என் காதல்

கும்மிருட்டுப் பாதையில் தைரியமாய் எடுத்து வைக்கும் பாதப் பதிவுகள் போன்றவை என் காதல் விண்ணப்பங்கள். பாம்புகள் பதுங்கியிருக்கலாம். படுகுழுகள் பசித்திருக்கலாம் விலங்குகள் விழித்திருக்கலாம் அல்லது பாதையே இல்லாமல் இருக்கலாம். எனினும் கனவுகளின் வெளிச்சத்தை மனம் தூக்கிச் சுமக்கும் காதல் லாந்தரில். நள்ளிரவில் வைத்தியரைத் தேடி ஓடும் பிள்ளைத் தாச்சியின் கணவன் போல தைரியமாய் ஓடிக்கொண்டிருக்கின்றன காதலின் விண்ணப்பங்கள். பின்னணியில் ஓர் தாய்மைத் தாயின் தவிப்பொலியைச் சும...
More

ஸ்மார்ட்டா வேலை பாருங்க.

  வாழ்க்கை என்பது பாரம் இழுக்கும் பாதையல்ல. சிந்தனைகளைக் கூர் தீட்டி பாரங்களையும் வரங்களாய் மாற்ற வேண்டிய பயணம். “ராத்திரி பகல் பார்க்காம கஷ்டப்பட்டு உழைத்தால் தான் வாழ்க்கைல முன்னேற முடியும்” இப்படி ஒரு வாக்கியத்தை நமது வாழ்க்கையில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் எல்லோருமே கேட்டிருப்போம். ஆனால் இன்றைய உலகம் இந்த சிந்தனையை விட்டுக் கொஞ்சம் விலகியிருக்கிறது. “கடின உழைப்பல்ல, நுணுக்கமான உழைப்பே முக்கியம்” என்கிறது நவீன உலகம். “ஸ்மார்ட் வர்க்” என இந்த நுண்ணறிவு வேலையைக் குறிப்பிடுகிறார்க...
More

கர்வம் தவிர்

  “கர்வமுடையவர்கள் எப்போதும் மற்றவர்களைக் குனிந்தே பார்ப்பதால், தனக்கு மேல் இருக்கும் உயரிய விஷயங்களைப் பார்க்கும் வாய்ப்பை இழந்து விடுகிறார்கள்” என்கிறார் கடந்த நூற்றாண்டின் பெருமைக்குரிய ஐரிஸ் நாட்டு எழுத்தாளர் சி. எஸ். லூயிஸ். தன்னை மட்டும் பல்லக்கில் உட்கார வைத்து மற்றவர்களை மதிப்புக் குறைந்தவர்களாய்ப் பார்க்க வைப்பது கர்வத்தின் முதல் வேலை !  மனிதனுடைய வளர்ச்சியின் படியில் கர்வம் கால்நீட்டிப் படுத்திருக்கும். இது தான் கடைசிப் படி என மனிதன் அதன் காலடியில் இளைப்பாறத் துவங்கும் போது, ...
More

மலைகளுக்கு மாலையிடு.

மலைகளுக்கு மாலையிடு. மலைகளே... பூமிப் பந்தின் கர்வக் கிரீடங்களே, மலைகளே, மலைப்பின் மறு பெயர்களே. உங்கள் தலை துடைக்க மென்மையின் மேன்மையான மேகத் துகள். உங்கள்உள்ளுக்குள் ஒளித்து வைத்திருக்கிறீர்கள் ஓராயிரம் ஒய்யாரச் சிற்பங்கள். காற்றுக்கும் கதிரவனுக்கும் கலங்காத கருங்கல் இதயம் உனக்கு., உன்னை எப்படிப் புகழ்வது ? நெஞ்சு மிர்த்தி ற்கும் வீரத்துக்கா, சில செடிகளுக்கு வேர் விட வழி விடும் ஈரத்துக்கா ? உன் மர்மப் பிரதேச மரக்கிளைகளில் தான் உண்மைச் சங்கீதம் ...
More

பூமியை நேசிப்போம் !

