மக்கா நம்ம சாள மீனு….

சாளை மீன் ஆங்கிலத்தில் சார்டைன் என அழைக்கப்படும் சாளை மீன் அற்புதமான மீன் உணவு. நிஜமாகத் தான் சொல்கிறேன். மற்ற மீன்களில் இருப்பதை விட பல சிறப்பம்சங்கள் இந்த சாளை மீனில் உண்டு. கேரளாவிலும், குமரியிலும் சாளை என்று அழைக்கப்படும் இந்த மீனை மத்தி என மற்ற இடங்களில் அழைக்கிறார்கள். ஆனால் அதிலும் இரண்டு வகை உண்டு. நான் சொல்வது அளவில் சின்னதாக இருக்கும் சாளை மீன் பற்றி ! தனிப்பட்ட முறையில் என்னுடைய ஃபேவரிட் மீன் எது என கேட்டால் சட்டென சாளை மீன் என்று சொல்வேன். அதிலும் பொரித்த சாளை மீன் எனது சூப...
More

வஞ்சிரம் மீன் : சாப்பிடும் முன்னாடி படிங்க…

பெரும்பாலான உணவகங்களிலும், வீடுகளிலும் வஞ்சிரம் மீனுக்கு ஒரு தனி இடம் உண்டு. விளம்பரங்களில் நேர்த்தியாகப் பொரித்து வைக்கப்பட்டிருக்கும் நீள் வட்ட மீன் துண்டைப் பார்த்திருப்பீர்களே. பெரும்பாலும் அது வஞ்சிரமாகத் தான் இருக்கும். அலாதியான சுவை. அதிலும் ஃப்ரெஷ் மீனில் இருக்கும் சுவை ரொம்பவே மெய்மறக்க வைக்கும். கேரளாவிலும், குமரி மாவட்டத்திலும் இதை நெய்மீன் என்று சொல்கிறார்கள். குழம்பு வைத்தாலும், பொரித்தாலும் சூப்பர் சுவையுடன் இருக்கும் இந்த மீன் தமிழகம் முழுவதுமே மிகவும் விரும்பிச் சாப்பிடும்...
More

நெத்திலி மீன்…ம்ம்ம்…

  மீன் வகைகளிலே ஒரு ஸ்பெஷல் மீன் நெத்திலி மீன் தான். கருவாடாகவும் இது மிக அற்புதமான சுவையைத் தரும். பச்சை மிளகாய் மிதக்கும் நெத்திலிக் கருவாட்டுக் குழம்பு சுவை அறிந்தவர்களுக்கே தெரியும். மாங்காய், முருங்கைக்காய் என இந்த குழம்பு இடத்துக்குத் தக்கபடி பல்வேறு முகம் காட்டும் என்பது சுவாரஸ்யமான அம்சம். இந்த நெத்திலி மீன் சுவையில் மட்டுமல்லாமல் பயன்களிலும் அசரடிக்கக் கூடிய விஷயங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பது தான் சிறப்பம்சம். மேலை நாடுகளில் இந்த மீனைக் கொண்டு சால்ட், பிஸ்ஸா, பாஸ்தா ...
More

ஆக்டபஸ் சாப்பிட்டிருக்கீங்களா ?

  ஆக்டபஸ் என்றதும் ஆஜானுபாகுவான தலையுடன் மலைப்பாம்பு போன்று நீண்ட ஒரு கொத்துக் கைகளுடன் அலையும் உருவம் தானே நினைவுக்கு வருகிறது ? இதையெல்லாமா சாப்பிடுவாங்க என மனசுக்குள் ஒரு சின்ன கேள்வியும் எழும் இல்லையா ? சாப்பிடலாம். ஆனால் அந்த பெரிய சைஸ் ஆக்டபஸை அல்ல, குட்டி ஆக்டபஸை. பிரபலமான உணவு வகையான சுசி, சூப்கள், பாஸ்தா போன்ற பலவற்றில் ஆக்டபஸின் அம்சம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஆக்டபஸ் எல்லாம் வேண்டாம் என ஒதுக்குவதற்கு முன் அதிலுள்ள விஷயங்களை ஒரு தடவை பார்த்து விடுவோமே. ஆக்டப...
More

ஆற்று மீன் ஆரோக்கியமானதா ?

மீன் என்றவுடனே நமது நினைவுக்குச் சட்டென வருவது கடல் மீன் தான் இல்லையா ? . ஆனால் ஆற்று மீன்கள் மிகப்பெரிய வர்த்தக எல்லையைக் கொண்டிருக்கின்றன. ஆற்று மீனை ஒரு கை பார்ப்பதற்கென்றே மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் உண்டு. இவற்றை ஆங்கிலத்தில் “ஃப்ரஷ் வாட்டர் ஃபிஷ்” என்பார்கள். நன்னீர் மீன்கள் அல்லது நல்ல தண்ணீர் மீன்கள் என்று சொல்லலாம். நல்ல தண்ணீரில் ஏதோ சில வகை மீன்கள் தான் இருக்கும் என நினைத்தால் அந்த நினைப்பை அப்படியே கடலில் போடுங்கள். உலகில் உள்ள மீன் வகைகளில் 41.21 சதவீதம் வகைகள் நல்ல தண்ணீரிலும்...
More