இணையத்தில் தகவல் தேடுவோர் கவனிக்க வேண்டிய டாப் 10 விஷயங்கள்.

சரியாக பத்து ஆண்டுகளுக்கு முன்பு தமிழோசை பத்திரிகையில் எழுதிய கட்டுரை, இன்றைய சூழலுக்கும் பயனுள்ளதாய் இருப்பது போல தோன்றியதால் ... மீள் பதிவு. கணினி என்பது ஆராய்சிகளுக்கும், அலுவலகங்களுக்கும் என்ற நிலை மாறி இன்று வீடுதோறும் ஓர் செல்லப் பிராணி போல இடம்பெற்றிருக்கிறது. இணையத்தின் பயன்பாடு வந்தபின் கணினி என்பது அன்றாட வாழ்வின் தேவைகளுக்கானவை என்னும் நிலை உருவாகியிருக்கிறது. மின்னஞ்சல்கள் அரட்டைகள் என தொடர்புகளுக்குப் பயன்படும் கணினி, தகவல் களஞ்சியமாகவும் பயன்பட்டு வருகிறது என்பது யாவரும் அறி...
More