மழலை தத்துவம் : கவியரங்கக் கவிதை

இறை வணக்கம் ஃ துயரங்களைத் தாங்கும் வலு தந்து, வலுவாக்க எனக்குத் துயரங்களையும் தந்து, தொடர்ந்து நடக்க தோளும் தந்து என்னை ஆளும் இறைவனுக்கு என் முதல் வணக்கம். ஃ தமிழ் வணக்கம் ஃ என் செய்வேன் நான் நீ இல்லையேல் தமிழே ! இதயக் கரை உடைக்கும் ஆனந்த அணைகளையும், இமையின் கரை உடைக்கும் கண்ணீர் அணைகளையும் இறக்கி வைத்து இளைப்பாற நீ தானே அருள்கிறாய் எனக்கு வார்த்தை வரம். ஃ தலைவர் வணக்கம் ஃ முயலாய்ப் புகுந்து சபையில் புயலாய் எழுந்து எங்கும் மயிலாய் கவிதை விரித்து...
More

கிராமமும், நகரமும்

எப்போதேனும் சண்டை போடும் நகரத்துத் தம்பதியருக்கு விவாகரத்து விருப்பமாயிருக்கிறது. எப்போதுமே சண்டை போரும் கிராமத்துக் குடும்பத்துக்கு சேர்ந்து வாழ்தலே சந்தோசமாய் இருக்கிறது
More

மழலை இனிமை

என் கார் கண்ணாடியில் கிறுக்கி விட்டுச் செல்லும் விரல்களை எரிச்சலில் திட்டிக் கொண்டிருந்தேன் என் மகளின் அழகிய விரல்கள் வரையத் துவங்கும் வரை
More

பொதுவுடமை

கிடைப்பதைக் கரைந்தழைத்து பகிர்ந்தளித்து உண்ணும் காகம் எரியும் வீட்டிலும் உருவும் நிலை பார்க்கும் மனிதன். பார்ப்பதை ஊர்ந்து கொண்டே ஊருக்குரைத்து உண்ணும் எறும்பு சுனாமிப் பிணங்களிலும் சங்கிலி பறிக்கும் மனிதன். சுயநலச் சுருக்குப் பைகள் இடையில் கட்டிக் கொள்ளாமல் விலங்குகள். சுருக்குப் பைகளுக்கு இடையே கூடு கட்டிக் குடியிருக்கும் மனிதன் சுருங்கக் கூறின், ஐந்தறிவுகளுக்கு எல்லாமே பொதுவுடமை ஆறறிவுகளுக்கு பொதுவுடமையும் தனியுடமை
More

பார்வை

பார்வை திருமணம் நிகழ்ந்தேறியது. நண்பர்கள் சொன்னார்கள் பந்திச் சாப்பாடு பிரமாதம், நண்பிகள் சொன்னார்கள் பெண்ணின் நகைகள் பிரமாதம் வந்தவர்கள் சொன்னார்கள் வளைகுடாக் கடல்போல அலங்காரம் பிரமாதம், சென்றவர்கள் சொன்னார்கள் விசால மண்டபம் வசதிகள் பிரமாதம். இருக்கை துடைத்து எழுந்தவர்கள் சொன்னார்கள் கூட்டம் பிரமாதம். பிரமாதங்களின் பிடியில் முக்கியமற்றுப் போன முக்கியங்களாக பூச்செண்டுடன் புன்னகைத்தனர் மணமக்கள்
More

பழங்கள்

பழங்கள் பறவைகள் கொத்திப் போட்ட பழம் மாம்பழம் கனிந்ததை உறுதி செய்கிறது அணில் கடித்த பறங்கிக் காய் முந்திரி முற்றியதை ஊர்ஜிதப்படுத்துகிறது. நண்டுகளின் படையெடுப்பு அறுவடைக் காலத்தை அறிவிக்கிறது. ஆய்ந்தறிவு இருப்பதாய் ஆறறிவு சொல்லிக் கொள்கிறது. ஐந்தறிவு இருப்பதோ சொல்லாமல் செய்து செல்கிறது
More

பழக்கம்

பழக்கம்   புதிதாய் வாங்கிய வீடு சாக்கடையின் நாற்றத்தின் சுற்றளவுக்குள் அமைந்து போயிற்று. விக்கிரமாதித்ய வேதாளமாய் காதுகளேறும் கொசுக்களின் ரீங்காரம் இலவச இணைப்பாய். செத்து போன நாய்களுக்கும், இத்யாதிகளுக்கும் அந்த சாக்கடையே சுவிஸ் வங்கி. இந்த வீட்டில் எப்படி வாழ்வது என்ற அங்கலாய்ப்புகள் ஒரு வாரத்தில் நின்று விட்டன. இப்போதெல்லாம் நாற்றமில்லை. வீட்டிற்கு வருபவர்கள் தவறாமல் கேட்கிறார்கள் இந்த நாற்றத்தில் எப்படி இருக்கிறாய் ? என் வாய் ஆச்சரியமாய் கேட்கி...
More

மண் புழுக்கள்

மண் புழுக்கள் மெளனம் தின்னும் மண்புழுக்கள் கொல்லைப்புற தண்ணீர்ப் பானையின் அடியில் தவம் கிடக்கும். வடகிழக்கு மூலையில் வாழை மர அடியிலும் அரையடி ஆழத்தில் உயிர் வேர்களாய் இவை உலவித் திரியும். உயிரை உயிரால் பிடிப்பதற்கு தூண்டில் தூக்கு மேடையேறி மீன்களுக்கு உணவாகி உணவுக்கு மீன்களைத் தரும். மண் புழுக்கள் என் கிராமத்து மண்ணின் அடையாளம் நகர்ப்புற புழுதி வீட்டின் இரண்டடி நீள முற்றத்தில் காய்ந்து போய் தலை சாய்க்கின்றன தாவரங்கள். தகவல் அறிந்தவர்கள் சொல்கிறார்கள் மண்...
More

எறும்புகள்

எறும்புகள்   வரிசை பிறழாமல் நகரும் எறும்புகளின் வாசனைப் பாதையை ஆள்காட்டி விரல்கள் நறுக்கிச் சிரிக்கும். வரிசை தெரியாமல் முட்டி மோதி தெறிக்கும் எறும்புகளின் பதட்டக் கணங்களை வேடிக்கை விழிகள் ரசிக்கும். என் சிறுவயது விளையாட்டு இன்று என் மகளுக்கு. எனக்கு முன் என் தந்தைக்கும் இருந்திருக்கலாம். தலைமுறை தாண்டியும் மாறவேயில்லை எறும்புகளுக்கு வரிசைப் பிரியமும் மனிதர்களுக்கு வரிசை எரிச்சலும்.
More

கண்ணாடிகள்

கண்ணாடிகள்     வசீகரிக்கும் கண்ணாடிகள் கடைகளின் பிரம்மாஸ்திரங்கள். புடவைக் கடையின் முடிவிலாப் புரட்டல்களுக்கும், நகைக்கடையின் நில்லாத துழாவல்களுக்கும் கர்த்தாக்களாகின்றன. இளைஞர்களின் தன்னம்பிக்கையை நான்கு முழம் நீட்டிப்பதற்கு சலூண் கடைக் கண்ணாடிகளே காரணமாகின்றன. பிம்பங்களைப் பொறுக்கிக் கொள்ளாமல் கடையை விட்டு கடந்து செல்கையில் பளீரென சிரிக்கின்றன சாதாரண புடவைகளும் வசீகரிக்காத நிஜங்களும்.
More