பேசத் தெரிந்தால் ஜெயிக்கலாம்

காலை முதல் மாலை வரையிலான ஒரு நாள் வாழ்க்கையைக் கொஞ்சம் அலசிப் பாருங்கள். எத்தனை விவாதங்கள், எத்தனை பேரங்கள் ! எத்தனை கருத்து மோதல்கள். காலையில் காய்கறி வாங்குவதில் துவங்கி, அலுவலகத்தில் சம்பள உயர்வுக்காய் வாதிடுவது வரையில் எத்தனை விதமான உரையாடல்கள். இதில் எத்தனை சதவீதம் பேச்சுகளில் வெற்றி நமக்குக் கிடைத்திருக்கும் ? நமது வாழ்க்கையின் ஒவ்வோர் படியிலும் ஏதோ ஒரு பேரமும், விவாதமும் காத்திருக்கிறது. அப்பாவிடம் அடம்பிடிக்கும் குழந்தையும், கணவனிடம் விண்ணப்பிக்கும் மனைவியும், மனைவியிடம் சமாதானம் பேசு...
More

தனிமையை இனிமையாக்க

சிலருக்கு தனிமை என்பது வரம். எனவே தனிமையைத் தேடிப் பயணங்கள் செல்வார்கள். மலைகளின் உச்சிக்கோ. யாருமற்ற வனாந்தரத்தின் புரட்டப்படாத பக்கங்களுக்கோ. நதிகளின் பிரதேசத்துக்கோ செல்வார்கள். அந்தத் தனிமை அவர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டி அனுப்பி வைக்கும். உண்மையில் அவர்கள் தனிமையில் இருப்பதில்லை, கூட்டத்திலிருந்து தனியே பிரிந்து இயற்கையின் மடியில் ஓய்வெடுக்கின்றனர். இன்னும் சிலருக்கு தனிமை சாபம். கொஞ்ச நேரம் தனியே விட்டாலே என்ன செய்வதென்று தெரியாமல் பதட்டப்படுவார்கள். மக்கள் கூட்டத்தில் இருக்க வேண்டு...
More

3D மாயாஜாலம் எப்படி நிகழ்கிறது ?

இது 3D காலம் என்று சொல்லலாம் தப்பில்லை. அவதார் என்றொரு ஆங்கிலத் திரைப்படம் வந்தாலும் வந்தது, உலகெங்கும் சட்டென 3டி ஜூரம் பற்றிக் கொண்டது. புதிது புதிதாய் 3டி படங்கள் ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை வெளியாகிக் கொண்டிருக்கின்றன. போதாக்குறைக்கு பழைய 2D படங்களைத் தூசு தட்டி 3D யாக மாற்றும் பணிகளும் ஜகஜோராக நடந்து கொண்டிருக்கின்றன. ஆயிரம் தான் இருந்தாலும், முதன் முதலாக 3டி படம் பார்க்கும் அனுபவம் ரொம்பவே அலாதியானது? திரையிலிருந்து சட்டென நம்மை நோக்கி நீளும் ஒரு கை ஐஸ்கிரீம் தரும். அல்லது நம்மீது ஏதோ வ...
More

மன அழுத்தம் தவிர்ப்போம்

“உலகிலேயே அதிக மன அழுத்தம் இந்தியப் பெண்களுக்குத் தான் !! ”. அதிர்ச்சியாய் இருக்கிறதா ? வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் நடத்தப்பட்ட மிக விரிவான நீல்சன் ஆய்வு ஒன்று தான் இப்படிக் கூறி வெலவெலக்க வைக்கிறது ! சுமார் 87% சதவீதம் இந்தியப் பெண்கள் மன அழுத்தத்தில் உழல்கிறார்களாம் ! பெண்கள் முன்னேற்றத்தில் சீரான வளர்ச்சியையும், வெற்றிகளையும் சந்தித்துவரும் இந்தியாவில் ஏன் இந்த நிலை? இந்தியப் பெண்கள், அலுவலகங்களில் 21ம் நூற்றாண்டின் புதுமைப் பெண்களாக உலா வருகின்றனர். ஆனால் பெரும்பாலான வீடுகளிலோ கற்காலக்...
More

பயணம் போகிறீர்களா ? டிப்ஸ் இதோ !

  பயணம் ஒரு அற்புதமான அனுபவம். புது இடங்களைப் பார்ப்பது, புதிய கலாச்சாரங்களை அறிந்து கொள்வது என பயணம் உங்கள் உடலையும், உள்ளத்தையும் உற்சாகப்படுத்தும் விஷயம். நம்ம ஊரைப் பொறுத்தவரை சுற்றுலா என்றால் வெறும் கோயில் குளங்களைச் சுற்றுவதோடோ, புண்ணிய ஸ்தலங்களைத் தரிசிப்பதோடோ முடிந்து போய்விடும். அது நல்லது தான் அதையும் தாண்டிய பொழுதுபோக்கு இடங்களையும் குடும்பத்தோடோ, நண்பர்களோடோ போய் பார்த்து வாருங்கள். சுற்றுலாவினால் வரும் பயன்கள் ஏராளம். சுற்றுலாவினால் மன அழுத்தம் பெருமளவில் குறைகிறது ! மன பாரம் ...
More