தாயில்லாமல்

இப்போதும் எங்கேயோ ஒரு தாய் தன் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறாள். எப்போதும் எங்கேனும் ஒரு மகன் தன் தாயை மிதித்துக் கொண்டிருக்கிறான். எப்போதும் எங்கேயோ எழுதப்படாத வலிகளின் வரிகளால் நிரம்பிக் கொண்டிருக்கின்றன அன்னையரின் டைரிகள். எப்போதும் எங்கேனும் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கிறது ஒரு கவிதை தாய்ப்பாசத்தின் மகத்துவம் குறித்து.
More

காமம் விலகாக் காதல்

என் கவிதை தேசத்தின் கர்வக் கிரீடமே. உன் நினைவுச் சரிவுகளில் வெள்ளாட்டுக் குட்டியாய் தள்ளாடித் திரிகிறது மனது. தேவதை ஒன்றை தேவலோகம் அனுப்பியதாய் தேகங்களில் சுடுகிறது தனிமை. ஸ்பரிசங்களின் அகராதியை புரட்டிப் பார்க்க தருணங்களின் தயவின்றி உருகிக் காய்கிறது இளமை. ஏகாந்தத்தின் பள்ளத்தாக்குகளில் காதலின் புதைகுழிக்குள் ஊமையின் குரலென மூழ்கிச் சாகிறது கிழமை. உன் பிறந்த நாளில் விரல்களின் விண்ணப்பங்களை உன் மேனியின் முகவரிக்கு அனுப்பி வைக்காத அவஸ்தை மோகத்தின் முனகல்கள...
More

கோயிலும், தாவணியும்

ஆலயம் போக முரண்டு பிடித்ததில்லை. பாவாடை தாவணி சுடிதார் சேலை ஜீன்ஸ் எப்படிப் பெண்கள் ஆலயம் வந்தார்கள் என கண்கள் கணக்கு வைத்துக் கொள்ளத் தவறியதுமில்லை. அப்போதெல்லாம் ஆலயம் வருவது ஆண்டவனைத் தரிசிக்க என்பது புரியாமலேயே போய்விட்டது. மத்தவங்க மாதிரியில்லை நம்ம பையன் தவறாமல் ஆலயம் போகிறான். பதின் வயது மகனைப்பற்றி பெருமைப்படும் மனைவியிடம் என்ன தான் சொல்லிவிட முடியும் ? நான் !
More

இயேசு சொன்ன உவமைகள் 17 : திராட்சைத் தோட்ட உரிமையாளன்

மத்தேயு 20 : 1..16 “விண்ணரசைப் பின்வரும் நிகழ்ச்சிக்கு ஒப்பிடலாம்; நிலக்கிழார் ஒருவர் தம் வேலையாள்களை வேலைக்கு அமர்த்த விடியற்காலையில் வெளியே சென்றார். அவர் நாளொன்றுக்கு ஒரு தெனாரியம் கூலி என வேலையாள்களுடன் ஒத்துக்கொண்டு அவர்களைத் தம் திராட்சைத் தோட்டத்துக்கு அனுப்பினார். ஏறக்குறைய காலை ஒன்பது மணிக்கு அவர் வெளியே சென்ற பொழுது சந்தை வெளியில் வேறுசிலர் வேலையின்றி நிற்பதைக் கண்டார். அவர்களிடம், ‘நீங்களும் என் திராட்சைத் தோட்டத்துக்குப் போங்கள்; நேர்மையான கூலியை உங்களுக்குக் கொடுப்பேன்’ என்றார்....
More

கடும்புனல்

நேற்றைய தழுவல்களின் விரல்கள் தனிமையிலும் காது வருடுகின்றன. மாலை நேரம் முளைக்கும் போதில் தாபத்தின் கனவுகளும் வேகத்தைக் கூட்டுகின்றன. ஆடைகளின் பாரம் தாங்காமல் வியர்வை அவிழ்கிறது. மோக கற்பனைகளால் நிர்வாணமாகின்றன இரவுகள். போர்வைகளுக்கு வாய் முளைத்தால் புரியும் படுக்கை அறைகளின் ரகசிய மூச்சுகள். நரம்புகளுக்குள் நகரும் நரகமாய் மேனி தேய்த்து முன்னேறும் நாகங்கள். புரளல்களுக்கும் உளறல்களுக்கும் இடையே நசுங்கி வெளியேறும் இரவு. விடியலில் இரவு துடைத்து கனவு கழுவ...
More

