைத்து குறை சொல்வார்கள். சிலர் மனிதர்கள் என்றில்லை, விலங்குகள், தெய்வங்கள், அஃறிணைப் பொருட்கள் என எல்லாவற்றையும் குறை சொல்வார்கள். இதொன்றும் இன்று நேற்று தோன்றிய சமாச்சாரமல்ல. ஆதி மனிதன் ஆதாமே பழத்தைச் சாப்பிட்டு விட்டு “நீர் தந்த இந்த ஏவாள் தான் பழத்தைக் கொடு...
More

பாராட்டலாமா ? வேண்டாமா ?

  “மனித மனம் தனது ஆழத்தில் பாராட்டுக்காக ஏங்குகிறது” – என்கிறார் வில்லியம் ஜேம்ஸ்.  தான் முக்கியமானவனாகக் கருதப்படவேண்டும், தான் அங்கீகரிக்கப் படவேண்டும், பிறரால் விரும்பப்படவேண்டும் எனும் ஆசையின் சல்லி வேர்கள் எல்லா மனிதர்களுக்குள்ளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. “இப்போதெல்லாம் பாராட்டும் பழக்கமே குறைந்து விட்டது” என்று சொன்னால் உடனே எல்லோரும் தலையாட்டுவீர்கள். “ஆமாம். யாருமே யாரையுமே பாராட்டுவதில்லை. எல்லோருக்கும் ஈகோ” என சட்டென பதில் வரும். அந்த பேச்சை அப்படியே ஒரு நிமிடம் நிற...
More

நேரமே கிடைக்கலீங்க

  “சுத்தமா நேரமே இல்லீங்க..” எனும் வாக்கியத்தைப் பேசாமலோ, கேட்காமலோ ஏதாவது நாள் முடிந்திருக்கிறதா ? நேரம் போதவில்லை எனும் குற்றச்சாட்டு எல்லோரிடமும் இருக்கிறது. எல்லோரும், எப்போதும் எதையோ செய்து கொண்டே இருக்கிறார்கள். கடைகள் நள்ளிரவு தாண்டியும் விழித்திருக்கின்றன. வீடுகளில் விளக்குகள் ஜாமங்கள் கடந்தும் கூட அணைக்கப்படாமல் இருக்கின்றன. சூரியனுக்கு முன்பே சாலைகளில் மக்கள் வந்து விடுகிறார்கள். மக்கள் ரொம்பவே பிஸி. எவ்வளவு தான் பிஸியாய் இருந்தாலும் கடைசியில் “நேரம் கிடைக்கல” எனும் புரா...
More

தேர்வுக்கும், தண்ணீருக்கும் என்ன சம்பந்தம்

நன்றாகத் தேர்வு எழுத என்னென்ன வேண்டும் ? நன்றாகப் படிக்க வேண்டும், படித்தவை நினைவில் இருக்க வேண்டும், நினைவில் இருப்பதை எழுத பேனா வேண்டும், பேப்பர் வேண்டும்.. என்றெல்லாம் யோசிக்கிறீர்களா ? கொஞ்சம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதென்ன மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் விஷயமாய் இருக்கிறதே என நினைக்கிறீர்களா ? வியப்பூட்டும் இந்த ஆராய்ச்சி மருத்துவ உலகில் தற்போது சிறந்த ஒரு ஆராய்ச்சியாய் கொண்டாடப்படுகிறது. தே...
More

கோபம் கொல்லும்

  பட் பட்டென எதற்கெடுத்தாலும் கோபப்படும் ஆசாமிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய ஆராய்ச்சி ஒன்றை இங்கிலாந்து மருத்துவ ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். பெரும்பாலும் மனிதனுடைய கோபம் வெளிப்படும் இடம் குடும்பம் என்றாலும் அது வீடுகளில் வெடிக்கும் வரை உள்ளுக்குள்ளேயே வெகு நேரம் காத்திருக்கிறது. கோபம் அதிகரிக்கும் போது மனித உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, குருதி அழுத்தம் கூடுகிறது, பல்வேறு வேதியல் மாற்றங்கள் நிகழ்கின்றன, உடலின் தன்மையே நிலை தடுமாறுகிறத...
More

கால்சென்டர் ஊழியர்கள்

இந்த கால்செண்டர்,பி.பி.ஓ வேலை பார்க்கும் இளசுகள் ரொம்பப் பாவம். வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இவர்களை ஏதோ பலான ஆசாமிகள் போல பார்ப்பார்கள். “கால் செண்டரா…ம்ம்ம்…ஜமாய் மச்சி” என நண்பர்கள் கிண்டலடிக்கவும் செய்வார்கள். உண்மையில் இந்த வேலை செய்பவர்களின் நிலமை ரொம்பப் பாவம். கஸ்டமர் என்ன மடத் தனமான கேள்வி கேட்டாலும் துளியூண்டு கூட எரிச்சல் காட்டாமல் அமைதியாகப் பதில் சொல்ல வேண்டும். “என்னய்யா எட்டுக்கால் பூச்சிக்கு எட்டு கால் இருக்கு ?” என யாராவது கேட்டால். “தேங்க்யூ பார் காலிங் சார்… நான் பாக்கற...
More

அல்வாக் கணவனை அறிவது எப்படி ?