  ஒரு பிரபலமான ஜென் கதை உண்டு. இரண்டு துறவிகள் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். போகும் வழியில் ஒரு தேள் தண்ணீரில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தது. ஒரு துறவி அதைத் தூக்கிக் கரையில் போட முயன்றார், தேள் அவரைக் கொட்டியது. அவர் மீண்டும் மீண்டும் முயல, தேள் அவரைத் தொடர்ந்து கொட்டிக் கொண்டே இருந்தது. இரண்டாவது துறவி கேட்டார், “கொட்டுவது தேளின் இயல்பு. விட்டு விட வேண்டியது தானே” முதல் துறவி பதிலளித்தார், “கொட்டுவது தேளின் இயல்பு. அதே போல காப்பாற்றுவது மனிதனின் இயல்பு அல்லவா ?” ...
More

சார்பு

நன்றாக இருக்கிறது என்று நிறையவே சாப்பிட்டாய் வாங்கிய சந்தையைச் சொல்லும் வரை. கூந்தலில் சூடிக் கொள்ள தயக்கம் கொள்ளவேயில்லை செடியின் தாய்வீட்டைச் சொல்லும் வரை. இப்போது எல்லாவற்றையும் நிராகரிக்கிறாய். சுவையும் மணமும் உனக்குப் பிடித்தே இருந்தது. ஆனாலும் பிடிவாதமாய் மறுக்கிறாய். யார் எழுதியதானாலும் கடைசியில் கைழுத்திடுவது யாரென்பதே முக்கியமுனக்கு. சிரிப்பு தான் வருகிறது சிப்பி பிடிக்காது என்பதற்காய் முத்தை நிராகரிக்கும் உன் முட்டாள் தனம்.
More

அடையாளங்கள்

உன்னைச் சந்தித்தபோது மெல்லப் புன்னகைத்தேன் உற்சாகக் கண்களோடு உற்று நோக்கினேன். நீயோ நான் புறக்கணித்ததாய்ப் புலம்பியிருக்கிறாய். காதுவரைக்கும் உதடுகள் இழுத்துப் பிடிக்கவில்லை தான், சத்தம் எறிந்து உன்னைச் சந்திக்கவில்லை தான், தெரிந்திருக்கவில்லை எனக்கு. அடையாளங்களே அவசியமென்று தெரிந்திருக்கவில்லை எனக்கு. மெல்லிய புன்னகையில், கண்களில் மிதந்த மனசில், கண்டு கொண்டிருப்பாய் என்று நினைத்தேன். இன்னொரு முறை வா. ம‌ன‌தை வாசிக்க‌ ம‌ன‌ம‌ற்ற‌ உன‌க்காய், முகத்தை ...
More

நிராகரிப்பு

வாசலிலேயே நிறுத்தப் படுகிறேன் நான். நீ காசு போட்டு வளர்க்கிறாய் இரண்டு நாய்களையும் ஒரு காவலாளியையும். உன் குறட்டையையும் பாதுகாக்கும் கடமை அவர்களுக்கு. சன்னல் வழிக் கசிகிறது உன் தொலைக்காட்சி ஒலி. அவ்வப்போது தொலைபேசுகிறாய். சத்தமாக சிரிக்கிறாய் ! எல்லாம் கேட்டுக் கொண்டும் கைகளைக் கட்டிக் கொண்டும் காத்திருக்கிறேன் நான். நீ வெளிவரவுமில்லை என்னை உள்ளே அனுமதிக்கவும் இல்லை. ஏமாற்ற இருளில் ஏறித் திரும்புகிறேன். கதவுகள் இல்லாமல் கட்டியிருக்கலாம் நீ உ...
More

ஆணி அடிக்கப்பட்ட திறமைகள்.

அழகிய படகொன்றை உன்னிடம் கண்டேன் நீயோ அதை கிணற்றுக்குள் மட்டுமே ஓட்டிக் கொண்டிருக்கிறாய் ! அழகிய பறவையொன்றையும் கண்டேன். நீ அதைக் கூண்டுக்குள் மட்டுமே பறக்க விடுகிறாய். அப்படியே, மீன்களையும், முயல்களையும் ஒரு சில அழகிய மயில்களையும். பட்டத்தை நூலில் கட்டவேண்டுமென்பது சரிதான் அதற்காக ஒருமுழம் நூலிலா ? எல்லைகளை அவிழ்த்து விடு திறமைகள் சட்டத்துக்குள் பாதுகாக்க அல்ல ! 0
More

பாராட்டு

  வீட்டை கண்ணாடி போல் துடைத்து, பாத்திரங்களைப் பளபளப்பாக்கி, அழுக்குத் துணிகளை அழகுத் துணிகளாக்கி வைக்கும் வேலைக்காரச் சிறுமிக்கு ஒரு பாராட்டு வழங்காத நாம் தான் அலுவலகத்தில் பாராட்டு கிடைக்கவில்லையென அலுத்துக் கொள்கிறோம்
More