தினத்தந்தி வாரம் 6 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

மொபைல் வைரஸ்கள் மிரட்டலாய் வடிவெடுத்திருக்க இன்னொரு காரணம் அது பரவக்கூடிய வேகம். அல்லது அது பரவலாம் என எதிர்பார்க்கப்படும் வேகம். அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 17.6 மில்லியன் அமெரிக்கர்கள் சுமார் 8.6 பில்லியன் டாலர்களை மொபைல் வைரஸ், மொபைல் ஏமாற்று அழைப்புகள் போன்றவற்றால் இழந்திருக்கிறார்கள் என்கிறது ட்ரூகாலர் நடத்திய ஆய்வு முடிவு ஒன்று. பத்து ஆப்ஸ் களில் ஒன்றில் ஏதோ ஒரு மால்வேர் இருக்கிறது என கடந்த ஆண்டு நடந்த 'சீட்டா மொபைல்' ஆய்வு ஒன்று தெரிவித்தது. அதில் அறுபது சதவீதத்துக்கும் மேலானவை...
More

தினத்தந்தி வாரம் 5 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

மொபைல் தயாரிப்பு நிறுவனங்களே இப்போதெல்லாம் பல அடுக்கு பாதுகாப்பை கொடுக்கிறார்களே என சிலர் கேட்பதுண்டு. குறிப்பாக பயோமெட்ரிக் அம்சங்களை ஸ்மார்ட் போனில் புகுத்தி, கைரேகையைக் கொண்டு போனை அன்லாக் செய்வது, முகத்தை ஸ்கேன் செய்து அன்லாக் செய்வது இப்படிப்பட்ட அம்சங்களை அவர்கள் கோடிட்டுக் காட்டுகிறார்கள். ஆனால் இத்தகைய வெளிப்படையான பாதுகாப்பு அம்சங்கள், மொபைல் தொலைந்து போகாமல் பாதுகாக்கலாமே தவிர அதற்குள் வைரஸ் நுழைவதை தடுப்பதில்லை. மொபைலுக்கு ஆன்டி வைரஸ் தேவையா என்பதைக் குறித்த சர்ச்சை வல்லுநர்களிடை...
More

தினத்தந்தி வாரம் 4 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

உங்கள் மொபைலில் வைரஸ் இருக்கிறது என்பதை எப்படி அறிந்து கொள்வது ? ஒரு எளிய வழி சொல்கிறேன். நீங்கள் பயன்படுத்தும் ஆப்ஸ்களின் பட்டியலுக்கு செட்டிங்ஸ் வழியாகச் செல்லுங்கள். ஒருவேளை நீங்கள் தரவிறக்கம் செய்யாத ஏதேனும் ஒரு ஆப்ஸ் அதில் இருந்தால் உடனே உஷாராகி விடுங்கள். அது வைரஸின் வேலையாய் இருக்கலாம். நீங்கள் ஒரு ஸ்மார்ட் போன் வாங்குகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். அதில் நீங்கள் எதையும் புதிதாக நிறுவவில்லை என்றே வைத்துக் கொள்வோம், அப்படிப்பட்ட சூழலில் கூட உங்கள் தகவல்கள் திருடப்பட வாய்ப்பு உண்டு. அது ...
More

தினத்தந்தி வாரம் 3 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

உங்களிடம் ஸ்மார்ட் போன் இருக்கிறதா ? அப்படியென்றால் நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம், உங்கள் மொபைல் போனிலுள்ள தகவல்களையெல்லாம் எப்படி சுடலாம் என எங்கோ ஒருவர் மென்பொருட்களால் சில்மிஷ வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பது தான். அவர்கள் முக்கியமாகக் குறி வைப்பது உங்கள் மொபைல் போனில் இருக்கும் நண்பர்களின் செல்போன் எண்களை. உங்கள் கணினிக்குள் வைரஸை எப்படியாவது நுழைத்து விட்டால், பின்னர் உங்கள் போனின் தகவல்களெல்லாம் அவர்கள் கைக்குப் போய்விடும். நீங்கள் அனுப்பாமலேயே நண்பர்களுக்கு...
More

தினத்தந்தி வாரம் 2 : ஸ்மார்ட்போன் விஷயத்தில் ஸ்மார்ட்டா இருங்க

கம்ப்யூட்டர் வைரஸ் ! எனும் வார்த்தை முதலில் அறிமுகமான காலத்தில் எல்லோரும் பயந்தார்கள். அது கணினியின் கீபோர்ட் வழியாகவும், மானிட்டர் வழியாகவும் மக்களைத் தாக்கும் என நினைத்தார்கள். அதனால் கிளவுஸ் போட்டுக்கொண்டு கீபோர்டைப் பயன்படுத்தியவர்கள் ஏராளம். ஃப்ளாப்பி டிஸ்கை ஏசி காற்றில் காட்டி விட்டு கணினியில் போடுங்கள் என அறிவுறுத்தியவர்கள் பலர். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மக்களுக்கு கம்ப்யூட்டர் வைரஸ் என்பது மென்பொருள் என்பதும், அது பன்றிக் காய்ச்சல் போல கண், காது, மூக்கு, கைவிரல் வழியே பரவாது என்றும்...
More