  என் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர் ன்னு பெண்கள் பேசறதைக் கேட்பதே சந்தோஷம் தான். ஆனா நிலமை எப்போ வேணும்னாலும் மாறலாம். சைக்கிள் கேப் கிடச்சா போதும் ஆண்கள் ஒரு லாரியையே ஓட்டிட்டு வந்துடுவாங்க. சந்தேகப் படுங்கன்னு சொல்லல ! ஆனா சந்தேகப்படலாமா வேண்டாமான்னு கீழே படிச்சு தெரிஞ்சுக்கங்கன்னு சொல்றேன்.   உங்க பார்ட்னர் கொஞ்ச நாளாவே “அந்த” விஷயத்துல ஆர்வமே இல்லாம இருக்கிறாரா ? முழிச்சுக்கோங்க சம்திங் ராங் ! பாத்ரூம் போனா கூட செல்போனும் கையுமா போறாரா. கீழேயே வைக்காம எப்பவுமே கையில ...
More

அல்வா உலகம்..

  இது அல்வா உலகம். எப்படா ஒருத்தன் மாட்டுவான்னு வலை வீசிட்டுத் திரியறவங்க அதிகமாயிட்டாங்க. மாட்டினா கந்தல் தான். உஷாரா இருக்க இந்த அட்வைஸ்களைப் புடிங்க ! “ஆஹா நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள், நீங்கள் சிங்கப்பூர் செல்லலாம்” என்றெல்லாம் வரும் மின்னஞ்சல்களை தயவு தாட்சண்யம் காட்டாமல் உடனடியாக அழித்துவிடுங்கள். “லாட்டரில கோடி ரூபாய் விழுந்திருக்கிறது” என்று உங்களுக்கு யாராவது மெயில் அனுப்பினால் ஒரு சின்ன சிரிப்புடன் டிலீட் செய்து விடுங்கள். அது மட்டுமல்ல, “அட்வான்சாய் பணம் அன...
More

கட்டுரை : புகைப் பழக்கத்தை எளிதில் விரட்டலாம்

( தமிழ் ஓசை களஞ்சியம் இதழில் வெளியான கட்டுரை ) சமீபகாலமாக சமூக அக்கறை கொண்ட அரசியல்வாதிகளாலும், சமூக அமைப்புகளினாலும் புகைத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பரவலாக உருவாகியுள்ளது கண்கூடு. புகைத்தலை விட வேண்டும் எனும் எண்ணம் புகைப்பழக்கம் உடைய அனைவருக்குமே உண்டு என்கிறது ஆய்வு ஒன்று. ஆனால் பெரும்பாலானவர்கள் புகைத்தலை விட முயன்று முயன்று படு தோல்வி அடைந்தவர்களே. உலக அளவில் புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்களில் பத்து விழுக்காடு பேர் இந்தியர்கள் என்பது கவலைக்குரியது. சீனா இந்த விஷயத்திலும் முத...
More

இந்திராணி : பதறடித்த ஒரு படுகொலை.

ஒரு சின்ன செய்தியாக முதலில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கு தேசத்தின் முதுகெலும்பை சில்லிட வைக்கும் பெரும் செய்தியாக உருமாறியிருக்கிறது. தனது சொந்த மகளை, அதுவும் திருமண வயதான மகளை, திட்டமிட்டு படுகொலை செய்து விட்டு எதுவுமே நடக்காதது போல் இயல்பு வாழ்க்கை வாழ்ந்த நாற்பத்து மூன்று வயதான இந்திராணி முகர்ஜி தான் வழக்கின் மையம். அஸ்ஸாமில் பிறந்து கவுகாத்தியில் வளர்ந்தவர் இந்திராணி. இவரது தந்தை ஒரு பொறியாளர். பெற்றோருடன் கவுகாத்தியில் வசித்து வந்த இந்திராணிக்கு முதல் காதலனாக அறிமுகமானார் சித்தார்த் தா...
More